news

News December 19, 2024

டெஸ்ட் கிரிக்கெட் கிங் ’பூம் பூம் பும்ரா’

image

AUS அணிக்கு எதிராக நடைபெற்று வரும் BGT போட்டிகளில் இந்திய பவுலர் பும்ரா பல சாதனைகளைத் தகர்த்துள்ளார். இந்நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டு முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய பவுலர்களின் பட்டியலில் 85(36 inns) பும்ரா முதலிடம் பிடித்துள்ளார். 2வது இடத்தில் சிராஜ் 74(38inns), ரபாடா 73(28inns), ஷாஹீன் அஃப்ரிடி 67(29inns), ஜேம்ஸ் அண்டர்சன் 57(28inns) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

News December 19, 2024

‘இந்தியன் 3’ தியேட்டரில் ரிலீஸாகும்: ஷங்கர்

image

‘இந்தியன் 3’ திரைப்படம் நிச்சயம் தியேட்டரில் ரிலீஸாகும் என இயக்குநர் ஷங்கர் உறுதியளித்துள்ளார். ‘இந்தியன் 2’ படத்திற்கு நெகட்டிவ் ரிவ்யூ வருமென தான் எதிர்பார்க்கவில்லை எனக் கூறிய அவர், ‘கேம் சேஞ்சர்’ மற்றும் ‘இந்தியன் 3’ படங்களில் சிறந்த பங்களிப்பை வழங்க முயற்சித்து வருவதாகவும் கூறியுள்ளார். முன்னதாக, ‘இந்தியன் 3’ திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாக வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டது.

News December 19, 2024

H-1B விசா விதிமுறையில் தளர்வு.. யாருக்கு சாதகம்?

image

H-1B விசா விதிமுறையில் தளர்வு செய்யப்பட்டுள்ளதாக US அரசு தெரிவித்துள்ளது. இந்த வகை விசாக்கள் மூலம் தான் இந்தியர்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கான வெளிநாட்டினர் அமெரிக்காவில் பணிபுரிந்து வருகின்றனர். F1 விசாக்களை பெற்றுள்ள மாணவர்கள் அதனை H-1B விசாக்களாக எளிமையாக மாற்றம் செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 2023இல் மட்டும் 3,86,000 இந்தியர்கள் H-1B விசாவில் USA சென்றுள்ளனர்.

News December 19, 2024

விஜய்யின் கருத்தை ஆதரிக்கும் அண்ணாமலை

image

தமிழகத்தில் தற்போது ஐந்து முனை அரசியல் போட்டி நிலவுவதாகவும் 2026ஆம் ஆண்டு தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான் அமையும் என்றும் பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மாநிலத்திலும் கூட்டாட்சி அமைய வேண்டும் என்ற தவெக தலைவர் விஜய்யின் அறைகூவலை அண்ணாமலை ஆதரித்திருக்கிறார். ஏற்கெனவே விசிக இதே நிலைப்பாட்டில் இருக்கும் நிலையில் திமுக, அதிமுக கட்சிகள் மவுனம் சாதிக்கின்றன.

News December 19, 2024

அம்பேத்கர் இல்லாத அரசியல் இனி கிடையாது

image

அரசியலமைப்பு சட்டம், தேச கட்டுமானம், எண்ணற்ற உரிமைகள் என அம்பேத்கர் நாட்டுக்கு மாபெரும் பங்களிப்பு செய்தும், சுதந்திரத்துக்கு பின் 40 ஆண்டுகள் பெரிய கட்சிகளால் புறக்கணிக்கப்பட்டே வந்துள்ளார். ஆனால், 90களில் எழுந்த தலித் அரசியல் எழுச்சி, ஜனநாயகத்தில் ஏற்பட்டுவரும் முதிர்ச்சி, அரசியல் நெருக்கடிகள் ஆகியவற்றால், முன்பு எப்போதையும் விட இந்திய அரசியலில் அம்பேத்கர் தவிர்க்க முடியாதவராகி விட்டார்.

News December 19, 2024

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி

image

அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு வரலாற்றில் முதல் முறையாக ₹85க்கு கீழ் வீழ்ந்திருக்கிறது. இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தில் ஒரு டாலரின் மதிப்பு ₹85.17ஐ தொட்டது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் ₹83ஆக இருந்த டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ஒரே ஆண்டில் ₹2க்கு மேல் சரிந்திருக்கிறது. இந்திய பங்குச்சந்தைகளும் கடந்த இரண்டு நாள்களாக கடும் வீழ்ச்சி கண்டிருக்கிறது.

News December 19, 2024

தொடங்கிய ஒரே நிமிடத்தில் ஒத்திவைக்கப்பட்ட மக்களவை

image

மக்களவை கூட்டம் தொடங்கிய ஒரே நிமிடத்தில் அவை ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பார்லி., வளாகத்தில் பாஜக, எதிர்க்கட்சிகள் இருதரப்பினரும் மோதிக் கொண்டதில் எம்பி ஒருவரின் மண்டை உடைந்தது. இந்நிலையில், மக்களவை தொடங்கியதும் அவையில் கட்டுப்படுத்த முடியாத அமளி ஏற்பட, பிற்பகல் 2 மணி வரை அவை ஒத்தி வைக்கப்படுவதாக அவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவித்தார். தொடர்ந்து மாநிலங்களவையும் ஒத்திவைக்கப்பட்டது.

News December 19, 2024

EPSக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

image

எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச் செயலாளராக அங்கீகரித்ததை மறுபரிசீலனை செய்யக் கோரிய மனுக்களை சென்னை HC தள்ளுபடி செய்தது. விளம்பர நோக்கத்தில் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். அதிமுகவைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், சுரேன் பழனிச்சாமி ஆகியோர் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தனர்.

News December 19, 2024

24,000 support levelஐ உடைத்த நிஃப்டி

image

இந்திய பங்குச்சந்தையில் தேசிய குறியீட்டெண் நிஃப்டி 250 புள்ளிகள் சரிந்து, 24,000 support level-க்கு கீழ் வர்த்தகமாகி வருகிறது. இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவதும், FII பங்குகளை விற்பதும் இதற்கான காரணங்களாகக் கூறப்படுகிறது. US பெடரல் ரிசர்வ் பென்ச்மார்க் வட்டியை 0.25% குறைத்தது இந்தியாவுக்கு சாதகமாகப் பார்க்கப்பட்டது. எனினும், 2025இல் 2 ரேட் கட் மட்டுமே இருக்கும் என்பதை சந்தை ஏற்கவில்லை.

News December 19, 2024

ராகுல் காந்தி தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம்

image

டெல்லியில், ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்பிக்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. குளிர்கால கூட்டத்தொடர் நாளையுடன் நிறைவடைய உள்ள நிலையில், அம்பேத்கர் குறித்த அமித் ஷா பேச்சு, ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!