news

News November 30, 2024

ஃபெஞ்சல் புயல்: வார் ரூம் அமைத்த திமுக!

image

ஃபெஞ்சல் புயல் மீட்புப் பணிக்காக அண்ணா அறிவாலயத்தில் திமுக சார்பில் வார் ரூம் அமைக்கப்பட்டுள்ளது. களத்தில் திமுக என்ற பெயரில் 8069446900 என்ற உதவி எண் மூலம் பொதுமக்கள் அவசர உதவி கோரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று இரவு முதலே கனமழை பெய்து வரும் நிலையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

News November 30, 2024

FENGAL: இலங்கையில் 12 பேர் பலி

image

தற்போது தமிழகத்தில் கனமழையையும் சூறைக்காற்றையும் கொடுத்துக் கொண்டிருக்கும் ஃபெஞ்சல் புயல் கடந்த 3 நாள்களாக இலங்கையில் கோர தாண்டவம் ஆடி வருகிறது. அதன் விளைவாக அங்கு இதுவரை 12 பேர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. மேலும், பாதிப்புகளை சீர் செய்யும் நடவடிக்கைகளில் அரசு தீவிரமாக ஈடுபடுட்டுள்ளது.

News November 30, 2024

சென்னை மக்களுக்கு ஏரியா வாரியாக உதவி எண் அறிவிப்பு

image

சென்னையில் மழையால் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் வகையில் அதிமுக உதவி எண்களை அறிவித்துள்ளது. ஃபெஞ்சல் புயலால் சென்னையில் கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. ‘களத்தில் அதிமுக’ எனப் பெயரில் சோழிங்கநல்லூர், ராயபுரம், சைதாப்பேட்டை, சேப்பாக்கம், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. <>உதவி எண்கள்<<>> அறிய இங்கே கிளிக் செய்யவும்

News November 30, 2024

முன்னதாகவே டெல்லி திரும்பும் ஜனாதிபதி!

image

4 நாட்கள் அரசுமுறை பயணமாக கடந்த 28ஆம் தேதி தமிழகம் வந்த ஜனாதிபதி திரெளபதி முர்மு, உதகையில் உள்ள ஆளுநர் மாளிகையில் தங்கி ராணுவ பயிற்சி கல்லூரி விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். ஃபெஞ்சல் புயல், கனமழை காரணமாக அவரது திருவாரூர் பயணம் இன்று ரத்து செய்யப்பட்ட நிலையில், நாளை டெல்லி புறப்படவிருந்த நிலையில், இன்றே டெல்லி செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News November 30, 2024

RCBக்கு BackFire-ஆன ஹிந்தி பாசம்..!

image

ஹிந்திக்கு என சமூக வலைதளத்தில் தனி அக்கவுண்ட் தொடங்கியது குறித்து விளக்கம் அளிக்க கன்னட மொழி மற்றும் கலாசார அமைச்சகம் RCBக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கன்னட அமைப்புகள் RCBக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அரசும் ஆக்‌ஷனில் இறங்கியுள்ளது. விமர்சனங்களைத் தவிர்க்கும் பொருட்டு, இனி வரும் காலங்களில் பெங்காலி, மலையாளம், பஞ்சாபி, தெலுங்கு மொழிகளில் அக்கவுண்ட் தொடங்க உள்ளதாக RCB தெரிவித்துள்ளது.

News November 30, 2024

அரையாண்டு தேர்வு கால அட்டவணை வெளியீடு

image

6 முதல் 9ஆம் வகுப்புகள் மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. டிச.9ஆம் தேதி தொடங்கும் தேர்வு, 23ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 6, 8ஆம் வகுப்புகளுக்கு காலையும், 7, 9, 11ஆம் வகுப்புகளுக்கு மதியமும் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. டிச.24 முதல் ஜன.1ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டு, ஜன.2ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News November 30, 2024

புதுச்சேரியை நெருங்கும் ஃபெஞ்சல்

image

இன்று காலை 8.30 மணி நிலவரப்படி ஃபெஞ்சல் புயல் மணிக்கு 13 கிமீ வேகத்தில் தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. அது தற்போது, சென்னையில் இருந்து 110 கிமீ தென் கிழக்கிலும், புதுச்சேரியில் இருந்து 120 கிமீ வடகிழக்கிலும் மையம் கொண்டுள்ளது. இன்று மாலை இப்புயல் மகாபலிபுரத்துக்கும் காரைக்காலும் இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News November 30, 2024

பாம்பு புகுந்து விட்டதா? இந்த நம்பரை அழையுங்க

image

புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்கிறது. இதுபோன்ற சூழலில் பாம்பு போன்ற விஷப்பூச்சிகள் வீடுகளுக்குள் புகும் சம்பவங்கள் நிகழ்வதுண்டு. இந்த நேரத்தில் சென்னை மற்றும் அருகிலுள்ள மாவட்ட மக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்ணை தமிழக அரசு அறிவித்துள்ளது. 044 2220 0335 தொடர்பு கொள்ள அறிவுறுத்தியுள்ளது. பெண்களுக்கு உதவி வேண்டுமெனில் 181 எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

News November 30, 2024

அமரன் OTT: ரிலீஸ் தேதியை உறுதி செய்த Netflix!

image

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றுள்ள அமரன் படத்தின் OTT ரிலீஸ் எப்போது என்ற சஸ்பென்ஸை உடைத்துள்ளது நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம். வரும் 5-ஆம் தேதி OTTயில் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் டிஜிட்டல் உரிமத்தை ₹60 கோடிக்கு நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் வாங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. படத்தின் திரையரங்கு வசூல் ₹300 கோடியை தாண்டியது குறிப்பிடத்தக்கது.

News November 30, 2024

விஜய் IN.. திருமாவளவன் OUT..!

image

விசிக துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா தொகுத்துள்ள ‘எல்லோருக்குமான தலைவர் – அம்பேத்கர்’ புத்தகத்தை தவெக தலைவர் விஜய் வெளியிட இருப்பது உறுதியாகியிருக்கிறது. இந்நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்க இருப்பதால் திருமாவளவன் பங்கேற்க மாட்டார் என்ற தகவலும் வெளியாகியிருக்கிறது. ஆக மொத்தம், தலைவரின் முக்கிய நிகழ்வு ஒன்றிலேயே விஜய் எண்ட்ரி கொடுத்து திருமா அவுட் ஆகியிருக்கிறார்.

error: Content is protected !!