India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இரவு 10 மணி வரையிலான மழை நிலவரம் குறித்த வானிலை நிலவரத்தை MET வெளியிட்டுள்ளது. அதில் சென்னை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, சேலம், நாமக்கல்லுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே விடப்பட்ட எச்சரிக்கையில் சென்னைக்கு ரெட் அலர்ட் விடப்பட்டிருந்தது. ஆனால் அது விலக்கப்பட்டு, ஆரஞ்ச் அலர்ட்டாக மாற்றப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு எண்ணிக்கையில் வித்தியாசம் இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டை நிரூபிக்க போதிய ஆதாரம் இல்லை என தேசியவாத காங்கிரஸ் (சரத் சந்திரபவார்) தலைவர் சரத்பவார் கூறியுள்ளார். சிலர் மறுவாக்குப் பதிவை கோருவதாகவும், அதில் பெரிய அளவில் தனக்கு நம்பிக்கை இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக, வாக்குப்பதிவு தரவுகளின் நிறைய முரண்பாடுகள் இருப்பதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியிருந்தது.
ஃபெஞ்சல் புயல் எதிரொலியாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மின் தடை ஏற்பட்டுள்ளதால், மக்கள் இருட்டில் அச்சத்துடன் இருக்கின்றனர். ஆவடி, காந்திநகர், பட்டாபிராம், நெமிலிச்சேரி, திருநீர்மலை உள்ளிட்ட பகுதிகளில் மின்சார விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், மரக்காணம், கல்பாக்கம் மற்றும் 10 மீனவ கிராமங்களிலும் 12 மணி நேரத்திற்கும் மேலாக முற்றிலும் மின் விநியோகம் தடை ஏற்பட்டுள்ளது.
இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் தென் ஆப்பிரிக்கா 233 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டர்பனில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய SA 191 ரன்னில் ஆட்டமிழந்தது. தொடர்ந்து விளையாடிய SL 42 ரன்னில் சுருண்டது. 149 ரன்கள் முன்னிலையுடன் 2ஆவது இன்னிங்ஸை தொடங்கிய SA 366/5 டிக்ளேர் செய்தது. இதைத்தொடர்ந்து 516 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய SL 282 ரன்னில் ஆட்டமிழந்தது.
மரக்காணம் பகுதியில் ஃபெஞ்சல் புயல் கரையை கடக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக, சென்னை முதல் செங்கல்பட்டு வரை பலத்த காற்று வீசி வருகிறது. மேலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில், அடுத்த 3 மணி நேரத்திற்கு அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் Red Alert எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்.
ஃபெஞ்சல் புயலால் சென்னை உள்பட 13 மாவட்டங்களின் மக்கள் அதிகனமழையால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆளுங்கட்சியான திமுகவும், எதிர்க்கட்சியான அதிமுகவும் வார் ரூம்கள் அமைத்து, நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளுக்கு கட்சியின் தன்னார்வலர்களை களம் இறக்கியுள்ளன. ஆனால், ஒரு மாதமாக பரபரப்பாக இருந்த தவெகவினரும், விஜய்யும் silent mode-ல் இருப்பதாக நெட்டிசன்கள் கிண்டலடிக்கின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?
ஃபெஞ்சல் புயல் காரைக்கால்- மகாபலிபுரம் இடையே தற்போது கரையை கடக்கத் தொடங்கியுள்ளது. புயலின் முகப்பு பகுதி இப்போது கரையை கடக்க தொடங்கியுள்ளது. இந்தப் புயல் முழுவதும் கரையைக் கடக்க சுமார் 4 மணி நேரம் வரை ஆகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. புயல் கரையைக் கடக்கையில் மணிக்கு 80 கி.மீ. முதல் 90 கி.மீ. வரை வேகத்தில் காற்று வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா தேர்தல் முடிவு வெளிவந்து பல நாள் ஆகி விட்ட நிலையில், CM பதவி குறித்து முடிவு எடுக்கப்படாததால் புதிய அரசு பதவியேற்பதில் தாமதம் நிலவுகிறது. இந்நிலையில் புதிய அரசு வருகிற 5ஆம் தேதி மாலை 5 மணிக்கு பதவியேற்க இருப்பதாக மாநில பாஜக தலைவர் தெரிவித்துள்ளார். ஆனால் யார் CMஆக இருக்கிறார் என அவர் கூறவில்லை. CM பதவியை ஷிண்டே கோரியிருப்பதாக கூறப்படும் நிலையில், இத்தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் பாதுகாப்புக்காகவே சில இடங்களில் மின் விநியோகம் நிறுத்தம் என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விளக்கமளித்த அவர், புயலை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மின்சார வாரியம் எடுத்துள்ளது என்றார். மேலும், பிரச்னைகளை உடனுக்குடன் சரிசெய்ய 10,000 பேர் தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சென்னையின் பல்வேறு இடங்களிலும் புயல் காரணமாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், திமுக ஐடி விங் சார்பில் வெளியிடப்பட்ட பதிவில், சென்னை சைதாப்பேட்டையில் மழை நின்று, அங்குள்ள ஜோன்ஸ் சாலையில் இயல்பு நிலை திரும்பி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் இயல்பு நிலை திரும்பி உள்ளதா? உங்கள் கருத்துகளை கீழே கமெண்ட் பாக்சில் பதிவிடுங்கள்.
Sorry, no posts matched your criteria.