India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அஸ்வினை விரைவில் மஞ்சள் ஜெர்சியில் காண ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்த ரவிச்சந்திரன் அஸ்வின் தொடர்பாக அவர் தனது X பதிவில், “நம்பமுடியாத நினைவுகளை அளித்த அஸ்வினுக்கு நன்றி. இத்தனை வருடங்களாக நீங்கள் செய்த சாதனைகளுக்கு வாழ்த்துகள். கிரிக்கெட் உலகம் நிச்சயமாக ஒரு சாம்பியன் பந்து வீச்சாளரை மிஸ் செய்யும்” எனக் கூறியுள்ளார்.
அம்பேத்கர் கடவுள் போன்றவர். அவரை உள்துறை அமைச்சர் அமித்ஷா அவமதித்துவிட்டார். ஆகவே, அவர் இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சிவசேனா (உத்தவ் தாக்கரே) கட்சியை சேர்ந்த ஆதித்ய தாக்கரே கூறியுள்ளார். ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலும் அமித்ஷாவுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அம்பேத்கரை அவமதித்த அமித்ஷா மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இசை & நடிப்பு என 2 துறையிலும் பயணிக்கும் G.V.பிரகாஷ்குமார், ‘சூரரைப்போற்று’ படத்தை அடுத்து சுதா கொங்கரா இயக்கும் ‘SK25’ படத்திலும் இணைந்துள்ளார். இது, இவர் இசையமைக்கும் 100ஆவது படமாகும். இது குறித்து அவர் நெகிழ்ச்சியுடன் X தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “இது ஒரு ஆழமான பயணம். இந்த பயணத்திற்கு உறுதுணையாக இருந்த நடிகர்கள், இயக்குநர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிப்பதால், மசோதாவை ஆராய்ந்து, பரிந்துரைகள் வழங்க லோக் சபாவின் 21 பேர், ராஜ்ய சபாவின் 10 பேர் என 31 MPக்கள் கொண்ட கூட்டுக்குழு (JPC) அமைக்கப்பட்டுள்ளது. இதில் திமுகவை சேர்ந்த செல்வகணபதி, வில்சன் இருவரும் இடம்பெற்றுள்ளனர். தவிர, பிரியங்கா காந்தி, மணீஷ் திவாரி, தர்மேந்திர யாதவ், ஹரீஷ் பாலயோகி, உள்ளிட்டோரும் JPC-இல் இடம்பெற்றுள்ளனர்.
மும்பையில் நடந்த படகு விபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என மகாராஷ்டிரா CM தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்துள்ளார். இன்று மாலை 3.55 மணிக்கு மும்பை அருகே புசார் தீவில் கடற்படை படகு இன்ஜின் கோளாறு ஏற்பட்டதால் பயணிகள் படகில் மோதியது. இதுவரை 101 பேர் மீட்கப்பட்டதாகவும் 13 பேர் உயிரிழந்ததாகவும் CM தெரிவித்தார். மீட்புப் பணிகள் தொடர்ந்து வருகின்றன.
நாட்டின் உயரிய விருதான ‘பாரத் ரத்னா’ விருதை, அவர் மறைந்தபின்னும் அம்பேத்கருக்கு காங்கிரஸ் அரசு வழங்கவில்லை. மாறாக, தங்களுக்கே காங்கிரஸ் தலைவர்கள் அந்த விருதை வழங்கிக் கொண்டனர் என்று அமித்ஷா கடுமையாக விமர்சித்துள்ளார். 1955-ல் நேரு, 1971-ல் இந்திரா காந்தி ஆகியோர் தங்களுக்கே விருது கொடுத்துக் கொண்டனர். 1990களில் தான் அம்பேத்கருக்கு ‘பாரத் ரத்னா’ வழங்கப்பட்டது என அவர் நினைவூட்டினார்.
மூத்த ஹாலிவுட் நடிகரும், இயக்குநருமான தாமஸ் பர்லேக் (92) காலமானார். கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்த அவர், தொலைக்காட்சித் தொடர்களில் கவுபாய் வேடங்களில் நடித்தார். அதேபோல், கன் ஸ்மோக், வில் டிராவல் உள்ளிட்ட ஹாலிவுட் படங்களிலும் அவர் நடித்துள்ளார். உடல்நலக்குறைவு ஏற்பட்டு தனியார் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் காலமானார். அவருக்கு இறுதிச்சடங்கு நாளை கொச்சியில் நடைபெறவுள்ளது.
அம்பேத்கர் குறித்த அமித்ஷாவின் கருத்தை ஏற்க முடியாது என தேமுதிக தலைவர் பிரேமலதா கூறியுள்ளார். அமித்ஷா, அம்பேத்கர் பற்றிய விமர்சனத்தை திரும்பப் பெறப்பட வேண்டும் எனவும், இதற்காக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இனிமேல் முக்கியமான தலைவர்களைப் பற்றிப் பேசும்போது யாராக இருந்தாலும் பொறுப்புடன், சிந்தித்து பேச வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அட்லீ அடுத்ததாக சல்மான் கானை இயக்க உள்ளதை உறுதி செய்துள்ளார். ‘தெறி’ படத்தின் ஹிந்தி ரிமேக்கான ‘பேபி ஜான்’ பட புரமோஷனில் பேசிய அவர், சல்மான் கானுடனான புதிய படத்திற்கு தற்காலிகமாக ‘ஏ6’ என பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், இந்த படம் அதிக நேரத்தையும், சக்தியையும் எடுத்துக் கொள்வதாகவும், இப்படம் நாட்டை பெருமைப்படுத்தும் வகையில் இருக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
டெல்லியில் 3-வது முறையாக ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில் இருக்கும் ஆம் ஆத்மி அடுத்து கையில் எடுத்துள்ள திட்டம் சஞ்சீவனி. இந்த திட்டத்தின் மூலம் 60 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கு அரசு, தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை அளிக்கப்படவுள்ளது. வருமான பேதமின்றி அனைத்து ரேஷன் அட்டைதாரர்களும் பயனடையும் இத்திட்டம் ஆட்சிக்கு வந்ததும் அமலாகும் என்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்.
Sorry, no posts matched your criteria.