news

News November 29, 2024

BREAKING: நாளை WORK FROM HOME!

image

ஃபெஞ்சல் புயல் நாளை மாமல்லபுரம் அருகே கரையை கடப்பதால் வட மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஐடி ஊழியர்களை வீட்டில் இருந்தே பணிபுரிய அறிவுறுத்துமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

News November 29, 2024

தமிழ்நாடா? கொலைநாடா? : ராமதாஸ்

image

தமிழ்நாட்டு மக்களால் வீட்டில் நிம்மதியாக உறங்கக் கூட முடியவில்லை என ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். சட்டம்-ஒழுங்கு என்ற ஒன்று இருக்கிறதா என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், காவல்துறை அதன் கடமைகளை மறந்து எதிர்க்கட்சியினரை பழிவாங்க மட்டுமே பயன்படுவதாகவும் விமர்சித்துள்ளார். திராவிட மாடல் ஆட்சியில் எத்தனை வினா எழுப்பினாலும் விடை கிடைக்காது என்பதுதான் வேதனையான உண்மை என்றும் சாடியுள்ளார்.

News November 29, 2024

SKவை நேரில் அழைத்து பாராட்டிய ராஜ்நாத் சிங்!

image

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான ‘அமரன்’ திரைப்படம் வேற லெவல் ஹிட் அடித்துள்ளது. ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை சித்தரிக்கும் இத்திரைப்படத்திற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில், அமரன் படத்தை பார்த்த பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இன்று சிவகார்த்திகேயன், அமரன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி உள்ளிட்டோரை நேரில் அழைத்து பாராட்டினார்.

News November 29, 2024

சென்னை உட்பட 8 மாவட்டங்களில் விடுமுறை

image

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவள்ளூர், மயிலாடுதுறை ஆகிய 8 மாவட்டங்களிலும் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் சிறப்பு வகுப்பு நடத்தக்கூடாது என்றும், புயல் தீவிரமாக இருக்கும் என்பதால் மாணவர்கள் வீட்டில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

News November 29, 2024

BREAKING: 5 மாவட்டங்களில் விடுமுறை

image

தமிழ்நாட்டில் தற்போது வரை 5 மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களை தொடர்ந்து, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

News November 29, 2024

கடலூர் மக்கள் நாளை வெளியே வர வேண்டாம்

image

“ஃபெஞ்சல்” புயல் கரையைக் கடக்கும்போது 90 கி.மீ., வேகத்தில் சூறைக்காற்று வீசும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதனையடுத்து, நாளை பிற்பகலில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என கடலூர் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையில் செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களுக்கு மரம் அறுக்கும் கருவி, ரப்பர் படகு உள்ளிட்ட வெள்ள மீட்புக் கருவிகளுடன் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் விரைந்துள்ளனர்.

News November 29, 2024

2ஆவது காலாண்டில் GDP சரிவு

image

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, நடப்பு நிதியாண்டின் 2ஆவது காலாண்டில் சரிவை சந்தித்துள்ளது. தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவல்படி, ஜூலை-செப்டம்பர் காலாண்டில் நாட்டின் GDP கடந்த 7 காலாண்டுகளில் இல்லாத அளவு 5.4%ஆக குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் உற்பத்தி துறையில் உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளதால், GDP வளர்ச்சி குறைந்துள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

News November 29, 2024

உலக சாம்பியனை கதிகலங்க வைக்கும் தமிழன்!

image

சிங்கப்பூரில் நடைபெற்று வரும் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் 4வது சுற்று போட்டியை தமிழக வீரர் குகேஷ் டிரா செய்துள்ளார். அவர் நடப்பு சாம்பியனான சீன வீரர் டிங் லிரென் உடன் டிரா செய்தார். மொத்தம் 14 போட்டிகளில் முதலில் 7.5 புள்ளிகளை எடுப்பவர்கள் உலக சாம்பியன் பட்டம் வெல்வார். தற்போது 4 சுற்று போட்டிகளின் முடிவில் இருவரும் தலா 2 புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளனர்.

News November 29, 2024

3 மாவட்டங்களில் விடுமுறை

image

நாளை 7 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையால், கடலூரை தொடர்ந்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்த அனுமதியில்லை. மீறி நடத்தினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

News November 29, 2024

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: ஜி.கே.வாசன்

image

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதால் தொடர் குற்றச்செயல்கள் நடைபெறுவதாக ஜி.கே.வாசன் விமர்சித்துள்ளார். குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை இரும்புக்கரம் கொண்டு தமிழக அரசு அடக்க வேண்டும் என்ற அவர், அரசு சட்டம் ஒழுங்கில் மேலும் கூடுதல் கவனம் செலுத்த வலியுறுத்தியுள்ளார். டாஸ்மாக், போதை கலாசாரத்தைக் கட்டுப்படுத்தாததே குற்றச் சம்பவங்களுக்கு காரணமாக அமைவதாகவும் அவர் தெரிவித்தார்.

error: Content is protected !!