news

News November 29, 2024

1 நாள் கூட நீடிக்காத போர் நிறுத்தம்..!

image

போர் நிறுத்தத்தை அறிவித்த மறுநாளே தெற்கு லெபனானில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. ஹிஸ்புல்லா தீவிரவாதிகளின் நடமாட்டத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹிஸ்புல்லா மீறியதாகவும் இஸ்ரேல் குற்றஞ்சாட்டியுள்ளது. லெபனானில் 1000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்ட நிலையில், போர்நிறுத்த அறிவிப்பு மக்கள் மனதில் நிம்மதியை வரச் செய்தது. ஆனால் அந்த நிம்மதி நீடிக்கவில்லை.

News November 29, 2024

பிரான்ஸில் தலைமறைவாக வாழும் புதின் மகள்?

image

ரஷ்யா அதிபர் புதினின் மகள் அடையாளத்தை மறைத்துக்கொண்டு, பிரான்ஸின் பாரிஸ் நகரில் வாழ்ந்து வருவதாக உக்ரைன் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. Elizaveta Krivonogikh (21) என்னும் இவர், உக்ரைனுக்கு போருக்கு முன்னர் ரஷ்யா சமூகவலை தளங்களில் ஆக்டிவாக இருந்து, பிறகு தலைமறைவாகிவிட்டார். பெயரை Luiza Rozova என மாற்றி, புதினுக்கு நெருக்கமாக இருந்த Oleg Rudnovன் உறவினராக தற்போது தன்னை அடையாளப்படுத்தி கொண்டுள்ளார்.

News November 29, 2024

பொது அறிவு: கேள்விகளுக்கான பதில்கள்

image

1) தங்கப் போர்வை நிலம் என அழைக்கப்படும் நாடு – ஆஸ்திரேலியா 2) கண்ணீர் சுரப்பியின் பெயர் – லாக்ரிமல் 3) இந்தியாவின் முதல் பெண் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் – தஞ்சை ச. கனகா 4) தமிழ்நாட்டின் மோஸ் எனப் போற்றப்படும் எழுத்தாளர் – கல்கி 5) IATA – International Air Transport Association 6) நீருக்கடியில் பேசும் குரலைக் கேட்ட உதவும் கருவி – Hydrophone 7) வியட்நாமின் தேசிய மலர் – தாமரை.

News November 29, 2024

5 மாவட்டங்களில் கனமழை பெய்யும்

image

வங்கக் கடலில் இன்னும் சில மணி நேரங்களில் ‘ஃபெங்கல்’ புயல் உருவாக இருக்கிறது. இதன் காரணமாக செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய மாவட்டங்களில் அதி கனமழையும் சென்னை, திருவள்ளூர், காஞ்சி, அரியலூர், தஞ்சை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. புதுச்சேரியில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

News November 29, 2024

அப்டேட்களை அள்ளித் தரும் ‘கேம் சேஞ்சர்’

image

‘கேம் சேஞ்சர்’ படத்தின் 3ஆவது பாடல் நேற்று வெளியான நிலையில், 4ஆவது பாடல் டிசம்பர் 2ஆவது வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், படத்தின் ட்ரெய்லர் ஜனவரி முதல் வாரத்தில் ரிலீசாகும் எனவும் கூறப்படுகிறது. மேலும், ஃப்ளாஸ்பேக்கில் ராம் சரண் – அஞ்சலி இடையே ஒரு மெலடி பாட்டு இருப்பதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொங்கலை முன்னிட்டு ஜனவரி 10ஆம் தேதி படம் வெளியாக உள்ளது.

News November 29, 2024

ரூ.4.09 லட்சம் கோடி கடன் வைத்துள்ள செல் நிறுவனங்கள்

image

மத்திய அரசிடம் ரூ.4.09 லட்சம் கோடியை செல் நிறுவனங்கள் கடன் வைத்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு மக்களவையில் மத்திய அரசு பதில் அளித்துள்ளது. அதில் VI அதிகபட்சமாக ரூ.2.07 லட்சம் கோடி, ஏர்டெல் ரூ.1.25 லட்சம் கோடி, ஜியோ ரூ.52,740 கோடி கடன் வைத்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. BSNL மிகவும் குறைவாக ரூ.28,092 கோடி கடன் வைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 29, 2024

மணிப்பூரில் வன்முறை ஓய்ந்ததா?

image

மணிப்பூரில் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் இன்று திறக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் மெய்தி இனத்தைச் சேர்ந்த 6 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அம்மாநிலத்தில் மீண்டும் வன்முறை வெடித்தது. முதல்வர், அமைச்சர்கள் வீடுகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து கடந்த 16ஆம் தேதி அங்கு பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. மேலும், இணைய சேவையும் துண்டிக்கப்பட்டது.

News November 29, 2024

கடவுளே அஜித்தே..டீசர் ரெக்கார்ட்ஸ் கவனிச்சீங்களா!

image

எப்போ வரும், வருமா? வராதா? என சசந்தேகத்திற்கு விடை கொடுத்து, விடாமுயற்சி படம் பொங்கலுக்கு வருகிறது. படத்தின் டீசர் சத்தமே இல்லாமல் வெளியாகியுள்ளது. நடுராத்திரி வந்த டீசர், தொடர்ந்து சமூகவலை தளங்களில் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. இந்த டீசர் தற்போது வரை 40 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது. உங்களுக்கு விடாமுயற்சி டீசர் எப்படி இருந்துச்சு. கமெண்ட்ஸ்ல சொல்லுங்க…

News November 29, 2024

சடலத்தை கூட விட்டுவைக்காத வெறியன்: சிக்கியது எப்படி?

image

மாற்றுத் திறனாளி ரயில் சைக்கோ ராகுல், நவ.14ஆம் தேதி குஜராத்தில் 19 வயது பெண்ணை பலாத்காரம் செய்து கொன்றுள்ளான். அங்கேயே தனது பேக்கை வைத்துவிட்டு ரயில்வே ஸ்டேசன் சென்று ஃப்ரூட் சாலட் சாப்பிட்டுள்ளான். பின் மீண்டும் அங்கு வந்து சடலத்துடன் உடலுறவு வைத்துள்ளான். மக்கள் நடமாட்டம் அதிகமாகவே, பேக்கை விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளான். அந்த பேக்கை வைத்து CCTV உதவியுடன் போலீசார் அவனை கைது செய்துள்ளனர்.

News November 29, 2024

OPS மீது விசாரணை நடத்த தடை

image

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு மீது மறுவிசாரணை நடத்த இடைக்கால தடை விதித்தது உச்சநீதிமன்றம். 2001 முதல் 2006 வரையிலான ஜெயலலிதா ஆட்சியில் OPS அதிக சொத்து சேர்த்ததாக நடைபெற்ற வழக்கை திரும்பப்பெற சிவகங்கை நீதிமன்றம் அனுமதித்தது. அந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு OPSக்கு சற்று ஆறுதலளித்துள்ளது.

error: Content is protected !!