news

News November 29, 2024

‘ரெட் அலர்ட்’ நிவாரண முகாம்கள் தயார்: அமைச்சர்

image

ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் KKSSR ராமச்சந்திரன் கூறியுள்ளார். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், இந்த மாவட்டங்களில் 2,229 நிவாரண மையங்கள் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

News November 29, 2024

சமந்தாவின் தந்தை காலமானார்..

image

நடிகை சமந்தாவின் தந்தை ஜோசப் பிரபு காலமானார். ‘Until we meet again Dad’ என்று புரோக்கன் ஹார்ட் எமோஜியுடன், தந்தை மரணத்தை சமந்தா உருக்கமாக தன் இன்ஸ்டா ஸ்டோரியில் தெரிவித்துள்ளார். ஜோசப் பிரபுவின் மரணத்துக்கு காரணம் பற்றி தகவல் தெரியவில்லை. தனது தந்தையுடனான உறவில் விரிசல் ஏற்பட்டதாக அண்மையில் ஒரு பேட்டியில் சமந்தா தெரிவித்து இருந்தார். ஜோசப் மறைவிற்கு ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

News November 29, 2024

“ஃபெஞ்சல்” பெயருக்கான காரணம் இதுதான்?

image

வங்கக்கடலில் உருவாகியுள்ள புயலுக்கு சவுதி அரேபியா பரிந்துரைத்த “ஃபெஞ்சல்” என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஃபெஞ்சல் என்ற சொல், சவுதி அரேபியாவின் வேரூன்றிய கலாசார மற்றும் மொழியியல் முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. இதற்கு அரபிக் மொழியில் ‘வலுவான காற்று’ உடன் புயல் என்று பொருள். அதாவது, நாளை புயல் கரையை கடக்கும்போது சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த காற்று வீசும் என்பது தெளிவாகிறது.

News November 29, 2024

5 மற்றும் 7ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

image

ஃபெஞ்சல் புயல் நெருங்கி வருவதால், நாகை, காரைக்கால் துறைமுகங்களில் 5ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும், கடலூர் துறைமுகத்தில் 7ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்பட்டுள்ளது. 5ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால், துறைமுகத்தின் இடதுபக்கமாக புயல் கடக்கும் என்பது பொருள். 7ஆம் எண் கூண்டு ஏற்றப்பட்டால், துறைமுகம் வழியாகவோ அல்லது அருகிலோ புயல் கரையைக் கடக்கலாம் என்பதற்கான எச்சரிக்கை ஆகும்.

News November 29, 2024

மத்திய அரசை கடுமையாக சாடிய இபிஎஸ்!

image

வாடகை கட்டடங்களுக்கு 18% ஜிஎஸ்டி வரிவிதிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு அதிமுக பொது செயலாளர் இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். கொரோனா பெருந்தொற்றில் ஏற்பட்ட சரிவில் இருந்து வணிகர்கள் மீண்டு வரும் நிலையில், வாடகை கட்டடங்களுக்கு ஜிஎஸ்டி எனும் பெரும் சுமையை மத்திய அரசு ஏற்றுகிறது என கடுமையாக சாடினார். மேலும் 18% ஜிஎஸ்டி வரி வியாபாரிகளின் வாழ்வாதாராத்தையே பாதிக்கும் என கூறினார்.

News November 29, 2024

புதுமையில் அசத்தும் இந்திய ரயில்வே!

image

நாட்டின் முதல் ஹைட்ரஜனில் இயங்கும் ரயிலை இந்திய ரயில்வே விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த ரயிலின் சோதனை ஓட்டம் விரைவில் ஹரியானாவின் ஜிந்த் மற்றும் சோனிபட் ரயில் நிலையங்களுக்கு இடையே நடத்தப்பட உள்ளது. இன்னும் பெயரிடப்படாத இந்த ரயிலில் 8 பெட்டிகளில் மொத்தம் 2,638 பேர் பயணிக்க முடியும். தற்போது, ​​சென்னையில் உள்ள ஐசிஎஃப் மையத்தில் ரயிலின் உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

News November 29, 2024

BREAKING:4 மாவட்டங்களில் சூறாவளி எச்சரிக்கை

image

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நாளை சூறாவளி வீசும் என்று IMD எச்சரித்துள்ளது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள4 மாவட்டங்களிலும் இன்று அதிகபட்சமாக மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்றும், கடலூர், விழுப்புரம், நாகை, மயிலாடுதுறை, புதுச்சேரி, காரைக்காலில் பலத்த தரைக்காற்று வீசும் எனவும் வார்னிங் கொடுத்துள்ளது. எனவே பொதுமக்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

News November 29, 2024

வானில் திடீரென பறந்தது என்ன? நடுங்கும் US

image

ஹாலிவுட் படங்களை போல, விசித்திரமான நிகழ்வுகள் ஏனோ அமெரிக்காவில்தான் நடக்கின்றன. அப்படித்தான் நேற்று நள்ளிரவு, நியூயார்க் வான் பகுதியில் 4 லைட்டுகள் திடீரென தோன்றி பறந்தன. அங்கு விமானங்களும் பறக்கவில்லை என்பதும் உறுதியாகியுள்ளது. அப்படியெனில், அவை ஏலியன்களின் விமானங்களா என கேள்வியெழும்பியுள்ளது. அமெரிக்காவில் ஏலியன் கண்காணிப்பு துறை சமீபத்தில் உருவாக்கப்பட்டது.

News November 29, 2024

மக்கள் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்: அண்ணாமலை

image

சட்டம் ஒழுங்கை காக்க முடியாத திமுக அரசால் மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதாக அண்ணாமலை விமர்சித்துள்ளார். பல்லடத்தில் தாய், தந்தை, மகன் கொலையுற்ற செய்தியறிந்து வேதனையடைந்ததாகக் கூறிய அவர், கடந்த ஆண்டும் பல்லடத்தில், இதே போன்று சம்பவம் நடந்ததை நினைவுகூர்ந்துள்ளார். மேலும், காவல்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதித்து மக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும்படியும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

News November 29, 2024

IPL Auction: Unsold வீரர்களின் Playing 11!!

image

நடைபெற்று முடிந்த IPL மெகா ஏலத்தில், விற்பனையாகாத வீரர்களை வைத்து ஒரு அணியை உருவாக்கினால், அது இப்படி தான் இருக்கும் போல. வார்னர் (கேப்டன்) பிருத்வி ஷா, மயங்க் அகர்வால், பேர்ஸ்டோவ், டேரில் மிட்செல், சர்ஃபராஸ் கான், சிக்கந்தர் ராசா, ஷர்துல் தாக்கூர், பியூஷ் சாவ்லா, உமேஷ் யாதவ், முஸ்தபிசுர் ரஹ்மான். இந்த் அணியில் வேறு யார் இடம் பெற்றிருக்க வேண்டும்…கமெண்டில் சொல்லுங்க?

error: Content is protected !!