news

News November 30, 2024

புயல் உதவி தொலைப்பேசி எண்கள்

image

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டோர் அழைக்க வேண்டிய தொலைப்பேசி எண்களை அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 1070 என்ற மாநில உதவி எண்ணையோ, 1077 என்ற மாவட்ட உதவி எண்ணையோ மக்கள் அழைக்கலாம். மேலும், வாட்ஸாப் மூலம் தொடர்புகொள்ள, 9445869848 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

News November 30, 2024

திருவண்ணாமலை பள்ளிகளுக்கு விடுமுறை

image

ஃபெஞ்சல் புயல் காரணமாக ஏற்கெனவே 9 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கும் நிலையில் 10ஆவது மாவட்டமாக திருவண்ணாமலையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

News November 30, 2024

நாளை முதல் அமலாகும் மாற்றங்கள்!

image

*விமானம், ஹோட்டல்கள் தொடர்பான ரிவார்ட் புள்ளிகளில் SBI வரம்பு அமைக்க உள்ளது. *காலாண்டுக்கு ₹1 லட்சம் வரை செலவு செய்பவர்களுக்கு மட்டுமே இலவச ஓய்வறை வசதியை HDFC வழங்கும். *ரிவார்ட் பாய்ண்ட், கிரெடிட் கார்டு கட்டணங்களை SBI, Axis திருத்தியுள்ளது. *மாலத்தீவு செல்வதற்கான விமானக்கட்டணம் உயர உள்ளது. *வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News November 30, 2024

₹200க்கு நாட்டை காட்டிக் கொடுத்தவர்

image

தினமும் ₹200 பெற்றுக் கொண்டு, கடற்படை சார்ந்த தகவல்களை பாகிஸ்தான் உளவாளிக்கு பகிர்ந்த திபேஷ் கோஹிலை குஜராத் தீவிரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். ஒகா (Okha) துறைமுகத்தில் வேலை செய்து வந்த திபேஷ், அங்கு வரும் கடற்படையின் கப்பல்களின் பெயர், எண்களை பாக்., ஏஜெண்டிற்கு வாட்ஸ்அப் மூலம் அளித்து வந்துள்ளார். இதுவரை ₹42,000-ஐ அவர் பாக். ஏஜெண்டிடம் இருந்து பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.

News November 30, 2024

‘காவாலா’ என்னோட பெஸ்ட் இல்ல

image

ரிலீசுக்கு முன்பே ஜெயிலர் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கிய பாடல் காவாலாதான். அப்பாடலில் நடனத்திலும் கிளாமரிலும் கலக்கிய தமன்னா, “ஆனாலும், அது என்னுடைய பெஸ்ட் இல்லை” என்று கூறியிருக்கிறார். அதில், இன்னும் சிறப்பான பங்களிப்பை அளித்திருக்கலாம் என்றும் “ஆஜ் கி ராத்” பாடலுக்கு இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என்றும் தமன்னா தெரிவித்துள்ளார்.

News November 30, 2024

அடுத்த 2 மணி நேரங்களுக்கு கனமழை

image

தமிழகத்தில் காலை 10 மணி வரை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

News November 30, 2024

படகு கவிழ்ந்த விபத்தில் 100 பேர் மாயம்!

image

நைஜீரியாவில் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் 100க்கு மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். கோகி மாநிலத்தில் இருந்து நைஜர் நோக்கிச் சென்ற படகில் 200க்கும் மேற்பட்டோர் பயணித்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக படகு கவிழ்ந்ததில் பயணிகள் ஆற்றில் விழுந்து தத்தளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 27 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

News November 30, 2024

தரையிறங்க முடியாமல் தவிக்கும் 4 விமானங்கள்

image

ஃபெஞ்சல் புயலால் சென்னையில் மணிக்கு 40 கி.மீ வேகத்துடன் கூடிய கனமழை பெய்கிறது. மோசமான வானிலை காரணமாக புனே, மும்பை, மஸ்கட், குவைத்தில் இருந்து வந்த 4 விமானங்கள் சென்னை ஏர்போர்டில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடிக்கின்றன. இந்த விமானங்களை சென்னையில் தரையிறக்கலாமா அல்லது பாதுகாப்பு கருதி வேறு ஏர்போர்டில் தரையிறக்கலாமா என அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

News November 30, 2024

மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்

image

ஃபெஞ்சல் புயல் கரையை கடக்கும் நேரத்தில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. அந்த நேரத்தில் தரைக்காற்று மணிக்கு 90 கிமீ வேகம் வரை வீசக்கூடும். இதனால், கிழக்கு கடற்கரை சாலையில் பொதுப் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது. மரங்கள் முறிந்து விழ வாய்ப்பிருப்பதால் அதன் அருகே நிற்பதை மக்கள் தவிர்க்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

News November 30, 2024

களத்தில் இறங்கிய பேரிடர் மீட்பு படை

image

புயல் முன்னெச்சரிக்கையாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 30 பேர் கொண்ட 11 தேசிய பேரிடர் மீட்பு குழு தயார் நிலையில் உள்ளது. அதேபோல் சென்னை, கொளத்தூரில் மாநில பேரிடர் மீட்புப் படையினர் முன்னெச்சரிக்கையாக நிறுத்தப்பட்டுள்ளனர். புயலின் வேகம் (7 கி.மீ) குறைவாக உள்ளதால் கரையைக் கடப்பதில் தாமதம் ஏற்படலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். அதன் காரணமாக, வரும் நேரங்களில் தீவிர மழை பெய்ய வாய்ப்புள்ளது.

error: Content is protected !!