news

News December 29, 2024

CM ஸ்டாலினை பாராட்டிய ப.சிதம்பரம்

image

புதுமைப் பெண் திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்ற அறிவிப்பை, ப.சிதம்பரம் வரவேற்றுள்ளார். இது தொடர்பான X பதிவில், CM ஸ்டாலினை பாராட்டியதுடன் இந்த அறிவிப்பு மூலம் உயர்க்கல்வி படிக்கும் 75,028 மாணவிகள் பயன்பெறுவதில் மகிழ்ச்சி அடைவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், சமூக பொருளாதாரக் கண்ணோட்டத்தில் இந்த முடிவு பல பயன்களை தரும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

News December 29, 2024

மாணவர்களுக்கு பகுத்தறிவு: அமைச்சர் முக்கிய உத்தரவு

image

மதுரையில் நடந்த ‘விஞ்ஞானத் தேடல்’ என்ற நிகழ்ச்சி ஒன்றில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உரையாற்றினார். அப்போது அவர், இந்த காலத்தில் பிள்ளைகளை பகுத்தறிவுடன் வளர்ப்பது மிக சவாலான விஷயம் எனக் கூறினார். மேலும், அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்களுக்கு பகுத்தறிவை கற்றுக்கொடுக்க வேண்டும் என அறிவுறுத்திய அவர், அனைத்து அரசுப் பள்ளிகளிலும் இதற்கான பயிற்சிகளை வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

News December 29, 2024

உண்டியலில் இருந்த விநோத 20 ரூபாய்.. இவ்வளவு வன்மமா?

image

கர்நாடகாவில் உள்ள பிரசித்தி பெற்ற பாக்யவந்தி கோயில் உண்டியலை நேற்று திறந்து பார்த்த ஊழியர்கள் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. அந்த உண்டியலில் ரூ.60 லட்சத்து 5 ஆயிரம் ரொக்கம் இருந்துள்ளது. அது விஷயம் அல்ல. அதிலுள்ள ஒரு 20 ரூபாய் நோட்டில், “எனது மாமியார் சீக்கிரம் சாக வேண்டும்” என எழுதப்பட்டிருந்தது. இதை போட்டது ஆணா, பெண்ணா எனத் தெரியவில்லை. இருந்தாலும், இவ்வளவு வன்மம் ஆகாதுங்க.

News December 29, 2024

BREAKING: தூத்துக்குடியில் டைடல் பூங்கா திறப்பு

image

தூத்துக்குடி மாவட்டம் மீளவிட்டான் பகுதியில் ₹32.50 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நியோ டைடல் பூங்காவை CM ஸ்டாலின் திறந்து வைத்தார். 63,000 சதுரஅடி பரப்பளவில், 4 தளங்களுடன் இந்த பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதில் பார்க்கிங், ஜிம், ஃபுட் கோர்ட், கலையரங்கம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. முன்னதாக, விழுப்புரம், தஞ்சை, சேலம், கோவை, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் டைடல் பூங்காக்களை CM திறந்து வைத்தார்.

News December 29, 2024

விஜயகாந்த் நினைவு நாளுக்கு விஜய் வராதது ஏன்?

image

தன்னை வளர்த்துவிட்ட விஜயகாந்தின் நினைவு நாளுக்கு கூட விஜய்யால் வர முடியவில்லையா என பலரும் சமூக வலைதளங்களில் கேள்வியெழுப்பி வருகின்றனர். இந்நிலையில், காவல்துறை அனுமதி மறுத்ததாலேயே அவர் செல்லவில்லை என தவெகவினர் தற்போது கூறி வருகிறார்கள். எனினும், விஜய் தரப்பிலிருந்து இதுதொடர்பாக விளக்கம் ஏதும் வரவில்லை. அதெல்லாம் சரி, கேப்டன் நினைவுநாளுக்கு ஒரு பதிவை கூட விஜய் போடாதது ஏன் என்பதற்கு என்ன பதில்?

News December 29, 2024

RAIN ALERT: இரவு 7 மணி வரை 12 மாவட்டங்களில் மழை

image

இரவு 7 மணி வரை 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், அரியலூரில் லேசான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டையிலும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கணித்துள்ளது. உங்கள் ஊரில் மழை பெய்கிறதா? கீழே பதிவிடுங்க.

News December 29, 2024

ஆதார்- பான் இணைப்பு நாளையே கடைசி

image

வருமான வரி செலுத்துவோர் அனைவருக்கும் பான் கட்டாயமாகும். இதை ஆதார் எண்ணுடன் இணைக்க டிசம்பர் 31 வரை வருமான வரித்துறை அவகாசம் அளித்திருந்தது. இந்த அவகாசம் நாளையுடன் (டிச.31) நிறைவடையவுள்ளது. அதற்குள் இணைக்காவிட்டால் பான் எண் முடக்கப்படும் என்றும், இதனால் வங்கிப்பரிவர்த்தனை உள்ளிட்ட சேவைகளை பயன்படுத்த முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.

News December 29, 2024

முகுந்தன் நியமனத்தில் ராமதாஸ் உறுதி

image

பாமக இளைஞரணி தலைவராக முகுந்தன் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த அன்புமணியை சமாதானப்படுத்தும் முயற்சி தைலாபுரம் தோட்டத்தில் நடந்தது. அதன் பின்னர், முகுந்தன் தொடர்பாக எந்தக் கருத்தையும் அன்புமணி தெரிவிக்கவில்லை. தனது பேரனுக்கு கட்சியில் பதவி கொடுப்பதில் ராமதாஸ் பிடிவாதமாக இருப்பதாக தெரிகிறது. இதனால்தான் முகுந்தன் நியமனத்தில் இதுவரை எந்த மாற்று அறிவிப்பும் வெளியாகவில்லை என கூறப்படுகிறது.

News December 29, 2024

240 மருத்துவ ஊழியர்களை சிறைபிடித்த இஸ்ரேல்

image

வடக்கு காசாவின் பெய்ட் லாஹியாயில் இயங்கி வந்த கமால் அத்வான் ஹாஸ்பிடலில் 240 மருத்துவ ஊழியர்களை இஸ்ரேல் ராணுவம் சிறைபிடித்துள்ளது. படுகாயமடைந்த நோயாளிகளை ராணுவம் வலுக்கட்டாயமாக வெளியேற்றியுள்ளது. அப்பகுதியின் கடைசி மருத்துவமனையும் சுற்றி வளைக்கப்பட்டு விட்டதால், ஆயிரக்கணக்கான மக்கள் தற்போது மருத்துவ உதவிகள் கிடைக்காமல், உயிருக்கு போராடும் நிலை ஏற்பட்டுள்ளது.

News December 29, 2024

பொங்கல் பரிசில் ₹ 1000 மிஸ்ஸிங்: வெளியான விஷயம்

image

பொங்கல் பரிசுத்தொகுப்பில் ₹1000 மிஸ்ஸானது, மக்களை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. புயல்-மழைச்சேதங்கள் ஒருபுறம், விலைவாசி உயர்வு மறுபுறம் என வாட்டிவதைக்கும் இந்நேரத்தில் ₹1000 கிடைக்கும் என மக்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், மகளிர் உரிமைத்தொகை, புதுமைப்பெண், தமிழ் புதல்வன் திட்டங்களுக்கு ₹1000 வழங்குவதால் ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாகவே இந்த முறை ₹1000 வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது.

error: Content is protected !!