news

News November 30, 2024

பள்ளிகள் திறப்பு எப்போது? அன்பில் மகேஸ் பதில்

image

மழையால் சேதமடையும் பள்ளிகளில் மாணவர்கள் எவ்வாறு அமர்ந்து படிப்பார்கள் என்றும், மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது என்ற கேள்வியும் எழுந்துள்ளன. இதற்கு பதிலளித்துள்ள அமைச்சர் அன்பில் மகேஸ், மழை, புயலால் பாதிக்கப்பட்டுள்ள பள்ளிகள் அனைத்தும், மாணவர்கள் அமர்ந்து படிக்கும் அளவிற்கு சீரமைக்கப்பட்ட பின்னரே திறக்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

News November 30, 2024

விமானப்படையில் சேர ஆசையா?

image

இந்திய விமானப்படையில் வேலையில் சேர விரும்புவோர் வருகிற டிச.2ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விமானப்படை சார்பில் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் FLYING, TECHNICIAN, ADMINISTRATION உள்ளிட்ட பதவிகளுக்கு 2ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை <>https://careerairforce.nic.in/ <<>>இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு ஆதார் கட்டாயம் எனக் கூறப்பட்டுள்ளது.

News November 30, 2024

NETFLIX பயனாளர்களே உஷார்..!

image

23 நாடுகளில் NETFLIX பயனாளர்களை குறிவைத்து மோசடி நடந்து வருவது தெரியவந்துள்ளது. அது இந்தியாவிற்கும் பரவ வாய்ப்புள்ளது. நீங்கள் கடைசியாக செய்த Payment-ல் பிரச்னை என திடீரென மெசேஜ் வரும். அதில் உள்ள லிங்கை க்ளிக் செய்தால் போலியான NETFLIX தளத்திற்கு செல்லும். அதில் கிரெடிட் கார்ட் விவரங்களை பதிவிட்டதும் பணம் திருடப்படும். உண்மையில், NETFLIX இதுபோன்ற மெசேஜ்களை அனுப்பாது என்று தெரிவித்துள்ளது.

News November 30, 2024

நாளை 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

image

ஃபெஞ்சல் புயல் காரணமாக நாளை விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சி, ராணிப்பேட்டை, தி.மலை, தர்மபுரி, சேலம், பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, நீலகிரி, ஈரோடு, நாமக்கல், திருச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.

News November 30, 2024

ரத்தான இந்தியா – ஆஸி. முதல் நாள் பயிற்சி ஆட்டம்

image

கான்பெரா மைதானத்தில் நடக்கவிருந்த 2 நாள் இந்தியா vs ஆஸ்திரேலியா PM XI பயிற்சி ஆட்டம் மழையின் காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. 2 ஆண்டுகளுக்கு பிறகு, 2வது டெஸ்டில் இந்திய அணி pink ball மேட்சில் விளையாட இருப்பதால், அதற்கு முன்பாக இந்த பயிற்சி ஆட்டம் முக்கியமானதாக பார்க்கப்பட்டது. ஒரு நாளாக குறைக்கப்பட்டுள்ள போட்டியில், நாளை இரு அணிகளும் தலா 50 ஓவர்கள் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

News November 30, 2024

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

image

தமிழகத்தில் மாலை 4 மணி வரை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

News November 30, 2024

மழையால் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி!

image

சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில் முத்தியால்பேட்டை பகுதியில் உள்ள ஏடிஎம் மையத்தில் மின்சாரம் தாக்கி வடமாநிலத்தை சேர்ந்த சந்தன் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக முத்தியால்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில் சாலைகளில் தேங்கியுள்ள வெள்ளநீரால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

News November 30, 2024

வேகமாக நிரம்பி வரும் செம்பரம்பாக்கம் ஏரி

image

இரவு முதல் பெய்துவரும் தொடர் மழையால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. 24 அடி உயரம் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போது 18.82 அடி அளவுக்கு தண்ணீர் உள்ளது. தற்போது நீர்வரத்து மிக அதிகமாக உள்ளதால் விரைவில் நீர்மட்டம் அதிகரிக்கக் கூடும். ஆகவே ஏரி, கால்வாய் ஓரங்களில் வசிப்பவர்கள் கவனமாக இருக்கவும்.

News November 30, 2024

இன்றே கடைசி.. IDBI வங்கியில் 600 காலியிடங்கள்

image

IDBI வங்கியில் காலியாக உள்ள 600 காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். இந்த காலி பணியிடங்கள் அனைத்தும் ஜூனியர் அசிஸ்டென்ட் நிலையிலான பதவிகள் ஆகும். இதற்கான விண்ணப்பப்பதிவு கடந்த 21ஆம் தேதி முதல் நடைபெற்று வந்தது. அது இன்றுடன் முடிவடைகிறது. வேலையில் சேர விரும்புவோர் https://www.idbibank.in/ இணையதளத்தில் உடனே விண்ணப்பிக்கவும். இந்தத் தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்கள்.

News November 30, 2024

ஃபெஞ்சல் புயல்: வார் ரூம் அமைத்த திமுக!

image

ஃபெஞ்சல் புயல் மீட்புப் பணிக்காக அண்ணா அறிவாலயத்தில் திமுக சார்பில் வார் ரூம் அமைக்கப்பட்டுள்ளது. களத்தில் திமுக என்ற பெயரில் 8069446900 என்ற உதவி எண் மூலம் பொதுமக்கள் அவசர உதவி கோரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று இரவு முதலே கனமழை பெய்து வரும் நிலையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!