news

News October 31, 2025

இதை சாப்பிட்டால் சர்க்கரை நோய் வரும்! WARNING

image

Cakes, chips, cookies, crackers, fried foods, margarine & ultra processed உணவுகளை அதிகம் சாப்பிடுவது தான் இந்தியர்களிடையே சர்க்கரை நோய் அதிகரிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. ICMR- MDRF இணைந்து நடத்திய ஆய்வில், இவ்வகை உணவுகளில் நிறைந்திருக்கும் Glycation end products (AGEs) எனப்படும் உட்பொருட்கள், நச்சுத்தன்மையை உண்டாக்கி சர்க்கரை நோய்க்கு வழிவகுப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உஷாரா இருங்க மக்களே!

News October 31, 2025

இனி இந்த 6 வகை நாய்களை வளர்க்க தடை!

image

நாய்களால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், சண்டிகர் மாநகராட்சியில் 6 வகை நாய்களை வளர்க்கவும், வாங்கவும், விற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. American bulldog, American Pitbull, Bull Terrier, Rottweiler, Cane Corso, Dogo Argentino போன்ற நாய்கள் உயிருக்கு அச்சுறுத்தலான விலங்கு என பட்டியலிடப்பட்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் இது போன்ற நடவடிக்கை தேவையா?

News October 31, 2025

BREAKING: விஜய் அதிரடி முடிவு

image

தவெக பொதுக்கூட்டங்கள், பிரசாரம், மக்கள் சந்திப்பு நிகழ்வுகளில் பாதுகாப்பு திட்டமிடலுக்காக காவல் துறையில் ஓய்வு பெற்ற உயர் அதிகாரிகள் கொண்ட குழுவை உருவாக்க விஜய் திட்டமிட்டுள்ளார். இந்தக் குழுவில் ஓய்வுபெற்ற IB இயக்குனர், DGP, ADGP உள்ளிட்ட 15 அதிகாரிகள் இடம்பெறுகின்றனர். இந்த அதிகாரிகள் குழு பாதுகாப்பு திட்டமிடல், கட்சியின் தொண்டர் அணிக்கான பயிற்சி மற்றும் ஆலோசனைகளை வழங்குவார்கள்.

News October 31, 2025

மகனை குடும்பத்துடன் கொன்ற தந்தைக்கு தூக்கு!

image

கேரள மாநிலம் இடுக்கியில், கொலை வழக்கில் 82 வயது முதியவரான ஹமீத்துக்கு மரண தண்டனை விதித்து தொடுபுழா கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2022-ல் ஹமீத் சொத்து தகராறில், உறங்கி கொண்டிருந்த தனது மகன், மருமகள் மற்றும் 2 பேரக்குழந்தைகளை எரித்து கொலை செய்தார். வழக்கு விசாரணையின் போது, இந்த கொலை அரிதிலும் அரிதானது என்ற பிரிவுக்குள் வருவதாக கூறி நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

News October 31, 2025

பிரபல தமிழ் நடிகருக்கு திருமணம் முடிந்தது PHOTO❤️❤️

image

பெரும் வெற்றி பெற்ற ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் இயக்குநரும், நடிகருமான அபிஷன் ஜீவிந்துக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. தனது நீண்ட நாள் காதலியான அகிலாவை பெற்றோர்கள் சம்மதத்துடன் அபிஷன் கரம் பிடித்தார். டூரிஸ்ட் பேமிலி படத்தில் சின்ன ரோலில் நடித்திருந்த அபிஷன், தற்போது செளந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில் ஒரு படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

News October 31, 2025

டிரம்ப்புக்கு ஆப்பு வைத்த சொந்த கட்சியினர்

image

பிற நாடுகள் மீது டிரம்ப் விதிக்கும் வரிகளுக்கு எதிராக 3வது முறையாக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் டிரம்ப்பின் சொந்த கட்சியினர்(குடியரசு கட்சி) 4 பேர் அவருக்கு எதிராக வாக்களித்திருப்பதுதான் ஹைலைட். ஆனால் எந்த தீர்மானத்தையும் நிராகரிக்கும் Veto அதிகாரம் அதிபரிடம் இருக்கிறது. இதனால் டிரம்ப் இதனை நிராகரிப்பார், இது வரி விதிப்பு நடவடிக்கைகளை நிறுத்தாது என கூறப்படுகிறது.

News October 31, 2025

2-வது T20: இந்திய அணி பேட்டிங்

image

மெல்பர்னில் நடக்கும் 2-வது T20-யில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இந்திய அணி: அபிஷேக் சர்மா, சுப்மன் கில், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, ஹர்ஷித் ராணா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி, பும்ரா. வெல்லுமா இந்த படை?

News October 31, 2025

TN-ல் மீண்டும் Ford: ₹3,250 கோடிக்கு ஒப்பந்தம்

image

கடந்த 2022-ல், ஏற்றுமதி சரிந்ததால் Ford நிறுவனம், TN-ல் செயல்பட்டு வந்த தனது ஆலையை மூடியது. இந்நிலையில், சமீபத்தில் CM ஸ்டாலின் அமெரிக்கா சென்றபோது, TN-ல் மீண்டும் கார் உற்பத்தியை தொடங்க Ford நிறுவனத்திற்கு அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை ஏற்று TN-ல் மீண்டும் தனது கார் உற்பத்தியை தொடங்குகிறது Ford. ₹3,250 கோடி மதிப்பிலான ஒப்பந்தம், தலைமைச் செயலகத்தில் CM முன்னிலையில் கையெழுத்தானது.

News October 31, 2025

நயினாருடன் அதிமுகவினர் ஆலோசனை

image

நெல்லை BJP ஆபீஸில் நயினாருடன் அதிமுக ex அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜு உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தியுள்ளனர். பசும்பொன்னில் OPS, TTV, செங்கோட்டையன் ஆகிய மூவரும் இணைந்து பேட்டியளித்த நிலையில் இந்த சந்திப்பு நடந்துள்ளது. இதுகுறித்து பேசிய ஆர்.பி.உதயகுமார், அந்த மூவர் சந்திப்பால் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை; ஒருநாள் பரபரப்புக்காக 3 பேரும் சந்தித்துள்ளனர் என்று விமர்சித்தார்.

News October 31, 2025

BREAKING: மாணவர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு

image

கடந்த 3 ஆண்டுகளாக மாணவர்களுக்கு இலவச laptop வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் மார்ச்சுக்குள் இலவச லேப்டாப்கள் விநியோகம் செய்யப்படும் என TN அரசு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. முதல்கட்டமாக 10 லட்சம் லேப்டாப்களை வழங்க HP, Dell, Acer ஆகிய நிறுவனங்களுக்கு தமிழக அரசு கொள்முதல் ஆணை வழங்கியுள்ளது. laptop விநியோக திட்டத்தை தொடங்குவது குறித்து DCM உதயநிதி தலைமையிலான குழு முடிவெடுக்கும்.

error: Content is protected !!