India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புரோ கபடி லீக் தொடரில் குஜராத் அணியை வீழ்த்தி உ.பி. யோத்தாஸ் அபார வெற்றி பெற்றுள்ளது. தொடக்கத்தில் இருந்தே சிறப்பாக விளையாடிய உ.பி. யோத்தாஸ் அணி ஆட்ட நேர முடிவில் 59-23 என்ற புள்ளிகள் கணக்கில் வென்றது. இந்த தொடரில் 12 அணிகள் பங்கேற்றுள்ள நிலையில், 79 புள்ளிகளுடன் ஹரியானா அணி முதலிடத்தில் உள்ளது. பாட்னா, உ.பி அணிகள் தலா 74 புள்ளிகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
தென்கொரிய கார் நிறுவனமான Kia தனது புதிய SUV மாடலான Syros-ஐ இந்தியாவிலிருந்து அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவின் எஸ்யூவி மார்க்கெட்டில் 15 சதவீதம் கைப்பற்றியுள்ள Kia, இந்தாண்டு மட்டும் 3 லட்சம் கார்களை விற்பனை செய்துள்ளது. பெட்ரோல், டீசல் என 2 விதமான ஆப்ஷனில் கிடைக்கும் Syros-ன் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.10 லட்சம்- ரூ.15 லட்சத்துக்குள் நிர்ணயிக்கப்படலாம். இதற்கான புக்கிங் ஜனவரியில் தொடங்குகிறது.
➤மேஷம் – நன்மை ➤ரிஷபம் – தாமதம் ➤மிதுனம் – நிம்மதி ➤கடகம் – குழப்பம் ➤சிம்மம் – வரவு ➤கன்னி – பக்தி ➤துலாம் – பேராசை ➤விருச்சிகம் – அமைதி ➤தனுசு – வெற்றி ➤மகரம் – நலம் ➤கும்பம் – ஆர்வம் ➤மீனம் – பொறாமை
ராகுல் காந்தி மீது நாகலாந்து பெண் எம்.பி. பாங்னோன் கொன்யாக் பரபரப்பு புகார் அளித்தது தொடர்பாக வானதி சீனிவாசன் கருத்து தெரிவித்துள்ளார். பழங்குடியின பெண் எம்.பி.யை அவமதித்த ராகுல் காந்தி உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என வானதி வலியுறுத்தியுள்ளார். முன்னதாக, நாடாளுமன்றத்தில் தனக்கு மிக அருகே ராகுல் நின்றது அசெளகர்யமாக இருந்ததாக பாங்னோன் கொன்யாக் புகார் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
WI மகளிர் அணிக்கு எதிரான 3ஆவது டி20 போட்டியில், IND அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த IND அணி, 4 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்களை எடுத்தது. கேப்டன் ஸ்மிரிதி மந்தனா அதிகபட்சமாக 77 ரன்களை விளாசினார். அடுத்து களமிறங்கிய WI அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 157 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. 2-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியது.
பொங்கல் பரிசுத்தொகையாக ரூ.1000-ஐ தமிழக அரசு வழங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தொகையை வங்கியில் செலுத்த அரசு முதலில் முடிவு செய்திருந்தது. ஆனால், சிலரது அக்கவுண்ட்டுகளில் மினிமம் பேலன்ஸ் இல்லாமல் இருந்தால், பொங்கல் பரிசை வங்கியே எடுத்துவிடும் என்பதை அதிகாரிகள் அரசுக்கு சுட்டிக்காட்டினர். இதையடுத்து, ரேஷன் கடைகளிலேயே பொங்கல் பரிசை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமித்ஷா கூறிய வார்த்தைகள், அம்பேத்கரின் கண்ணியத்தை வெகுவாக காயப்படுத்தி உள்ளதாக மாயாவதி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், தான் கூறிய வார்த்தைகளை திரும்பப் பெற்று வருத்தம் தெரிவிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். அதை செய்யத் தவறும் பட்சத்தில், பாபா சாகேப்பிற்கு காங்கிரஸ் செய்ததை, மக்கள் எப்படி மறக்காமல் உள்ளனரோ, அதேநிலை தான் பாஜகவிற்கும் ஏற்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
அவதூறு வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கரை, மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். தமிழக அரசின் தூய்மை பணியாளர் திட்டம் குறித்து அவதூறு பரப்பும் வகையில் வீடியோ வெளியிட்ட வழக்கில், இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, கஞ்சா வழக்கில் வாரண்ட் அடிப்படையில் கைதான அவர், தற்போது மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
1) ரிஷபம்: திருமண ஸ்தானமான 7ம் இடத்தில் இருந்த சனி பகவான் மார்ச் மாதத்துடன் 7ம் இடத்திலிருந்து விலகுவதால், நிச்சயம் டும்டும்டும்தான். 2) மிதுனம்: குரு வக்கிரப் பார்வையால் பிப்.7வரை திருமணம் தள்ளிப்போகும். அதன்பிறகு உங்களுக்கு நீங்கள் எதிர்பார்த்தபடி வரன் அமையும். 3) கடகம்: உங்களுக்கு மார்ச்சுடன் வக்கிர சனி முடிவதால் திருமண யோகமும், வீடுமனை யோகமும் சேர்ந்து வரப்போகிறது. அப்புறம் என்ன..ஜாலிதானே
மோசடிக்காரர்கள் அப்டேட் ஆகிக்கொண்டே இருக்கும் போது, நாமும் அப்டேட் ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையத்தில் (TRAI) இருந்து பேசுகிறோம் எனக்கூறி தனிப்பட்ட தகவல்களை பெறுவது ஏமாற்றுகாரர்களின் தற்போதைய ட்ரெண்டாக உள்ளது. இதை உணர்ந்த TRAI, தனிப்பட்ட பயனர்களுக்கு நாங்கள் போன் போட மாட்டோம் எனவும், உஷாராக இருக்கவும் எச்சரித்துள்ளது. உங்களுக்கும் இதுபோன்று போன் வந்துள்ளதா.
Sorry, no posts matched your criteria.