news

News January 9, 2025

நக்சல்கள் இல்லாத மாநிலம் ஆனது கர்நாடகா

image

தங்கள் மாநிலத்தில் நக்சல்கள் முழுவதுமாக ஒழிக்கப்பட்டு விட்டதாக கர்நாடக CM சித்தராமையா அறிவித்துள்ளார். அரசிடம் சரணடைந்த 6 நக்சல்களுக்கு மறுவாழ்வு உதவிகள் அளித்தபோது இதை தெரிவித்தார். நாட்டில் தற்போது சத்தீஸ்கர், ஆந்திரம், ஒடிஷா, மகா., ஜார்கண்ட், கேரளா, ம.பி., தெலங்கானா, மே.வங்கம் ஆகிய 9 மாநிலங்களில் மட்டுமே நக்சல் (Maoist) இயக்கம் செயல்பாட்டில் உள்ளது. தமிழகத்திலும் நக்சல் செயல்பாடு இல்லை.

News January 9, 2025

INDIA கூட்டணியின் எதிர்காலம்? உமர் கவலை

image

லோக்சபா தேர்தலுக்கு பிறகு INDIA கூட்டணியின் ஆலோசனை கூட்டம் இன்னும் நடைபெறாதது துரதிர்ஷ்டமானது என உமர் அப்துல்லா கவலை தெரிவித்துள்ளார். கூட்டணியின் நோக்கம் என்ன? யார் வழிநடத்துவது? என்பது குறித்து தலைவர்களிடையே தெளிவு இல்லை எனவும், இப்படி இருந்தால் எப்படி முன்னோக்கி செல்வோம்? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், டெல்லி தேர்தலுக்கு பிறகு ஆலோசனை கூட்டம் நடத்தவும் அறிவுறுத்தியுள்ளார்.

News January 9, 2025

இன்னைக்கு நைட் தூங்காதீங்க

image

<<15096432>>மார்கழி மாத வளர்பிறை ஏகாதசி தினமான<<>> இன்று வைகுண்ட ஏகாதசி விரதம் கடைபிடிக்கப்படுகிறது. நாளை காலை 4 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறும். இன்று இரவு முழுக்க உணவு உண்ணாமல், கண் விழித்து பெருமாளை சேவிப்போருக்கு சொர்க்கம் நிச்சயம் என்று நம்பப்படுகிறது. நாளை காலை பாரணை செய்து விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். பாரணையில் அகத்திக்கீரை, சுண்டைக்காய் இடம்பெற வேண்டும்.

News January 9, 2025

விரைவில் ஆசிரியர்கள் நியமனம்

image

மாநிலம் முழுவதும் விரைவில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளதாக சட்டப்பேரவையில் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். TRB மூலம் 6,000 ஆசிரியர்களை நியமிக்க தேர்வுகள் நடந்துள்ளன. கடந்தாண்டு நவம்பரில் 3,198 பேருக்கு பணி நியமன ஆணை வழங்க இருந்த நிலையில், நீதிமன்ற வழங்கினால் அப்பணி தாமதம் ஆகியுள்ளது. வரும் 21ஆம் தேதி அந்த வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைத்து உடன் நிரந்த ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றார்.

News January 9, 2025

ஸ்பெல்லிங் மிஸ்டேக் உடன் ட்ரெண்ட் ஆகும் Game Changer!

image

இயக்குநர் சங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்துள்ள கேம் சேஞ்சர் படம் நாளை (ஜன.10) வெளியாகவுள்ளது. இதையடுத்து X வலைத்தளத்தில் ட்ரெண்ட் ஆகி வரும் ஹேஷ்டேக்கில் ஒரு சின்ன வித்தியாசம் தெரிகிறது. #GameChanger என்பதற்கு பதிலாக #GameChanager என ட்ரெண்ட் ஆகிறது. யாரோ ஒருவர் ஸ்பெல்லிங் மிஸ்டேக் உடன் பகிர அதையே Copy செய்ததால் வந்த விளைவா? இல்ல, Decode பண்ண வேற எதுவும் விஷயமிருக்கா?

