India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரசியலமைப்புக்கு எதிராக பேசிய நீதிபதியை பதவியை விட்டு நீக்கும் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் துணிச்சல் கூட அதிமுகவுக்கு இல்லை என்று உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். கோவையில் நிகழ்வொன்றில் பேசிய அவர், “பாஜக கொண்ட வந்த ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்துக்கும் அதிமுக ஆதரவு கொடுத்துள்ளது. இப்படிப்பட்ட அதிமுகவை சில சிறுபான்மை அமைப்புகள் நம்புவது எனக்கு கவலை அளிக்கிறது” என்றார்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்த ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது X பதிவில், “அஸ்வின், சிறந்த மேட்ச் வின்னர்களில் ஒருவர். Carom Ball டெலிவரியை திறம்பட செய்வதில் தொடங்கி வெற்றிக்கு பங்களிப்பது வரையில் அஞ்சாமல் நீங்கள் மேற்கொண்ட பரிசோதனை முயற்சி மகத்தானது. உங்களது 2வது இன்னிங்ஸிற்கு வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் ஆட்சியின் போது அம்பேத்கருக்கு பாரத ரத்னா வழங்கவில்லை, ஆனால் பாஜகதான் வழங்கியதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். பார்லி.யில் அம்பேத்கர் புகைப்படத்தை 1990ல் பாஜக வைத்ததாகவும், 1952 மற்றும் 1954 தேர்தல்களில் அம்பேத்கருக்கு எதிராக நேரு வேட்பாளர்களை நிறுத்தியதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். அதேவேளையில், அம்பேத்கர் பிறந்தநாளை தேசிய விடுமுறை தினமாக அறிவித்ததும் பாஜகதான் என தெரிவித்துள்ளார்.
நாட்டிலேயே தமிழகத்தில்தான் 2022ஆம் ஆண்டில் அதிக சாலை விபத்து நிகழ்ந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பதில் தாக்கல் செய்துள்ளார். அதில் அவர், 2022ஆம் ஆண்டில் நாட்டில் 4,61,312 விபத்துகள் நேரிட்டு இருப்பதாகவும், இதில் தமிழகத்தில்தான் அதிக சாலை விபத்துக்கள் என்றும் கூறியுள்ளார்.
லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா, சந்திரமுகி பட அனுபவம் குறித்து பேசியுள்ளார். அவர் கூறுகையில், சந்திரமுகி படத்தில் எனது முதல் காட்சி ரஜினி சாருடன் இருந்தது. அப்போது அவர் அவ்வளவு பெரிய நடிகர்னு எனக்கு தெரியாது. அதுதான் எனக்கு ப்ளஸ் ஆக மாறியது. ஒருவேளை எனக்கு தெரிந்திருந்தால் பயம் வந்திருக்கும். ஸ்டார் வேல்யு தெரியாதது எனக்கு உதவியாக இருந்தது எனக் கூறினார்.
3 ஆண்டுகளாக யூடியூப் சேனலை நடத்தி வந்த நளினி உன்னாகர் எடுத்துள்ள முடிவு, யூடியூபர்களாக வர நினைப்போருக்கு எச்சரிக்கை மணியை அடித்துள்ளது. இதுவரை 250 வீடியோக்களை பதிவிட்ட போதிலும், அவர் ரீச் ஆகவில்லை. இதனால் தனது யூடியூப் சேனலை நிரந்தரமாக மூட முடிவு செய்து, வீடியோ உபகரணங்களை விற்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும், யூடியூபில் வெற்றி பெற திறமையை விட லக்கும் அவசியம் எனவும் கூறியுள்ளார்.
இன்றோடு கிரிக்கெட்டிற்கு Good bye சொன்ன அஸ்வினுக்கு ₹132 கோடி சொத்து மதிப்பு உள்ளது. இந்திய அணிக்காக விளையாடும் போது, BCCI அவருக்கு ஆண்டுதோறும் ₹10 கோடி வழங்கி வந்துள்ளது. IPLல் RRக்காக விளையாடிய ஒவ்வொரு சீசனுக்கும் ₹5 கோடி சம்பளம் பெற்றுள்ளார். சமீபத்தில் நடந்த மெகா ஏலத்தில் CSK அணி அவரை ₹9.75 கோடிக்கு எடுத்துள்ளது. இதுபோக, Myntra, Oppo, Coca cola நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளார்.
கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு விஜய்யும், த்ரிஷாவும் ஒன்றாக விமான நிலையத்தில் இருந்த புகைப்படம் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்த அண்ணாமலை, விஜய்யின் ப்ரைவெட் ஃபோட்டோவை வெளியிட்டது யார் என கேள்வியெழுப்பினார். மேலும், மாநில உளவுத்துறையில் இருப்பவர்களுக்கு இதுபோன்ற ஃபோட்டோக்களை திமுக ஐடி விங்குக்கு அனுப்புவதுதான் வேலையா எனவும் அவர் வினவியுள்ளார்.
இந்திய அரசியலமைப்பு சட்டம் வலியுறுத்தும் மதச்சார்பின்மை கொள்கையை திராவிட மாடல் அரசு எந்நாளும், எந்த நிலையிலும் பாதுகாக்கும் என முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். சிறுபான்மையினருக்கு திமுக என்றென்றும் அரணாக திகழும் எனவும், இந்திய அளவில் தற்போது நிலவக்கூடிய சூழல் கவலைப்பட வைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், ஒற்றுமையுடன் செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயம் எனவும் கூறியுள்ளார்.
➤மேஷம் – செலவு
➤ரிஷபம் – ஆதாயம்
➤மிதுனம் – வரவு
➤கடகம் – தடங்கல்
➤சிம்மம் – நன்மை
➤கன்னி – சுகம்
➤துலாம் – பெருமை
➤விருச்சிகம் – நலம்
➤தனுசு – கீர்த்தி ➤மகரம் – உழைப்பு
➤கும்பம் – உதவி ➤மீனம் – அலைச்சல்
Sorry, no posts matched your criteria.