news

News November 30, 2024

குரூப் 1 தேர்வு: ஹால் டிக்கெட் வெளியிட்டது TNPSC

image

குரூப் 1 பதவிகளுக்கான ஒருங்கிணைந்த தேர்வு எழுதுவோருக்கான ஹால் டிக்கெட்டை TNPSC வெளியிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை TNPSC கடந்த மார்ச் மாதம் வெளியிட்டிருந்தது. இதையடுத்து வருகிற டிச.10 முதல் டிச.13 வரை தேர்வு நடைபெறவுள்ளது. இதற்கு விண்ணப்பித்தோர் தேர்வு எழுத வசதியாக அவர்களுக்கான ஹால் டிக்கெட் <>www.tnpsc.gov.in<<>> இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

News November 30, 2024

47 ஆண்டுகளுக்குப் பின் கோவையில் புயல்

image

ஃபெஞ்சல் புயல் இன்று இரவு மாமல்லபுரம் அருகே கரையை கடந்து அடுத்த 2 நாள்கள் மேற்கு நோக்கி நகர இருக்கிறது. அப்போது, அது திருவண்ணாமலை, சேலம், கோவை மாவட்டங்களை கடந்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நடந்தால், 47 ஆண்டுகளுக்குப் பின் கோவை எதிர்கொள்ளும் புயல் இதுவாகத்தான் இருக்கும். இதனால், கொங்கு மண்டலத்தில் சுமார் 20 செ.மீ. வரை மழைப்பொழிவை எதிர்பார்க்கலாம்.

News November 30, 2024

சென்னை விமான நிலையம் மூடல்

image

ஃபெஞ்சல் புயல் மற்றும் தொடர் கனமழை காரணமாக, சென்னை விமான நிலையத்தில் இன்று மாலை 5 மணி வரை எந்த விமானமும் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 90 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசி வருவதோடு, தொடர் கனமழை பெய்து வருவதால், பல நிறுவனங்கள் விமான சேவையை ரத்து செய்துள்ளன. மழைப்பொழிவு அதிகரித்து வருவதால் பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது.

News November 30, 2024

நாளை முதல் OTP வருவதில் பிரச்னை ஏற்படுமா?

image

வங்கிகள், இ-காமர்ஸ் தளங்கள் என ஒரு மெசேஜ் எங்கிருந்து, யாரால் அனுப்பப்படுகிறது என்பதை டிராக் செய்யும் வசதியை ஜியோ உள்ளிட்ட தொலைதொடர்பு நிறுவனங்கள் அமல்படுத்த இன்றே கடைசி நாளாகும். இதை மீறும் தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு OTP பெறுவதில் சிக்கல் ஏற்படலாம். இருப்பினும் Spam மோசடிகளை தடுக்க மேற்கொள்ளும் இந்நடவடிக்கையால், நாளை முதல் OTP பெறுவதில் சிக்கல் ஏற்படாது என TRAI உறுதிபடுத்தியுள்ளது.

News November 30, 2024

மனைவிக்கு நகை வாங்கியதால் ₹8 கோடி பரிசு!!

image

அதிர்ஷ்டம் ஒருவருக்கு எந்த ரூபத்தில் அடிக்கும் என்பது தெரியாத ஒன்றே. மனைவிக்காக நகை வாங்கிய ஒருவருக்கு இந்திய மதிப்பில் ₹8 கோடி ரூபாய் பரிசாக லக்கி டிராவில் கிடைத்துள்ளது. சிங்கப்பூரில் உள்ள நகைக்கடை ஒன்று வாடிக்கையாளர்களை ஈர்க்க இவ்வாறு செய்யப்படுகிறது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிதம்பரம் 3 மாதங்களுக்கு முன்பு, இக்கடையில் மனைவிக்கு தங்க செயின் வாங்க இம்முறை அவருக்கு பரிசு கிடைத்துள்ளது.

News November 30, 2024

அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை

image

தமிழகத்தில் மதியம் 1 மணி வரை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், கள்ளக்குறிச்சி, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

News November 30, 2024

விஜய் மகனை புகழ்ந்து தள்ளிய சந்தீப் கிஷன்

image

ஜேசன் சஞ்சய் கதை சொல்ல வந்த போது, அவரது பணிவு மற்றும் திரைக்கதைக்காக அவர் மேற்கொண்ட உழைப்பை பார்த்து பிரமித்ததாக சந்தீப் கிஷன் தெரிவித்துள்ளார். சிங்கிள் பிரேக் கூட எடுக்காமல் 2 மணி நேரம் 50 நிமிடங்கள் ஒவ்வொரு ஃப்ரேமாக அவர் கதை சொன்னதாகவும், அதை கேட்டவுடன் OK சொன்னதாகவும் கூறியுள்ளார். மேலும், ‘ராயன்’ ரிலீசாவதற்கு முன்பே, அவர் இயக்கத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

News November 30, 2024

‘இந்தியன் 2’ பாணியில் லஞ்சம்.. சிக்கிய பெண் சர்வேயர்!

image

மதுரை திருமங்கலத்தில் ‘இந்தியன்-2’ பட பாணியில் லஞ்சம் வாங்கிய பெண் சர்வேயர் கைது செய்யப்பட்டார். நிலத்தை அளந்து பட்டா வழங்க விண்ணப்பித்திருந்த கீழ உரப்பனூரைச் சேர்ந்த அஜித்குமாரிடம் சர்வேயர் சித்ராதேவி ₹5,000 லஞ்சம் கேட்டதோடு அதை வேறு இடத்தில் உள்ள தனது கணவரிடம் கொடுக்க சொல்லியுள்ளார். அஜித்தின் புகாரின் பேரில் மறைந்திருந்த DVAC போலீசார், பணத்தை வாங்கிய சித்ராதேவியின் கணவரை கைது செய்தனர்.

News November 30, 2024

JOBS: தமிழக PWD-வில் 760 அப்ரெண்டிஸ் பணியிடங்கள்

image

தமிழ்நாடு பொதுப் பணித்துறையில் 760 அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. என்ஜீனியரிங், டெக்னீசியன் ஆகிய பதவிகளுக்கு இந்த விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. வேலையில் சேர விரும்புவோர் <>http://boat-srp.com/news-and-events/ <<>>இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு வருகிற டிசம்பர் மாதம் 31ஆம் தேதி கடைசி நாளாகும். இந்தத் தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்கள்.

News November 30, 2024

இன்று திரையரங்குகள் இயங்காது

image

கனமழை காரணமாக இன்று மழை பெய்யும் மாவட்டங்களில் திரையரங்குகள் இயங்காது என்று திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் திரையரங்குகள் மூடப்படவுள்ளன. மேலும், சென்னையில் நகைக்கடைகள் இன்று இயங்காது என்றும் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. மக்கள் அத்தியாவசிய தேவையன்றி வேறு எதற்கும் வெளியே செல்ல வேண்டாம் என்று வே2நியூஸ் கேட்டுக் கொள்கிறது.

error: Content is protected !!