News August 8, 2025
எதிர்மறை எண்ணங்களை தடுப்பது எப்படி?

✦புத்துணர்ச்சி தரும் விஷயங்களை படிக்கலாம். ✦இனிமையான பாடல்களை கேட்கலாம். ✦தியானத்தில் ஈடுபடலாம். ✦புன்னகை தவழும் முகத்துடன் வலம் வாருங்கள். ✦முடிந்தவரை நேர்மறையாக பேசும் நண்பர்களுடன் இருங்கள். ✦முதியவர்கள் அல்லது குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுங்கள். ✦எப்படிப்பட்ட கஷ்டமாக இருந்தாலும் சமாளிக்கலாம் என்பதில் உறுதி கொள்ளுங்கள்.
Similar News
News November 8, 2025
பிஹாரில் 160 இடங்களில் வெற்றி உறுதி: அமித்ஷா

பிஹார் வாக்குப்பதிவு சதவீதம் உயர்ந்ததற்கு SIR பணிகளே காரணம் என அமித்ஷா தெரிவித்துள்ளார். மேலும் பிஹாரில் NDA கூட்டணிக்கு பெரும் மக்கள் ஆதரவு இருப்பதாக கூறிய அவர், குறைந்தபட்சம் 160 இடங்களில் வெற்றி பெறுவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார். மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு சட்டவிரோத ஊடுருவல் முற்றிலுமாக தடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
News November 8, 2025
போருக்கு ரெடி: பாகிஸ்தானுக்கு ஆப்கன் பதிலடி

இஸ்தான்புல்லில் நடத்த PAK-AFG இடையேயான பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வியடைந்தது. இதனையடுத்து இனி பேச்சுவார்தை நடத்த வாய்ப்பில்லை என பாகிஸ்தான் <<18234772>>அமைச்சர் ஆசிப் <<>> கூறியிருந்தார். இதனால் மீண்டும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக கருதும் ஆப்கான், போருக்கு தயார் என பகிரங்கமாக அறிவித்துள்ளது. இதன் காரணமாக PAK-AFG எல்லையில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
News November 8, 2025
6 கிலோவில் பிறந்த அதிசய குழந்தை PHOTO ❤️❤️

பிறந்த குழந்தைகள் சராசரியாக 3 கிலோ வரை இருப்பது வழக்கமான ஒன்று. ஆனால், ஆஸ்திரேலியாவில் அதற்கு டபுள் மடங்காக 6 கிலோவில் குழந்தையை பெற்றெடுத்திருக்கிறார் பெண் ஒருவர். பெரிய சைஸில் இருக்கும் அந்த பச்சிளம் குழந்தையின் போட்டோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பிரசவத்தின்போது அதிக வலி ஏற்பட்டதாகவும், தான் பிழைக்கமாட்டேன் என எண்ணியதாகவும் குழந்தையின் தாய் தெரிவித்துள்ளார்.


