news

News November 29, 2024

குளிர்காலத்தில் இளநீர் அவசியம் குடிங்க

image

குளிர் காலத்தில் இளநீர் குடிப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இளநீர் ஒரு ஆரோக்கியமான பானமாகும். அதில் உள்ள வைட்டமின் சி குளிர்காலங்களில் வைரஸ் மற்றும் பாக்டீரியாவிடம் இருந்து உடலை பாதுகாக்க பெரிதும் உதவுகிறது. குளிர் காலத்தில் பொதுவாகவே தாக்கம் இல்லாமல் இருக்கும், இதனால் நீரிழப்பு ஏற்படலாம். இளநீர் குடிப்பதால் இப்பிரச்னையில் இருந்து தப்பிக்கலாம்.

News November 29, 2024

உடல் எடையைக் குறைக்கும் கொத்தமல்லி விதை டீ!

image

கொத்தமல்லி விதை டீ உடல் எடையைக் குறைக்க உதவும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். செரிமான நொதிகளின் உற்பத்தியைத் தூண்டி, அஜீரண பிரச்னைகளைச் சரி செய்யும் எனவும், உடலில் உள்ள நச்சுக்களை அகற்றும் என்றும் கூறுகின்றனர். ஒரு கிளாஸ் நீரில் 2 ஸ்பூன் கொத்தமல்லி விதைகளை சேர்த்து, பாதியாக வற்றும் வரை கொதிக்க விடவும். இதை வடிகட்டினால் கொத்தமல்லி விதை டீ ரெடி.

News November 29, 2024

மத சுதந்திரம் பாதுகாக்கப்படணும்: ஷேக் ஹசீனா

image

வங்கதேசத்தில் இந்து மதத்தலைவர் கைது செய்யப்பட்டதற்கு அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கண்டனம் தெரிவித்துள்ளார். வங்கதேச கொடியை அவமதித்ததாகக் கூறி சம்மிலிதா சனாதனி ஜோதே என்ற இந்து அமைப்பின் தலைவர் சின்மாய் கிருஷ்ண தாஸ் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து பேசிய ஹசீனா, அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றார். மேலும், மத சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

News November 29, 2024

இந்திய அணி த்ரில் வெற்றி

image

ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடந்துவரும் 10ஆவது ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது. 2ஆவது லீக் ஆட்டத்தில் ஜப்பானை எதிர்கொண்ட இந்திய அணி 3-2 என்ற கோல் கணக்கில் வாகை சூடியது. நாளை நடைபெறும் அடுத்த லீக் போட்டியில் இந்திய அணி சீன தைபே அணியை எதிர்கொள்கிறது. டிச. 4 வரை நடைபெறும் இந்த போட்டிகளில் 10 அணிகள் இரு பிரிவுகளாக மோதுகின்றன.

News November 29, 2024

நவ. 29: வரலாற்றில் இன்று!

image

*1830 – போலந்தில் உருசியாவின் ஆட்சிக்கு எதிராக புரட்சி வெடித்தது. *1890 – ஜப்பானில் முதலாவது நாடாளுமன்றம் கூடியது. *1944 – இரண்டாம் உலகப்போர்: அல்பேனியா விடுவிக்கப்பட்டது. *1989 – இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி ராஜினாமா. *2004 – ஆசியான் நாடுகள் சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்தன. *2008 – உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை மேரி கோம் வெற்றி.

News November 29, 2024

களை கட்டும் ‘பிளாக் பிரைடே’ சேல்!

image

அமேசான், பிளிப்கார்ட், ரிலையன்ஸ் டிஜிட்டல், குரோமா, டாடா கிளிக் உள்ளிட்ட ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் ‘பிளாக் பிரைடே’ என்ற பெயரில் சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளன. இதில் பல சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. ஸ்மார்ட்போன், டிவி, லேப்டாப் உள்ளிட்ட மின்னனு சாதன பொருட்களை 80% சலுகையுடன் வாங்க முடியும். வங்கி டெபிட் கார்டு, கிரெடிட் கார்டுகளுக்கு சிறப்பு தள்ளுபடியும் உண்டு.

News November 29, 2024

‘புஷ்பா 2’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ்

image

‘புஷ்பா 2’ படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘புஷ்பா’ திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. அதன் தொடர்ச்சியாக 2ஆம் பாகம் பெரும் எதிர்பார்ப்புகளுடன் வரும் டிச. 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் ‘கிஸ்ஸிக்’ பாடல் வெளியாகி வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

News November 29, 2024

மார்டின் லூதர் கிங்கின் பொன்மொழிகள்

image

*கெட்டவர்களின் கொடுமைகளை விட நல்லவர்களின் அமைதி மிகவும் ஆபத்தானது. *நாங்கள் அனைவரும் வெவ்வேறு கப்பல்களில் வந்திருக்கலாம், ஆனால் நாங்கள் இப்போது ஒரே படகில் இருக்கிறோம். *சிலரின் வன்முறைகள் அல்ல, பலரின் மெளனங்களே என்னைப் பயமுறுத்துகின்றன. *சரியானதைச் செய்வதற்கு, எப்பொழுதுமே சரியான நேரமாகும். *சரியானது எது என்பதை அறிந்தும் அதைச் செய்யாமல் இருப்பதை விட துன்பகரமானது எதுவும் இல்லை.

News November 29, 2024

இந்தியா முழுவதும் 5.16 கோடி வழக்குகள் நிலுவை

image

இந்தியா முழுவதும் மாவட்ட நீதிமன்றங்களில் 4.53 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளதாக மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளார். இதில் சிவில் வழக்குகள் 1.10 கோடி, கிரிமினல் வழக்குகள் 3.43 கோடி இருப்பதாக நாடாளுமன்றத்தில் அவர் எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளார். நாட்டில் அனைத்து நீதிமன்றங்களிலும் மொத்தமாக 5.16 கோடி வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

News November 29, 2024

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶அதிகாரம்: நடுவு நிலைமை ▶குறள் எண்: 113 ▶குறள்: நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை அன்றே யொழிய விடல். ▶பொருள்: தீமை பயக்காமல் நன்மையே தருவதானாலும் நடுவு நி‌லைமை தவறி உண்டாகும் ஆக்கத்தை அப்போதே கைவிட வேண்டும்.

error: Content is protected !!