News January 9, 2025

குடும்பத்தில் ஒருவருக்கு தேவஸ்தானத்தில் வேலை: CBN

image

திருப்பதி கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்த நிலையில், அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு தேவஸ்தானத்தில் வேலை வழங்கப்படும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உறுதியளித்துள்ளார். மேலும், கூட்ட நெரிசலுக்கு காரணமான தேவஸ்தான இணை நிர்வாக அதிகாரி கௌதமி, முதன்மை பாதுகாப்பு அதிகாரி ஸ்ரீதர் மற்றும் SP சுப்பராயுடு ஆகியோரை டிரான்ஸ்பர் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

News January 9, 2025

UAEஇல் வேலைவாய்ப்பு.. நீங்க ரெடியா?

image

Mech டிப்ளமோ, ITI படித்து அனுபவம் உள்ளவர்களுக்கு UAEஇல் தங்குமிடம், உணவுடன் வேலை உள்ளதாக தமிழ்நாடு அரசின் Overseas Manpower Corporation அறிவித்துள்ளது. வேலைகள், தகுதி, வயது வரம்பு ஆகிய விவரங்களை அறிவதற்கான இணையதளம்: www.omcmanpower.tn.gov.in தொலைபேசி எண் 044-22502267. WhatsApp எண் 9566239685. பயோ டேட்டாவை ovemclnm@gmail.com என்ற மெயிலுக்கு அனுப்பலாம். வேலை தேடும் நண்பருக்கு இதை ஷேர் பண்ணுங்க.

News January 9, 2025

2 ஆண்டில் 355 கொலைகள்.. ஷாக் ரிப்போர்ட்

image

தென்மாவட்டங்களில் சாதி ரீதியாகவும், கோஷ்டி பூசல் போன்ற பல காரணங்களால் அடிக்கடி கொலை நடந்து வருவதால் மக்கள் அச்சத்துடனே வாழ வேண்டிய சூழல் உள்ளது. இந்த நிலையில், நெல்லை சரகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 355 கொலைகள் நடந்துள்ளதாக சரக டிஐஜி மூர்த்தி அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரியில் 2023இல்179 கொலைகள், 2024இல் 176 கொலைகள் நடந்துள்ளது. இதற்கு யார் பொறுப்பு?

News January 9, 2025

நடிகைக்கு பாலியல் தொல்லை தந்தவருக்கு சிறை

image

மலையாள நடிகை ஹனி ரோஸ்க்கு <<15077872>>பாலியல் தொல்லை கொடுத்த தொழிலதிபர்<<>> பாபி செம்மனூரை 14 நாள்கள் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நேற்று கைது செய்யப்பட்ட அவருக்கு ஜாமின் மறுக்கப்பட்ட நிலையில் சிறையில் அடைக்கப்படவுள்ளார். முன்னதாக, நீதிமன்றத்திலேயே அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

News January 9, 2025

TNPSC வரலாற்றில் முதல்முறை

image

குரூப் 4 தேர்வின் வினாக்களுக்கான இறுதி விடை குறிப்பை முதல்முறை TNPSC வெளியிட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்டவர்களின் இறுதி பட்டியல் வெளியான பின்னரே விடை குறிப்பு வெளியாகும். ஆனால், இந்த முறை குரூப் 4 விடை குறிப்பு முன்னேரே வெளியிடப்பட்டதால், மதிப்பெண்களை தேர்வர்கள் எளிதாக கணக்கிட முடியும். இனிவரும் காலங்களில் மற்ற தேர்வுகளுக்கும் இதேபோல் வெளியிட வேண்டும் என்று தேர்வர்களின் விருப்பமாக உள்ளது.

error: Content is protected !!