News November 29, 2024
களை கட்டும் ‘பிளாக் பிரைடே’ சேல்!

அமேசான், பிளிப்கார்ட், ரிலையன்ஸ் டிஜிட்டல், குரோமா, டாடா கிளிக் உள்ளிட்ட ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் ‘பிளாக் பிரைடே’ என்ற பெயரில் சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளன. இதில் பல சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. ஸ்மார்ட்போன், டிவி, லேப்டாப் உள்ளிட்ட மின்னனு சாதன பொருட்களை 80% சலுகையுடன் வாங்க முடியும். வங்கி டெபிட் கார்டு, கிரெடிட் கார்டுகளுக்கு சிறப்பு தள்ளுபடியும் உண்டு.
Similar News
News November 12, 2025
படிப்பில் பிள்ளைகள் கெட்டிக்காரராக விளங்க..

புத்தி காரகன் புதன் பகவான் ஆவார். புதன் என்றால் பச்சை. புதன் கிழமையில், அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்கு சென்று, துளசியை பெருமாளுக்கு சாத்த வேண்டும். தொடர்ந்து, நவகிரக சன்னதியில் உள்ள, புதன் பகவானுக்கு இரண்டு விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும். இவ்வழிபாட்டினை தொடர்ந்து செய்வதால், பிள்ளைகள் நிச்சயம் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள்.
News November 12, 2025
பென்குயின் காஜல் அகர்வால் PHOTOS

தமிழ்-தெலுங்கு சினிமாக்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் காஜல் அகர்வால். இவரது கொய்யும் கண்கள் மற்றும் கலக்கலான ஸ்கிரீன்‑பிரெசென்ஸுக்கு பெரும் ரசிகர் கூட்டம் இருக்கிறது. இவர், இன்ஸ்டாவில் ஆனந்தமாய் ஆடும் போட்டோக்களை பதிவிட்டுள்ளார். இது ரசிகர்கள் மனதில் மெல்லிய பூகம்பத்தை ஏற்படுத்தும் புகைப்படங்களாக உள்ளன. உங்களுக்கும், போட்டோஸ் பிடிச்சிருந்தா ஒரு லைக் போடுங்க.
News November 12, 2025
டெல்லி சம்பவம்: 18 நாள்கள்.. இது மகாபாரத போர்!

டெல்லி சம்பவத்திற்கு இந்தியா பழிதீர்க்குமா என விவாதங்கள் நடந்து வரும் நிலையில், நெட்டிசன் ஒருவரின் பதிவு வைரலாகி வருகிறது. புல்வாமா தாக்குதலுக்கு 12 நாள்களிலும், பஹல்காம் தாக்குதலுக்கு 15 நாள்களிலும் பதிலடி கொடுக்கப்பட்டது. அப்படியானால் டெல்லி சம்பவத்திற்கு எத்தனை நாள் எடுத்து கொள்ளப்படும் என அவர் கேட்க, மகாபாரத போர் போன்று 18 நாள்கள் ஆகும் என மற்றொரு நெட்டிசன் பதிலளித்துள்ளார்.


