news

News November 29, 2024

OPS மீது விசாரணை நடத்த தடை

image

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு மீது மறுவிசாரணை நடத்த இடைக்கால தடை விதித்தது உச்சநீதிமன்றம். 2001 முதல் 2006 வரையிலான ஜெயலலிதா ஆட்சியில் OPS அதிக சொத்து சேர்த்ததாக நடைபெற்ற வழக்கை திரும்பப்பெற சிவகங்கை நீதிமன்றம் அனுமதித்தது. அந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு OPSக்கு சற்று ஆறுதலளித்துள்ளது.

News November 29, 2024

அஜித்துக்கு சூப்பர் கதையை சொன்னேன்: விக்கி ஆதங்கம்

image

Template கதையில் தான் தமிழ் மாஸ் ஹீரோக்கள் நடிச்சிட்டு வராங்கனு இருக்க குற்றச்சாட்டுக்கள் அதிகம். ஆனா, ஆவேஷம் மாதிரியான படத்தை அஜித் வேண்டாம்னு சொல்லிட்டாரா? என ட்வீட்டரே இப்போ அடுக்கடுக்க கேள்வியை எழுப்பிட்டு இருக்கு. அஜித் கிட்ட நான் ஆவேஷம் மாதிரியான ஒரு கதையை தான் சொன்னேன் என்கிறார் விக்கி. பேட்டி ஒன்றில் இதை அவரே சொல்கிறார். அஜித் ஆவேஷம் மாதிரியான படத்தில் நடிச்சிருந்தா எப்படி இருக்கும்?

News November 29, 2024

ARR-சாய்ரா இணைய வாய்ப்பு: வழக்கறிஞர் நம்பிக்கை

image

29 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்கு பின், AR ரஹ்மான் – சாய்ரா பானு தம்பதி பிரிவை அறிவித்து அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தனர். இந்நிலையில், விவாகரத்து குறித்து அவர்களின் வழக்கறிஞர் கூறும்போது, பிரிந்த தம்பதிகளுக்கு இடையே சமரசம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக நம்பிக்கை தெரிவித்தார். மேலும், விவாகரத்து குறித்த அவர்களது கூட்டு அறிக்கை, பிரிவு மற்றும் வலியை தெளிவாக உணர்த்தியதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

News November 29, 2024

குற்றவாளிகளின் சொர்க்க பூமியான தமிழகம்: EPS தாக்கு

image

திருப்பூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக EPS தெரிவித்துள்ளார். தமிழகத்தை குற்றவாளிகளின் சொர்க்கபூமியாக DMK அரசு மாற்றி உள்ளதாகவும், குற்றவாளிகளுக்கு பயமில்லை எனவும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றங்களை தடுக்க இங்கு ஒரு ஆட்சி இருக்கிறதா, இல்லையா என்று கேள்வி எழுப்பிய அவர், சட்டம் ஒழுங்கைக் காக்க இனியாவது செயல்படுமாறு ஸ்டாலினை வலியுறுத்தியுள்ளார்.

News November 29, 2024

மலேசிய தொழிலதிபர் அனந்தகிருஷ்ணன் காலமானார்

image

2ஜி ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மேக்சிஸ் நிறுவன உரிமையாளரும், மலேசியவாழ் தமிழ் தொழிலதிபருமான அனந்தகிருஷ்ணன் (86) காலமானார். மலேசியாவின் மிகப்பெரும் தொலைபேசி நிறுவனமான மேக்சிஸ், ஆஸ்ட்ரோ டிவி குழுமம் அவருக்கு சொந்தமானதாகும். அந்நாட்டின் 4-வது பெரிய கோடீஸ்வரரான இவர், மலேசிய முன்னாள் PM மகாதீருக்கு நெருக்கமானவர். மலேசியாவின் பிரபல Petronas Towers கட்டும் ஆலோசனையை அளித்தவரும் இவரே.

News November 29, 2024

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ காலமானார்

image

கம்பம் தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ சுப்புராயர் (76) மாரடைப்பால் காலமானார். திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த அவர், 1984ஆம் ஆண்டு எம்.எல்.ஏ ஆனார். 2017ஆம் ஆண்டு சசிகலா, ஓபிஎஸ் பிரிவினை ஏற்பட்டபோது ஓபிஎஸ் பக்கம் நின்று, அவர் முதல்வராக நீடிக்க வேண்டும் என்று குரல் கொடுத்தவர் சுப்புராயர். அவரது மறைவுக்கு அதிமுகவினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

News November 29, 2024

இந்தோனேசியா மழை – நிலச்சரிவு: 27 பேர் மரணம்

image

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் பெய்து வரும் பெரும் மழை காரணமாக வடக்கு சுமத்ரா மாகாணத்தில் உள்ள மேடான் நகரத்திலிருந்து பெரஸ்டாகி நகர் செல்லும் சாலையில் நேற்று முன்தினம் (நவ.27) திடீர் நிலச்சரிவு நேரிட்டது. மீட்புப்பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ள நிலையில், இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 27 பேர் பலியாகியுள்ளனர். மாயமான பலரை தேடும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.

News November 29, 2024

புஷ்பா – 2 படத்திலிருந்து தேவி ஸ்ரீ பிரசாத் நீக்கம்

image

புஷ்பா-2 பட பிரமோஷன் நிகழ்ச்சியில் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் குறித்து இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத் சில கருத்துகளை தெரிவித்திருந்தார். இதனால் சர்ச்சை எழவே புஷ்பா-2 பின்னணி இசை பணியிலிருந்து நீக்கப்பட்டு, இசையமைப்பாளர் சாம் சிஎஸ் சேர்க்கப்பட்டுள்ளார். மைத்ரி மூவி மேக்கர்சின் அஜித்தின் குட் பேட் அக்லியில் இருந்தும் நீக்கப்பட்டு ஜிவி பிரகாஷ் சேர்க்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

News November 29, 2024

சபரிமலையில் இதற்கு அனுமதி இல்லை: நீதிமன்றம்

image

சபரிமலை ஐயப்பன் கோயிலின் பதினெட்டுப்படி ஏறும் போது புகைப்படங்களோ, வீடியோவோ எடுக்கக் கூடாது என பக்தர்களுக்கு கேரளா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, போலீசார் பதினெட்டாம் படி மீது ஏறி புகைப்படம் எடுத்தது சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது. அதே போல, மாளிகைப்புரம் கோயிலில் பின்பற்று வரும் நடைமுறையான மஞ்சள், துணிகளை கோயிலின் கூரைகளில் வீசுவதையும் தவிர்க்குமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

News November 29, 2024

NTK வேட்பாளரை அசிங்கமாக பேசிய சீமான்.. நடந்தது என்ன?

image

கடந்த 2021 தேர்தலில் நத்தம் தொகுதியின் NTK வேட்பாளர் சிவசங்கரனை, சீமான் ஆபாசமாக பேசிய ஆடியோ வைரலாகிறது. இது தொடர்பாக சிவசங்கரன் தனது X பக்கத்தில், அந்த ஆடியோவை சீமானுக்கு அனுப்பி கேட்டபோது, ஆம் நான் தான் எனக் கூறினார். அண்ணன்(சீமான்) கோபத்தில் என்னை எதுவேண்டுமானாலும் பேசலாம், ஆனால் எனது குடும்பத்தாரை அவதூறாகவும், ஆபாசமாகவும் பேசும்போது என்ன செய்வது என்றே தெரியவில்லை என வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.

error: Content is protected !!