news

News October 31, 2025

கிருஷ்ண துளசி vs ராம துளசி! வீட்டில் எது இருக்கணும்?

image

ராம துளசி பச்சை நிறத்திலும், கிருஷ்ண துளசி ஓரளவு பழுப்பு மற்றும் ஊதா நிறத்திலும், குடை வடிவத்திலும் காணப்படுகிறது. ராம துளசி மிகவும் லேசான நறுமணத்தை கொண்டுள்ளது, அதே நேரத்தில் கிருஷ்ண துளசி மிகவும் வலுவான நறுமணத்தை கொண்டுள்ளது. வீட்டின் வடகிழக்கு திசையில், கிருஷ்ண துளசியை நடுவது வீட்டின் நிதி நிலைமையை பலப்படுத்தும் என நம்பப்படுகிறது. இத்தகவலை அனைவருக்கும் பகிரவும்.

News October 31, 2025

சுபமுகூர்த்த தினம்.. கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு

image

ஐப்பசி மாத சுபமுகூர்த்த தினமான இன்று, அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 150 முன்பதிவு டோக்கன்களும், 2 சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 300 முன்பதிவு டோக்கன்களும் ஒதுக்கீடு செய்யப்படும் என பதிவுத்துறை தலைவர் அறிவித்துள்ளார். பதிவு செய்ய விரும்புவோர் இந்த நன்னாளில் முந்துங்கள்.

News October 31, 2025

மலைப்பாம்புடன் பிரியங்கா சோப்ரா PHOTOS

image

லாஸ் ஏஞ்சல்ஸில் செட்டில் ஆகிவிட்ட பிரியங்கா சோப்ரா, தனது போட்டோஷூட்களால் ரசிகர்களை இணைப்பிலேயே வைத்துள்ளார். அந்த வகையில், மலைப்பாம்பை கழுத்தில் போட்டபடி, புன்னகையான முகத்துடன் இருக்கும் போட்டோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். ‘நீங்க தைரியமான பொன்னு தான் அப்டின்னு ஒத்துக்குறோம் பிரியங்கா’ என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். உங்களுக்கு பிரியங்காவிடம் பிடித்தது என்ன?

News October 31, 2025

திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்

image

2021-ல் டெல்டாவில் விட்டதை, வரும் தேர்தலில் பிடிக்க அதிமுக தீவிரம் காட்டுகிறது. அதன் ஒருபகுதியாகவே, மழை பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல் நபராக சென்று EPS பார்வையிட்டார் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். ஒருபுறம் மாற்றுக்கட்சியினரை அதிமுகவில் இணைக்கும் பணிகளும் நடக்கிறது. அந்த வகையில், தலைஞாயிறு மேற்கு ஒன்றிய திமுக நிர்வாகி செல்வி சேவியர், Ex அமைச்சர் OS மணியன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார்.

News October 31, 2025

Celebrations with emotional.. இந்திய மகளிர் அணி கிளிக்ஸ்

image

ODI மகளிர் உலகக் கோப்பையில், ஆஸி.,க்கு எதிரான செமி ஃபைனல் போட்டியில் 127 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார் ஜெமிமா ரோட்ரிக்ஸ். ஃபைனலில் நுழைந்துவிட்டோம் என அறிந்த கடைசி பவுண்டரியை விளாசிய பிறகு, வீராங்கனைகளின் எமோஷனலான கொண்டாட்டத்திற்கு ஈடே இல்லை. அப்படியான எமோஷனல் போட்டோஸை swipe செய்து பாருங்கள். உங்கள் வாழ்த்துகளை லைக்ஸாக தெரிவியுங்கள்.

