News November 29, 2024
2,533 JOB.. ஜனவரியில் தேர்வு

தமிழகத்தில் 2,533 அரசு மருத்துவர் காலிப்பணியிடங்களுக்கான தேர்வு ஜனவரி 5ஆம் தேதி நடைபெறும் என அமைச்சர் மா.சு அறிவித்துள்ளார். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 428 முதுநிலை பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது; 2,140 செவிலியர்களுக்கு டிச.2ஆம் தேதி பணி ஆணை வழங்கப்பட உள்ளது. 1,200 தொகுப்பு ஊதிய செவிலியர்கள் நிரந்தர செவிலியர்களாக பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்றும் தகவல் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 8, 2025
ரஷ்ய ராணுவத்தில் 44 இந்தியர்கள்

ரஷ்ய ராணுவத்தில் 44 இந்தியர்கள் பணியாற்றி வருவதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இது தொடர்பாக ரஷ்ய அதிகாரிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பதாகவும் கூறியுள்ளது. ரஷ்யாவில் அதிக சம்பளத்தில் வேலை என அழைத்து செல்லப்படும் இந்தியர்கள், அங்கு ராணுவ உதவியாளர்களாக சேர்க்கப்படுகின்றனர்.
News November 8, 2025
வந்தே மாதரத்தை பாடாதவர்கள் கேள்வி கேட்பதா? கார்கே

வந்தே மாதரத்தை பாடாத RSS-காரர்கள், இன்று தேசியத்தின் காவலர்களாக காட்டிக் கொள்வது விந்தையாக இருப்பதாக காங்., தலைவர் கார்கே விமர்சித்துள்ளார். வந்தே மாதரம் பாடலின் முக்கிய வரிகளை நீக்கி, நாட்டு பிரிவினைக்கு காங்., வித்திட்டதாக மோடி கூறிய குற்றச்சாட்டுக்கு இவ்வாறு பதிலளித்துள்ள கார்கே, RSS ஷாகா, அலுவலகங்களில் தேசிய கீதமான ஜன கண மன, வந்தே மாதரம் இரண்டையும் பாடியதே இல்லை என விமர்சித்தார்.
News November 8, 2025
ஏன் இவ்வளவு தாமதம்? அரசுக்கு EPS கேள்வி

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தொகுதி மேம்பாட்டு நிதிக்கு உண்டான ஜிஎஸ்டி நிதியை விடுவிப்பதற்கு ஏன் இவ்வளவு தாமதம் என EPS கேள்வி எழுப்பியுள்ளார். இதனால், MLA தொகுதி மேம்பாட்டு நிதியில் மேற்கொள்ளப்பட்டு, முடிவுற்ற பணிகளுக்கு உண்டான நிதியை மாவட்ட ஆட்சியர்கள் விடுவிக்காமல் சிரமப்படுகின்றதாகவும் கூறியுள்ளார். எனவே உடனடியாக அந்த நிதியை விடுவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.


