News January 23, 2025
VJSஐ இயக்கும் மணிகண்டன்?

நடிகர் மணிகண்டன் இயக்குநர் அவதாரம் எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது முதல் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாகவும், இதற்கான கதையை கூறி ஓகே வாங்கி விட்டு, தயாரிப்பாளரை தேடி வருவதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் இருவரும் ‘காதலும் கடந்து போகும்’ படத்தில் ஒன்றாக நடித்தனர். அதேபோல், ‘விக்ரம் வேதா’ படத்தில் மணிகண்டன் வசனம் எழுதியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Similar News
News July 8, 2025
விராட்டுக்கு நன்றி சொன்ன ஜோகோவிச்

இங்கி.,ல் உள்ள விராட் கோலி – அனுஷ்கா சர்மா தம்பதி, விம்பிள்டன் டென்னிஸ் போட்டியைக் கண்ட போட்டோஸ் இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. இந்த போட்டோவைப் பகிர்ந்து ஸ்டார் டென்னிஸ் பிளேயர் ஜோகோவிச் நன்றி தெரிவித்துள்ளார். இது கோலியின் ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது. அதேநேரம், அங்கு டெஸ்ட் தொடர் நடைபெற்று வருவதால், அதனைக் காண விராட் செல்வார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
News July 8, 2025
கடலூர் கோர விபத்து: இபிஎஸ் இரங்கல்

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் <<16987572>>பள்ளி வேன் மீது ரயில்<<>> மோதிய விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு இபிஎஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்கள் அனைவரும் பூரண உடல் நலன் பெற வேண்டும் என இறைவனை வேண்டுவதாக தனது X பக்கத்தில் குறிப்பிட்டுள்ள அவர், உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவும் அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.
News July 8, 2025
நாடு முழுவதும் நாளை பொது வேலைநிறுத்தம்

பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் நாளை பொது வேலைநிறுத்தம் நடைபெற உள்ளது. இதில் தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஆகிய தொழிற்சங்கங்கள் பங்கேற்பது மட்டுமல்லாமல், அவர்கள் அழைப்பும் விடுத்துள்ளனர். ஆனால், அதிமுகவின் அண்ணா தொழிற்சங்கம் பங்கேற்கவில்லை. இருப்பினும் பஸ்கள், ஆட்டோக்கள் சேவையில் பாதிப்பு இருக்கும் என தொழிற்சங்க நிர்வாகிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.