News October 31, 2025

சோசியல் மீடியா இன்ஃபுளூயன்சர்களுக்கு செக்

image

சோசியல் மீடியா பிரபலங்கள் பலர், வணிக நோக்கில் உணவு பொருள்கள், மருந்துகள் உள்ளிட்டவற்றை தங்களது வீடியோக்களில் பரிந்துரைப்பர். இவ்வாறான இன்ஃபுளூயன்சர்களுக்கு சீனா செக் வைத்துள்ளது. மருத்துவம், சட்டம், கல்வி, நிதி ஆகிய துறை சார்ந்த வீடியோக்களை வெளியிடும் இன்ஃபுளூயன்சர்கள், அந்த துறை சார்ந்த படிப்பை முடித்து, அதற்கான தகுதியுடன் இருக்க வேண்டுமாம். இதை இந்தியாவிலும் கொண்டு வரலாமா?

News October 31, 2025

23 ஆண்டுகளுக்கு பிறகு விக்ரம் எடுத்த முடிவு

image

‘சியான் 63’ படத்தை இயக்கவுள்ள போடி ராஜ்குமார், 3 குறும்படங்களை மட்டுமே இயக்கியுள்ளார். உதவி இயக்குநராகவும் இருந்ததில்லை. இவ்வாறு அறிமுக இயக்குநருடன் விக்ரம் கைகோர்த்திருப்பது 2-வது முறையாகும். 23 ஆண்டுகளுக்கு முன்பு, பாலாஜி சக்திவேல் என்ற அறிமுக இயக்குநரின் ‘சாமுராய்’ படத்தில் விக்ரம் நடித்திருந்தார். ஆனால், அந்த படம் ஹிட்டாகவில்லை. மீண்டும் அறிமுக இயக்குநருடன் விக்ரம் காம்போ எப்படி இருக்கும்?

News October 31, 2025

அதிமுகவில் சர்ப்ரைஸ் நடக்கும்: சசிகலா

image

மீண்டும் தான், அதிமுகவை ஆட்சிக்கு கொண்டு வருவேன் என்று சசிகலா சூளுரைத்துள்ளார். அதிமுகவில் விரைவில் சர்ப்ரைஸ் நடக்கும் என்றும் சூசகமாக பேசியுள்ளார். தேவர் ஜெயந்தியின் போது OPS, செங்கோட்டையன், TTV தினகரன் ஆகியோர் ஒன்றாக இருந்த நிலையில், சசிகலாவின் இந்த பேச்சு அரசியல் கவனம் ஈர்த்துள்ளது. இதனால் அதிமுகவில் புதிய அணியாக உருவாகுமா (அ) தமிழக அரசியலில் தனிக் கூட்டணி உருவாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

News October 31, 2025

ஓய்வு பெறுகிறாரா ஆஸி., கேப்டன் அலிசா ஹீலி?

image

ஆஸி., மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் அலிசா ஹீலி காயம் காரணமாக, ஓய்வில் இருந்தார். பின்னர், இந்தியாவுக்கு எதிரான செமி ஃபைனலில் விளையாடினார். 5 ரன்களிலேயே பெவிலியன் திரும்பிய அலிசாவுக்கு, ஆஸி.,வின் தோல்வி பேரதிர்ச்சியாக அமைந்துவிட்டது. இந்நிலையில், இதுவே தனது கடைசி ODI உலகக் கோப்பை போட்டி என அவர் தெரிவித்துள்ளார். இது அலிசாவின் ஓய்வுக்கான சமிக்ஞை என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

News October 31, 2025

பிஹார் பரப்புரையில் PK கட்சி நிர்வாகி சுட்டுக்கொலை

image

பிஹாரின் மொகமா பகுதியில், பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி சார்பில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ளப்பட்டிருந்தது. அப்போது, 2 கான்வாயில் இருந்த கட்சி நிர்வாகிகளிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இது கைகலப்பாக மாற, துலார்சந்த் யாதவ் என்ற நிர்வாகி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இதனால் அந்த இடமே பரபரப்பு களமாக மாற, போலீஸார் பொதுமக்களை அப்புறப்படுத்தினர். தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

error: Content is protected !!