news

News December 26, 2024

பள்ளிக்கு விடுமுறை விட மாணவன் கொலை

image

உ.பி.யில் மாணவனை நரபலி கொடுத்ததாக, கடந்த SEPல் பள்ளி தலைமை ஆசிரியர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த விவகாரத்தில் திடுக்கிடும் திருப்பம் நிகழ்ந்துள்ளது. விடுமுறை விட வேண்டும் என்பதற்காக, பள்ளியில் படித்த 9 வயது சிறுவனை டவலை வைத்து கழுத்தை நெறித்து கொன்றதாக, மற்றொரு மாணவன் ஒப்புக் கொண்டுள்ளார். இதனை சிசிடிவி மூலம் உறுதி செய்த போலீசார், அவரை கைது செய்து, சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.

News December 26, 2024

சிக்கலில் ‘விடாமுயற்சி’.. ரிலீஸ் ஆகுமா?

image

‘விடாமுயற்சி’ பொங்கலுக்கு வெளியாவதில் சிக்கல் உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல் கசிந்துள்ளது. இப்படத்தின் ஒரிஜினல் கதையான ‘பிரேக் டவுன்’ ரிமேக் உரிமை பஞ்சாயத்தே இன்னும் முடியவில்லையாம். அந்த ஹாலிவுட் பட நிறுவனம் ₹100 கோடி கேட்ட நிலையில், தற்போது பேச்சுவார்த்தை நடத்திய பின், ₹30 கோடிக்கு சம்மதித்துள்ளார்களாம். அந்த பணத்தை லைகா நிறுவனம் கொடுத்தால்தான் படம் ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது.

News December 26, 2024

ADMK vs BJP யார் எதிர்க்கட்சி என்பதில் போட்டி; திருமா

image

தமிழகத்தில் அதிமுக எதிர்க்கட்சி அல்ல, பாஜக தான் எதிர்க்கட்சி என்று காட்டுவதற்கு அண்ணாமலை முயற்சிப்பதாக திருமா விமர்சித்துள்ளார். லண்டன் சென்று வந்த பிறகு, அவருக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. மகாத்மா காந்தியைப் போல் தன்னைத்தானே வருத்திக்கொள்ளும் போராட்டத்தை கையில் எடுக்கிறாரா என்றும் தெரியவில்லை என, மறைமுகமாக சாட்டை அடி போராட்டத்தை கிண்டலடித்துள்ளார்.

News December 26, 2024

சீனாவின் புதிய அணை; இந்தியாவுக்கு சிக்கலா?

image

பிரம்மபுத்ரா ஆற்றின் குறுக்கே மிகப்பெரிய அணை கட்டும் திட்டத்துக்கு சீனா ஒப்புதல் அளித்துள்ளது. இந்திய எல்லை அருகில் திபெத்தில் கட்டப்படும் இந்த அணையில் நீர்மின் திட்டமும் செயல்படுத்தப்படவுள்ளது. கட்டுமான மதிப்பீடு ரூ.16 லட்சம் கோடி. இந்தியாவுக்கு வரும் நீரின் அளவு, வேகத்தை இதன் மூலமாக சீனா கட்டுப்படுத்தும். பகை நேரங்களில் வெள்ளம்/ நீர் பற்றாக்குறையை திட்டமிட்டு ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.

News December 26, 2024

FIR லீக் ஆனது எப்படி?

image

அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தில், FIR லீக் ஆனது குறித்து சென்னை போலீஸ் கமிஷ்னர் அருண் விளக்கம் அளித்துள்ளார். பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை இணையத்தில் பதிவேற்றும் போது, அது தானாக பிளாக் ஆகிவிடும் எனவும், தற்போது புதிய BNS சட்டத்தில் வழக்குப்பதிவு செய்வதால், பிளாக் ஆவதில் தாமதம் மற்றும் புகார்தாரருக்கு கொடுக்கப்பட்ட நகல் ஆகிய 2 வழிகளில் லீக் ஆகியிருக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

News December 26, 2024

மன்மோகன் சிங் ஹாஸ்பிடலில் அட்மிட்

image

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு என்ன பாதிப்பு என்பது குறித்து, உறுதியான எந்த தகவலும் வெளியாகவில்லை. ஆனால், விரைவில் அவருக்கு என்ன உடல்நலப் பிரச்னை, எந்த மாதிரியான சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பது குறித்த மருத்துவ அறிக்கையை எய்ம்ஸ் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News December 26, 2024

‘96’ 2ஆம் பாகத்தின் ஷூட்டிங் எங்க தெரியுமா?

image

‘96’ படத்தின் 2ஆம் பாகத்தின் ஷூட்டிங் மலேசியா மற்றும் சிங்கப்பூரில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, 2ஆம் பாகம் குடும்பப் பிரச்னைகளை மையப்படுத்தி உணர்வுப்பூர்வமாக இருக்கும் என அப்படத்தின் இயக்குநர் பிரேம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

News December 26, 2024

மிடில் கிளாஸ் மக்களுக்கு குட் நியூஸ் சொல்லும் அரசு?

image

2025 பட்ஜெட்டில் வரி செலுத்துவோருக்கு மத்திய அரசு குட் நியூஸ் சொல்ல உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆண்டுக்கு ₹10.5 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கு, வரி விலக்கு அளிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. அதிகரித்து வரும் வாழ்வாதார செலவுகள் காரணமாக இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. கடந்த 2020 முதல் ₹3.5 லட்சம் -10.5 லட்சம் வருமானம் ஈட்டுவோருக்கு, 5-20% வரி விதிக்கப்பட்டு வருகிறது.

News December 26, 2024

இந்திய அணிக்கு குட் நியூஸ்

image

IND அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, நீண்ட இடைவேளைக்குப் பின் மீண்டும் ODI போட்டிகளில் களமிறங்க உள்ளார். விஜய் ஹசாரே டிராபி தொடரில் அவர் விளையாட உள்ளார். தொடர்ந்து, 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. காயம் காரணமாக ODIகளில் விளையாடாமல் இருந்த அவர், தற்போது முழு ஃபிட்னஸில் இருக்கிறார். கடந்த 2023 உலகக்கோப்பைதான் அவர் கடைசியாக விளையாடிய ODI.

News December 26, 2024

யார்_அந்த_SIR ? பதில் கேட்கும் இபிஎஸ்

image

காமக்கொடூரன் ஞானசேகரன் மேலும் ஒரு மாணவியை இதேபோன்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது என்று இபிஎஸ் சாடியுள்ளார். கைது செய்யப்பட்ட ஞானசேகரன், நேற்று இரவே விடுவிக்கப்பட்டு, மீண்டும் கைதானதாக கூறப்படுகிறது. FIR-ல் ஞானசேகரனுடன் இன்னொரு நபருக்கும் இதில் தொடர்பு உள்ளது தெரியவந்துள்ளது. யார்_அந்த_SIR ? என்று ஹேஷ்டேக்குடன் EPS கேள்வி எழுப்பியுள்ளார்.

error: Content is protected !!