India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் சிறப்புத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று காலை தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து, ஆர்வத்துடன் ரேஷன் கடைக்கு சென்ற ஈரோடு கிழக்குத் தொகுதி மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அங்கு இடைத்தேர்தல் நடப்பதால் சிறப்புத் தொகுப்பு வழங்கப்படவில்லை. தேர்தல் ஆணையத்திடம் சிறப்பு அனுமதி பெற்று தொகுப்பு வழங்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.
குரூப் 2, 2A மெயின்ஸ் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பை தமிழ்நாடு அரசு நடத்தி வருகிறது. இதில் இணைய விரும்புபவர்கள் மெயின்ஸ் தேர்வுக்கு விண்ணப்பித்த படிவத்தின் நகல், ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் போட்டோவுடன் சென்னை கிண்டியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை வேலை நாள்களில் நேரடியாக அணுகலாம். மேலும் விவரங்களுக்கு decgc.coachingclass@gmail.com என்ற E-Mailஇல் தொடர்பு கொள்ளலாம்.
UGCஇன் புதிய விதிகளுக்கு எதிராக சட்டப்பேரவையில் CM ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு அதிமுக, பாமகவும் ஆதரவு அளித்தன. அதேவேளையில், இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். முன்னதாக, தீர்மானத்தின் மீது பேசிய CM ஸ்டாலின், புதிய விதிகளைத் திரும்பப் பெறாவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம் என எச்சரித்தார்.
*சூக்ஷமதர்ஷினி: நஸ்ரியாவின் படம் இன்று ஜீ5 OTTல் வெளியானது * அதோமுகம்: நல்ல வரவேற்பை பெற்ற படம் ஆஹா தமிழ் OTTல் ஜன.10 வெளியாகிறது *மிஷன்: இம்பாசிபிள் – டெட் ரெக்கனிங்: டாம் கூருஸின் படம் நெட்பிளிக்ஸ் OTTல் ஜன.11 வெளியாகிறது * முன்னதாக, பிரஷாந்தின் அந்தகன் (ஜன. 7-ஆஹா தமிழ் OTT), பி.டி.சார் (ஜன.6 – டெண்ட்கொட்டா OTT), சதீஷின் சட்டம் என் கையில் (ஜன.6 – டெண்ட்கொட்டா OTT)யில் வெளியாகின.
மோசடி வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை சிறப்பு கோர்ட்டில் ஆஜரானார். ADMK ஆட்சியில்(2011-15) போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது, TNSTCஇல் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில் செந்தில் பாலாஜியுடன் சேர்த்து 2,222 போ் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், அடுத்த மாதம் 20ஆம் தேதி 150 பேர் நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
2019ஆம் ஆண்டு பிரதமர் மாேடியால் PM கிசான் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 உதவித் தொகை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டப் பலனை பெறுவதற்கு, புதிதாக விண்ணப்பிப்போருக்கு டிஜிட்டல் ஐ.டி. கட்டாயம் எனவும், ஆதலால் விவசாயிகளுக்கு அதனை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் மாநில அரசுகளுக்கு மத்திய வேளாண் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
மும்பையில் வெறும் ரூ.500க்காக தம்பியை அண்ணன் குத்திக் கொன்றுள்ளார். மும்பை கல்யாணைச் சேர்ந்த ஷமீம்கானின் தம்பி நசீம்கான். ஷமீம்கானின் சட்டை பாக்கெட்டில் இருந்து அவர் ரூ.500 பணத்தை எடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் 2 பேரும் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தம்பி என்றும் பாராமல் கத்தியை எடுத்து நசீம்கானை குத்தி ஷமீம்கான் கொலை செய்துள்ளார். புகாரின்பேரில் ஷமீமை போலீஸ் கைது செய்தது.
ரயில்வேயில் 32,438 காலியிடங்களுக்கு விரைவில் ஆட்தேர்வு நடைபெறவுள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு வருகிற 23ஆம் தேதி முதல் ரயில்வே ஆட்தேர்வு இணையதளத்தில் தொடங்கவுள்ளது. குரூப்-D நிலையிலான பதவிகளுக்கு கல்வித் தகுதியாக 10ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தேசிய அப்ரென்டிஸ் சான்றிதழ் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மேலும் வயது வரம்பாக ஜூலை 1ஆம் தேதிப்படி 18 முதல் 26 வயது வரை இருத்தல் அவசியம்.
மனைவியை இரு நண்பர்கள் பாலியல் வன்கொடுமை செய்வதை சவுதியிலிருந்து வீடியோ காலில் ரசித்த கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உ.பி., மீரட் அருகே கடந்த 3 ஆண்டுகளாக நண்பர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு, அவர்களது ஆசைக்கு இணங்க மனைவியை வற்புறுத்தியுள்ளார். தற்போது கர்ப்பிணியாக உள்ள அந்த 35 வயது பெண், கொடுமை தாங்காமல் போலீசை நாடியுள்ளார். இந்த கொடூரனுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம், நீங்களே சொல்லுங்க..
ஈஸ்வரன், கலகத் தலைவன் படங்களில் நடித்துள்ள நிதி அகர்வால், சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். அதில் தன்னையும், தனது குடும்பத்தினரையும் கொலை செய்ய போவதாக ஒருவர் சமூகவலைதளத்தில் மிரட்டல் விடுத்து இருப்பதாகவும், அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார். அண்மையில் மலையாள நடிகை ஹனிரோஸும் இதேபோல் புகார் தெரிவித்திருந்தார்.
Sorry, no posts matched your criteria.