News January 10, 2025
ஒரே டிப்ரஷனா? கவலைப் படாதீங்க!

டிப்ரஷனை உடனே சரிசெய்ய முடியாது. ஆனால், இதையெல்லாம் follow செய்தால் உங்கள் மகிழ்ச்சியை மீட்கலாம்: *STRESS-ஐ குறையுங்கள் *தேவையான அளவு தூங்கவும் *சத்தான, உற்சாகமூட்டும் உணவுகள் சாப்பிடுங்கள் *நெகடிவ் எண்ணங்களை தவிருங்கள் *எதையும் தள்ளிப் போடாதீர் *தினசரி வீட்டு வேலைகளில் கவனம் செலுத்தவும் *உங்கள் உணர்வுகளை புரிந்து ஆதரவு காட்டுபவர்களுடன் தொடர்பில் இருங்கள் *மனநல கவுன்சலரிடம் ஆலோசனை பெறலாம்.
Similar News
News November 8, 2025
FLASH: தங்கம் விலை குறைந்தது

தினமும் ₹1,000, ₹2,000 என எகிறிய தங்கம் விலை, இந்த வாரம் மக்களுக்கு மகிழ்ச்சியையே கொடுத்துள்ளது. இந்த வார வர்த்தகம் இன்று மாலையுடன் நிறைவடைந்திருக்கிறது. கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் தற்போதைய விலை சற்று குறைந்து 22 கேரட் தங்கம் 1 சவரன் ₹90,400-க்கு விற்பனையாகி வருகிறது. இது முந்தைய வார விலையை விட ₹80 குறைவாகும். இதேபோல், ஒரு வாரத்தில் வெள்ளி கிலோவுக்கு ₹1,000 குறைந்திருக்கிறது.
News November 8, 2025
மார்க்ஸ்.. பெரியார்.. அம்பேத்கர்: ஜனநாயகனின் அரசியல்

ஜனநாயகன் படத்தின் முதல் பாடலான <<18236201>>‘தளபதி கச்சேரி’யின்<<>> பீட் ஃபுல் பவர்பேக்டாக மட்டுமல்ல, விஜய்யின் அரசியலை பேசுவதாகவும் உள்ளது. காலம் பொறக்குது… தனக்குனு வாழாத, தரத்திலும் தாழாத.. புது வழி என்றெல்லாம் வருகிறது. அதிலும் ‘ஜாதி பேதமெல்லாம் லேதய்யா’ என்ற வரிக்கு காரல் மார்க்ஸ், பெரியார், அம்பேத்கர் உருவங்களை காண்பித்து, தனது அரசியல் வழியை விஜய் அடித்துச் சொல்கிறார் என்கின்றனர் ரசிகர்கள்.
News November 8, 2025
முடி கொட்டுதா? அப்போ இத யூஸ் பண்ணுங்க!

நோயில்லாத வாழ்வுக்கு தினமும் முருங்கையை உணவில் சேர்க்க வேண்டும் என சொல்வர். இத்தனை சிறப்பு மிக்க முருங்கையில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய், முடி உதிர்வுக்கும் அருமருந்தாகிறதாம். முருங்கை விதைகளை காயவைத்து பொடியாக்கி, தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி, எடுத்துக்கொள்ளுங்கள். வாரத்திற்கு 2 முறை இந்த எண்ணெயை தலையில் தேய்த்துவர முடி உதிர்வு குறையுமாம். முடி எல்லாருக்கும் கொட்டுது, SHARE THIS.


