news

News January 9, 2025

தினசரி இதை செய்யலாம்ல…

image

➤ தினசரி 10 நிமிடம் தியானம் செய்யுங்கள்.
90% பேரை விட உங்களின் கவனக்குவிப்பு சிறப்பாக இருக்கும்.
➤ தினசரி 30 நிமிடங்கள் நடந்து செல்லுங்கள்.
90% பேரை விட நீங்கள் ஆரோக்கியமாக இருப்பீர்கள்.
➤ தினசரி 20 நிமிடமாவது படியுங்கள்.
90% பேரை விட அதிகம் விஷயங்கள் அறிந்தவராக இருப்பீர்கள்.

News January 9, 2025

ஐயா.. நாங்க இன்னும் எவ்ளோதான் உழைக்கணும்?

image

இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தியோ வாரத்திற்கு 70 மணிநேரம் வேலை செய்யுங்கள் என்கிறார். L&T சுப்பிரமணியனோ 90 மணிநேரம் என்கிறார். நீங்கள் சொல்வது போல அரைநாள் நாங்கள் அலுவலகத்திலேயே இருந்தால், எப்படி எங்களால் குடும்பத்தினருடன் நேரம் செலவிட முடியும்? எனக் கேட்டு ஐடி ஊழியர்கள் சோஷியல் மீடியாவை தெறிக்க விடுகின்றனர். அப்படியே உழைத்தாலும் எங்கள் சம்பளம் உயராது எனவும் அவர்கள் கூறுகின்றனர். உங்க கருத்து என்ன?

News January 9, 2025

2024ல் ‘மெய்யழகன்’ தான் டாப்!

image

Letterboxd நிறுவனம், 2024-ல் தங்களது தளத்தில் அதிக ரேட்டிங் பெற்ற படங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், Action/ Adventure பிரிவில் ‘மகாராஜா’ 7-ம் இடம் பிடித்துள்ளது. ‘லப்பர் பந்து’ romance பிரிவில் 6, sports பிரிவில் 3-வது இடம் பிடித்தது. Highest Rated Overall பட்டியலில் 13-வது இடம் பிடித்த ‘மெய்யழகன்’, drama பிரிவில் 6, Asian film பிரிவில் 4-வது இடத்திலும் உள்ளது. உங்களுக்கு பிடித்த படம் எது?

News January 9, 2025

இடைத்தேர்தலில் பாஜக போட்டியில்லையா?

image

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடாது என்று தகவல் வெளியாகியுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காக வைத்து தேர்தல் பணியில் ஈடுபட வேண்டும் என்பதால், ஈரோடு கிழக்கு தொகுதியை கூட்டணிக் கட்சிக்கு கொடுக்கலாம் என பாஜக ஆலோசனைக் கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் கருத்து கூறியுள்ளனர். இதை தேசிய தலைமையிடம் அண்ணாமலை கூறியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

News January 9, 2025

சஞ்சய் சம்பத் போட்டியிட தீர்மானம் நிறைவேற்றம்

image

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், மறைந்த EVKS இளங்கோவனின் மகன், சஞ்சய் சம்பத் போட்டியிட வேண்டும் என்று ஈரோடு மாவட்ட காங்கிரஸ், தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. தீர்மானத்தை தமிழக காங்கிரஸ் கட்சி தலைமைக்கு அனுப்பவும் மாவட்ட நிர்வாகிகள் முடிவெடுத்துள்ளனர். இடைத்தேர்தலில் போட்டியிட சஞ்சய் சம்பத் விரும்பவில்லை எனத் தகவல் வெளியான நிலையில், மாவட்ட நிர்வாகிகளின் தீர்மானம் முக்கியத்துவம் பெறுகிறது.

News January 9, 2025

ஒரே நாளில் பர்த்-டே

image

காதல் ஜோடிக்கு ஒரே நாளில் பிறந்தநாள் வந்து பார்த்திருக்கீங்களா? அதுவும் நாட்டின் அமைச்சருக்கும் அவருடைய ஜப்பானிய மனைவிக்கும் ஒரே நாள் பிறந்தநாள் வர்றதெல்லாம் அச்சரியமா இல்ல! இன்னைக்குதான் அது. நம்ம வெளியுறத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கரும் அவருடைய ஜப்பானிய மனைவி கியோகோவும் இன்னைக்கு பிறந்தநாள் கொண்டாடுறாங்க. நாமளும் அவங்களை வாழ்த்துவோமே..

News January 9, 2025

இனியும் யார் அந்த சார் என கேப்பீங்களா இபிஸ்?

image

பாலியல் குற்றவாளிகளின் சரணாலயம் அதிமுக என்பது மீண்டும் அம்பலமாகியுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் விமர்சித்துள்ளார். திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என இபிஎஸ் கபட நாடகமாடுவதாக சாடிய அவர், அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் மறைந்திருந்த அந்த சார் அதிமுக வட்டச்செயலாளர் தான். இனியும் யார் அந்த சார்? என இபிஎஸ் கேட்க விரும்பினால் கண்ணாடியை பார்த்து கேட்க வேண்டும் எனத் தெரிவித்தார்

News January 9, 2025

அடுத்த 5 ஆண்டுகளில் இந்த வேலைகளுக்குதான் டிமாண்ட்!

image

இப்போது நாம் பார்க்கிற வேலை எதிர்காலத்தில் என்னவாகும் என்கிற பயம் நம்மில் பலருக்கு இருக்கும். World Economic Forum வெளியிட்ட அறிக்கையில், விவசாய பண்ணை வேலைகள், டிரைவர்களுக்கு எதிர்காலத்தில் அதிக டிமாண்ட் இருக்கும். கேஷியர், டிக்கெட் கிளர்க் பணிகள் சரிவை சந்திக்கும். AI, Big Data துறைகளில் டிமாண்ட் இருந்தாலும் கிரியேட்டிவிட்டி சார்ந்த மனித திறன்களுக்கு தேவை இருக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

News January 9, 2025

சந்திரபாபு நாயுடுவை கைது பண்ணுங்க: ரோஜா

image

திருப்பதி கோயிலில் நேற்று ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலியானது தொடர்பாக நடிகை ரோஜா ஆவேசமாக கருத்து தெரிவித்துள்ளார். திருப்பதியில் பக்தர்கள் உயிரிழந்த சம்பவத்தை, அரசாங்கம் நடத்திய படுகொலை என அவர் சாடினார். மேலும், புஷ்பா 2 கூட்டநெரிசல் சம்பவத்தில் அல்லு அர்ஜுனை கைது செய்ததை போல, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை கைது செய்யுமாறும் ரோஜா வலியுறுத்தினார்.

News January 9, 2025

சீனாவில் புதிய MPox வைரஸ்

image

உருமாற்றமடைந்த குரங்கம்மை வைரஸின் (MPox) புதிய வெர்ஷன் சீனாவில் கண்டறியப்பட்டு உள்ளது. காங்கோ நாட்டுக்கு சென்றுவந்த ஒருவருக்கு இந்த தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருடன் தொடர்பில் இருந்த 4 பேருக்கு அரிப்பு, கொப்பளங்கள் உள்ளிட்ட ஆரம்ப அறிகுறிகள் தென்பட்டுள்ளன. இந்த வைரஸ் தொகுதியை 1பி என அடையாளப்படுத்துகிறது சீனா. தொற்றுள்ளவர், மற்றவரை தொட்டாலே இந்த வைரஸ் பரவக் கூடியதாம். இன்னும் எத்தனை வருமோ?

error: Content is protected !!