News January 2, 2025
இன்றே கடைசி: பள்ளிகளுக்கு தேர்வுத்துறை உத்தரவு

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் பெயர்ப் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள இன்றே (ஜன.2) கடைசி நாளாகும். பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் தேர்வெண்ணுடன் கூடிய பெயர்ப்பட்டியல் டிச.24ம் தேதி வெளியிடப்பட்டது. இதில், விடுப்பட்ட மாணவர்களை சேர்க்கவும், மாற்றுச் சான்றிதழ் பெற்ற மாணவர்களை நீக்கவும் இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News February 10, 2026
4-வது நாளே பிரேமலதா அதிர்ச்சி

கூட்டணியை இறுதி செய்யாத நிலையில், தேமுதிக சார்பில் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கான விருப்ப மனு விநியோகம் செய்யப்படுகிறது. ஆனால், விருப்ப மனு வாங்க நிர்வாகிகள் ஆர்வம் காட்டாததால், தேமுதிக அலுவலகம் வெறிச்சோடியது. பிப்.12-க்குள் மனுக்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும் என்ற நிலையில், 4-வது நாளான நேற்று (பிப்.9) விருப்ப மனுவை வாங்க ஒருவர் கூட வரவில்லை என்பதால் பிரேமலதா அதிர்ச்சி அடைந்துள்ளார்.
News February 10, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (பிப்.10) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News February 10, 2026
செல்வபெருந்தகை அப்படி சொல்லவே இல்லை: காங்.,

ராமதாஸ், திமுக கூட்டணியில் இடம் பெற வேண்டும் என செல்வப்பெருந்தகை கூறியதாக வெளிவந்த செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என்று காங்., கமிட்டி விளக்கமளித்துள்ளது. கூட்டணி விவகாரத்தில் திமுக தலைமைதான் முடிவெடுக்கும் என்று மட்டும்தான் அவர் கூறியிருந்தார். ஆனால், ஊடகங்களில் வெளியான ஆதாரமற்ற செய்திகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு, விசிக MLA பாலாஜி கண்டனம் தெரிவித்தது கண்டிக்கத்தக்கது என்று சாடியுள்ளது.


