news

News November 29, 2024

பொதுமக்களுக்கு… EB கொடுத்த அட்வைஸ்

image

*மின்கம்பத்தின் மீது கொடி கயிறு கட்டி துணி காய வைக்கும் செயலை தவிர்க்க வேண்டும். குளியலறை, கழிப்பறை ஆகிய ஈரமான இடங்களில் சுவிட்சுகளை பொருத்த வேண்டாம். * மின் கம்பத்திலோ, அவற்றைத் தாங்கும் கம்பிகளிலோ கால்நடைகளை கட்ட வேண்டாம். * மின்கம்பங்களை பந்தல்களாக பயன்படுத்தக் கூடாது. * மின்மாற்றிகள், மின்கம்பிகள், மின்பகிர்வுப் பெட்டிகள், ஸ்டே ஒயர்கள் ஆகியவற்றின் அருகே செல்ல வேண்டாம்.

News November 29, 2024

அறுந்துவிழுந்த மின்கம்பி அருகில் போகாதீங்க

image

மழை, புயல் காற்றால் அறுந்து விழுந்த மேல்நிலை மின்சார கம்பி அருகில் செல்லக் கூடாது. இதுகுறித்து, மின்வாரிய அலுவலகத்துக்கு உடனடியாக தகவல் கொடுக்க வேண்டும். *டிவி ஆன்டனா, ஸ்டே ஒயர், கேபிள் டிவி ஒயர்களை வீட்டின் அருகே செல்லும் மேல்நிலை மின்கம்பிகளுக்கு அருகில் கட்ட வேண்டாம். *வீட்டுக்கு சரியான நில இணைப்பு (எர்த் பைப்) போட்டு அதை குழந்தைகள், விலங்குகள் தொடாத வகையில் அமைத்து சரியாக பராமரிக்க வேண்டும்.

News November 29, 2024

ஜெய்ஸ்வாலை புகழ்ந்த மைக்கேல் வாகன்

image

உலகின் மிகவும் சிறந்த இளம் வீரர் ஜெய்ஸ்வால் என இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறியுள்ளார். ஆஸி. அணிக்கு எதிராக ஜெய்ஸ்வால் சிறப்பாக விளையாடி வருவதாகக் குறிப்பிட்ட அவர், ஆஸி. பவுலர்கள் அவருக்கு எதிராக திணறி வருவதாகவும் குறை கூறினார். பவுன்சர் பந்துகளை வீசி பவுலர்கள் அவரை திணற செய்திருக்க வேண்டும் எனவும், அதை முதல் டெஸ்டில் ஆஸி.பவுலர்கள் செய்ய தவறிவிட்டனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

News November 29, 2024

2,533 JOB.. ஜனவரியில் தேர்வு

image

தமிழகத்தில் 2,533 அரசு மருத்துவர் காலிப்பணியிடங்களுக்கான தேர்வு ஜனவரி 5ஆம் தேதி நடைபெறும் என அமைச்சர் மா.சு அறிவித்துள்ளார். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 428 முதுநிலை பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது; 2,140 செவிலியர்களுக்கு டிச.2ஆம் தேதி பணி ஆணை வழங்கப்பட உள்ளது. 1,200 தொகுப்பு ஊதிய செவிலியர்கள் நிரந்தர செவிலியர்களாக பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்றும் தகவல் தெரிவித்துள்ளார்.

News November 29, 2024

ஃபெஞ்சல் புயல்: ALERT மெசேஜ் வந்து விட்டதா மக்களே

image

பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்கும்படி தமிழக அரசு, செல்போன் எண்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி எச்சரித்துள்ளது. நாளை பிற்பகல் ஃபெஞ்சல் புயல் கரையை கடக்கும்போது, 70 -90 கி.மீ. வேக காற்றுடன் கனமழை – அதி கனமழை பெய்யக்கூடும். எனவே, பொதுமக்கள் வீட்டில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அலர்ட் கொடுத்துள்ளது. இதனால், அத்தியாவசிய பொருட்களை வாங்கி, மக்கள் இருப்பில் வைத்துக் கொள்வது நல்லது.

News November 29, 2024

2ஆவது டெஸ்ட்: AUS அணி குறித்த பாண்டிங் கணிப்பு

image

இந்தியாவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் ஆடும் AUS லெவன் அணியை அந்நாட்டு முன்னாள் வீரர் பாண்டிங் தேர்வு செய்துள்ளார். பேட் கம்மின்ஸ் (கேப்டன்), உஸ்மான் கவாஜா, நாதன் மெக்ஸ்வீனி மார்னஸ் லபுசாக்னே, ஸ்டீவ் சுமித், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், அலெக்ஸ் கேரி உள்ளிட்ட முதல் போட்டியில் விளையாடி வீரர்களையே அவர் கணித்துள்ளார். 2ஆவது டெஸ்ட் போட்டி வரும் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது.

News November 29, 2024

இதயமே இல்லாமல் வாழ்ந்த உலகின் முதல் மனிதன்!

image

நம்மில் யாராவது ஈவு இரக்கமற்ற செயலை செய்தால் உனக்கு இதயம் இல்லையா எனக் கேட்பதுண்டு. ஆனால், உண்மையில் இதயம் இல்லாத ஒருவரை உங்களுக்குத் தெரியுமா? 2011இல் கிரேக் லூயிஸ் என்ற 55 வயது நபருக்கு amyloidosis நோய் காரணமாக இதயம், சிறுநீரகம், கல்லீரல் செயலிழந்தது. இதையடுத்து, டெக்சாஸ் ஹார்ட் இன்ஸ்டிடியூட் மருத்துவர்கள், அவரது இதயத்துக்குப் பதிலாக கருவியைப் பொருத்தி, சில நாள்கள் வாழ சிகிச்சை அளித்தனர்.

News November 29, 2024

BREAKING: நாளை WORK FROM HOME!

image

ஃபெஞ்சல் புயல் நாளை மாமல்லபுரம் அருகே கரையை கடப்பதால் வட மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஐடி ஊழியர்களை வீட்டில் இருந்தே பணிபுரிய அறிவுறுத்துமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

News November 29, 2024

தமிழ்நாடா? கொலைநாடா? : ராமதாஸ்

image

தமிழ்நாட்டு மக்களால் வீட்டில் நிம்மதியாக உறங்கக் கூட முடியவில்லை என ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். சட்டம்-ஒழுங்கு என்ற ஒன்று இருக்கிறதா என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், காவல்துறை அதன் கடமைகளை மறந்து எதிர்க்கட்சியினரை பழிவாங்க மட்டுமே பயன்படுவதாகவும் விமர்சித்துள்ளார். திராவிட மாடல் ஆட்சியில் எத்தனை வினா எழுப்பினாலும் விடை கிடைக்காது என்பதுதான் வேதனையான உண்மை என்றும் சாடியுள்ளார்.

News November 29, 2024

SKவை நேரில் அழைத்து பாராட்டிய ராஜ்நாத் சிங்!

image

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான ‘அமரன்’ திரைப்படம் வேற லெவல் ஹிட் அடித்துள்ளது. ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை சித்தரிக்கும் இத்திரைப்படத்திற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில், அமரன் படத்தை பார்த்த பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இன்று சிவகார்த்திகேயன், அமரன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி உள்ளிட்டோரை நேரில் அழைத்து பாராட்டினார்.

error: Content is protected !!