India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவள்ளூர், மயிலாடுதுறை ஆகிய 8 மாவட்டங்களிலும் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் சிறப்பு வகுப்பு நடத்தக்கூடாது என்றும், புயல் தீவிரமாக இருக்கும் என்பதால் மாணவர்கள் வீட்டில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது வரை 5 மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களை தொடர்ந்து, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
“ஃபெஞ்சல்” புயல் கரையைக் கடக்கும்போது 90 கி.மீ., வேகத்தில் சூறைக்காற்று வீசும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதனையடுத்து, நாளை பிற்பகலில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என கடலூர் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையில் செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களுக்கு மரம் அறுக்கும் கருவி, ரப்பர் படகு உள்ளிட்ட வெள்ள மீட்புக் கருவிகளுடன் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் விரைந்துள்ளனர்.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, நடப்பு நிதியாண்டின் 2ஆவது காலாண்டில் சரிவை சந்தித்துள்ளது. தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவல்படி, ஜூலை-செப்டம்பர் காலாண்டில் நாட்டின் GDP கடந்த 7 காலாண்டுகளில் இல்லாத அளவு 5.4%ஆக குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் உற்பத்தி துறையில் உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளதால், GDP வளர்ச்சி குறைந்துள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
சிங்கப்பூரில் நடைபெற்று வரும் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் 4வது சுற்று போட்டியை தமிழக வீரர் குகேஷ் டிரா செய்துள்ளார். அவர் நடப்பு சாம்பியனான சீன வீரர் டிங் லிரென் உடன் டிரா செய்தார். மொத்தம் 14 போட்டிகளில் முதலில் 7.5 புள்ளிகளை எடுப்பவர்கள் உலக சாம்பியன் பட்டம் வெல்வார். தற்போது 4 சுற்று போட்டிகளின் முடிவில் இருவரும் தலா 2 புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளனர்.
நாளை 7 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையால், கடலூரை தொடர்ந்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்த அனுமதியில்லை. மீறி நடத்தினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதால் தொடர் குற்றச்செயல்கள் நடைபெறுவதாக ஜி.கே.வாசன் விமர்சித்துள்ளார். குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை இரும்புக்கரம் கொண்டு தமிழக அரசு அடக்க வேண்டும் என்ற அவர், அரசு சட்டம் ஒழுங்கில் மேலும் கூடுதல் கவனம் செலுத்த வலியுறுத்தியுள்ளார். டாஸ்மாக், போதை கலாசாரத்தைக் கட்டுப்படுத்தாததே குற்றச் சம்பவங்களுக்கு காரணமாக அமைவதாகவும் அவர் தெரிவித்தார்.
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட உள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது. டெல்லியில் காங்கிரஸ் மீண்டும் ஒரு சக்தியாக மாற வேண்டிய தேவை உள்ளதாகவும், அதை வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் நிறைவேற்றும் எனவும் அம்மாநில காங்கிரஸ் தலைவர் தேவேந்தர் யாதவ் தெரிவித்துள்ளார். 70 தொகுதிகளை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ளது.
தனது திருமண ஆல்பத்தில், ‘நானும் ரவுடிதான்’ படத்தில் இடம்பெற்ற 24 நொடி சீனை, தனுஷின் அனுமதியில்லாமல் நயன்தாரா பயன்படுத்தினார். இதையடுத்து, அவரிடம் ₹ 10 கோடி கேட்டு தனுஷ் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்நிலையில், நயன்தாரா தனது இன்ஸ்டா பக்கத்தில், பொய்களால் ஒருவரின் வாழ்க்கையை நீங்கள் அழித்தால், அதை கடனாக எடுத்துக் கொண்டு, கர்மா உங்களுக்கு வட்டியுடன் திருப்பித் தரும்” எனப் பதிவிட்டுள்ளார்.
மணிக்கு 13 கி.மீ., வேகத்தில் நகர்ந்து வரும் “ஃபெஞ்சல்” புயல் நாளை பிற்பகலில் மாமல்லபுரம்-காரைக்கால் இடையே கரையை கடக்கும் என IMD தெரிவித்துள்ளது. புயல் கரையைக் கடக்கும்போது சென்னை, மயிலாடுதுறை, விழுப்புரம் மாவட்டங்களில் 90 கி.மீ., வேகத்தில் காற்று வீசும். விழுப்புரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, டெல்டா மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு அதி கனமழை பெய்யக்கூடும் எச்சரித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.