India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆவின் நிறுவனத்திற்கு பால் வழங்கும், பால் உற்பத்தியாளர்கள் வங்கிக் கணக்கில் அரசு அறிவித்த ஊக்கத்தொகை நேரடியாக செலுத்தப்பட உள்ளதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியுள்ளார். மாவட்ட ஒன்றியத்தில் இருந்து பால் உற்பத்தியாளர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக லிட்டருக்கு ₹3 என்ற அடிப்படையில் இத்தொகை வழங்கப்பட உள்ளது. முதல் கட்டமாக சில மாவட்டங்களில் இந்த வாரம் முதல் இந்நடைமுறை செயல்படுத்தப்பட உள்ளது.
1757 – கொல்கத்தாவை பிரித்தானியர் கைப்பற்றினர்.
1954 – பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்மவிபூஷன் விருதுகளை இந்திய அரசு அறிமுகப்படுத்தியது.
1959 – முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கீர்த்தி ஆசாத் பிறந்தநாள்.
1988 – கடத்தல் மன்னன் வரதராஜன் முதலியார் காலமானார்.
ஸ்க்ரப் டைபஸ் எனப்படும் பாக்டீரியா தொற்று தமிழகத்தில் அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ரிக்கட்ஸியா எனப்படும் பாக்டீரியா பாதித்த ஒட்டுண்ணிகள், பூச்சிகள், உயிரினங்கள் மனிதர்களை கடிக்கும்போது அவர்களுக்கு இந்நோய் ஏற்படுகிறது. காய்ச்சல், தலைவலி, உடல்சோர்வு இதன் அறிகுறிகளாகும். இதற்கு உரிய சிகிச்சை பெறவில்லையெனில், நுரையீரல், சிறுநீரகம் சார்ந்த பாதிப்பு ஏற்படலாம் என எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் பெயர்ப் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள இன்றே (ஜன.2) கடைசி நாளாகும். பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் தேர்வெண்ணுடன் கூடிய பெயர்ப்பட்டியல் டிச.24ம் தேதி வெளியிடப்பட்டது. இதில், விடுப்பட்ட மாணவர்களை சேர்க்கவும், மாற்றுச் சான்றிதழ் பெற்ற மாணவர்களை நீக்கவும் இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஹாஸ்பிட்டலில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி, குடிப்பழக்கத்தை கைவிடுமாறு அனைவரையும் கேட்டுக் கொண்டார். மது, போதைப்பொருள் இரண்டும் வாழ்க்கையை அழிப்பதாகவும், தயவுசெய்து அவற்றைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தினார். வாழ்க்கை மிகவும் அழகானது. அதை அனுபவியுங்கள், அழிக்காதீர் என்றார். விரைவில் தான் இயல்பு நிலைக்கு திரும்புவேன் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் கூறினார்.
▶எளிமை என்பது எளிதான விடயம் அல்ல. ▶ஒரு மனிதனின் உண்மையான குணம் அவன் போதையில் இருக்கும்போது வெளியே வரும். ▶உங்கள் வலி ஒருவருக்கு சிரிப்பை ஏற்படுத்தலாம் ஆனால் உங்கள் சிரிப்பு யாருக்கும் வலியை ஏற்படுத்தக்கூடாது. ▶நீங்கள் கீழேயே பார்த்துக்கொண்டிருந்தால், உங்களால் ஒருபோதும் வானவில்லைக் காணமுடியாது. ▶புத்திசாலித்தனத்தை விட, அன்பும் கருணையுமே இப்போது இந்த பூமிக்கு தேவை.
– சார்லி சாப்ளின்
சபரிமலை ஐயப்பன் கோவிலில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் நோக்கில், வனப்பகுதி வழியாக பக்தர்கள் செல்வதற்காக வழங்கப்பட்ட சிறப்பு பாஸ் வசதி, தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது மகரவிளக்கு, மண்டல பூஜைக்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்துக்காக வருகின்றனர். இதனால், சன்னிதானத்தில், ஐயப்பனை தரிசனம் செய்ய பக்தர்கள் நீண்டநேரம் காத்திருப்பதை தடுக்கும் நோக்கில், இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொது மக்களிடம் புழக்கத்தில் இருந்த 2,000 ரூபாய் நோட்டுகளில் 98.12% நோட்டுகள் திரும்ப பெறப்பட்டதாக RBI கூறியுள்ளது. இன்னும் ₹6,691 கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்கு வரவில்லை என தெரிவித்துள்ளது. 2023ம் ஆண்டு மே.19ம் தேதி புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக RBI அறிவித்தது. தொடர்ந்து, வங்கிக்கு திரும்பிய நோட்டுகள் குறித்த விவரங்களை RBI வெளியிட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் இன்று அரையாண்டு விடுமுறை முடிந்து, மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகிறது. பெஞ்சல் புயல் காரணமாக, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு இருந்தன. அத்தேர்வுகள் இன்று முதல் 10ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. இதனுடன், டிச.12ம் தேதி 21 மாவட்டங்களில் ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வும் நடைபெற உள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் மட்டும் ₹23.25 லட்சம் கோடி மதிப்பிலான UPI பரிவர்த்தனை நடந்துள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனை அறிமுகப்படுத்தப்பட்ட 2016 முதல், இதுவே அதிகபட்ச பரிவர்த்தனையாகும். முன்னதாக, கடந்த நவம்பரில் ₹21.55 லட்சம் கோடி பரிவர்த்தனைகள் நடந்துள்ளது. அது டிசம்பரில் 8% அதிகமாக நடந்துள்ளது. கடந்த 2023ஐ காட்டிலும் 46% UPI பரிவர்த்தனை 2024ல் அதிகரித்துள்ளதாக NCPI தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.