India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
▶ஜனவரி 10 ▶மார்கழி- 26 ▶கிழமை: வெள்ளி ▶ நல்ல நேரம்: 09:30 AM – 10:30 AM & 04.30 PM – 05.30 PM ▶கெளரி நல்ல நேரம்: 12:30 AM – 01:30 AM & 06:30 PM – 07:30 PM ▶ராகு காலம்: 10:30 AM – 12:00 PM ▶எமகண்டம்: 03:00 PM – 04:30 PM ▶குளிகை: 07:30 AM – 09:00 AM ▶திதி: துவாதசி ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶நட்சத்திரம்: கார்த்திகை ▶சந்திராஷ்டமம்: சித்திரை
இன்று (ஜன. 10) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.
இன்று (ஜன. 10) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.
‘பிளவுபடாத இந்தியா’ என்ற கருத்தரங்கில் கலந்து கொள்ள பாக்., வங்கதேசம், பூடான், ஆஃப்கன், மாலத்தீவு, மியான்மர், இலங்கை, நேபாள் ஆகிய நாடுகளுக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. இது தவிர, மத்திய கிழக்கு, தென் மேற்கு ஆசிய நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வுத் துறையின் 150 ஆண்டுகளை நினைவுகூறும் வகையில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. இதில் பங்கேற்க பாக். சம்மதித்துள்ளது.
ஜியோ நிறுவனம் OnePlus நிறுவனத்துடன் இணைந்து அதிவேக 5.5G சேவையை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம், 5ஜியைக் காட்டிலும் 380% அதிவேக இண்டர்நெட் சேவையை கஸ்டமர்கள் பெறலாம். 5ஜி சாதனங்கள் ஒரு நேரத்தில் ஒரு டவரில் மட்டும் கனெக்ட்டாகும் நிலையில், இந்த புதிய 5.5ஜி ஒரே நேரத்தில் பல டவர்களில் கனெக்ட்டாகும். தற்போது OnePlus 13 மற்றும் OnePlus 13R ஆகிய போன்களில் மட்டுமே 5.5ஜி சப்போர்ட்டாகும்.
அஜித்தை வைத்து படம் இயக்க நீண்ட நாள்களாக ஆசைப்பட்டு வருவதாக லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். இந்த ஆசை விரைவில் நிறைவேறும் என எதிர்பார்ப்பதாகவும், அதற்கான முயற்சிகளை எடுப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார். தற்போது ‘கூலி’ படத்தில் பிஸியாக இருக்கும் லோகேஷ், அடுத்ததாக ‘கைதி 2’ எடுக்க உள்ளார். அதற்கு அடுத்ததாக ‘ரோலக்ஸ்’ என பட்டியல் நீண்டு வரும் நிலையில் தான் அவர் இதை தெரிவித்துள்ளார்.
➤மேஷம் – ஏமாற்றம் ➤ ரிஷபம் – பக்தி ➤மிதுனம் – தெளிவு ➤கடகம் – மேன்மை ➤சிம்மம் – கவலை ➤கன்னி – பரிசு ➤துலாம் – தனம் ➤விருச்சிகம் – பாராட்டு ➤தனுசு – நலம் ➤மகரம் – சுகம் ➤கும்பம் – சினம் ➤மீனம் – அனுகூலம்.
உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் 80வது இடத்தில் இருந்த இந்தியா 85வது இடத்திற்கு சரிந்துள்ளது. இதற்கு அரசியல் கலவரங்கள் மற்றும் காலநிலை மாற்றங்கள் போன்றவை முக்கிய காரணம். முதல் இடத்தில் சிங்கப்பூரும், 2வது இடத்தில் ஜப்பானும் உள்ளன. இந்தியர்கள் 57 நாடுகளுக்கு மட்டுமே விசா இன்றி செல்ல முடியும். ஆனால், சிங்கப்பூர் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் 195, ஜப்பானியர்கள் 193 நாடுகளுக்கு செல்லலாம்.
அண்ணா பல்கலை., மாணவி வன்கொடுமை தொடர்பான FIR லீக் விவகாரத்தில் சென்னை காவல் ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. இதை ரத்து செய்ய கோரி உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ள தமிழக அரசு, FIR வெளியானதற்கு அரசு காரணம் இல்லை என விளக்கமளித்துள்ளது. அதே நேரத்தில், சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை, இழப்பீடு வழங்க வேண்டும் ஆகிய பிற உத்தரவுகளை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படவில்லை.
சினிமாவில் நடிப்பதில் தனக்கு விருப்பமில்லை என நித்யா மேனன் தெரிவித்துள்ளார். சிம்பிளான வாழ்க்கையை வாழ்வதே தனக்கு பிடிக்கும் எனவும், ஆனால் அதை சினிமா அனுமதிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், கமிட் பண்ண படங்களை முடித்து கொடுத்துவிட்டு சினிமாவில் இருந்து விலகலாம் என நினைத்த போது தேசிய விருது கிடைத்ததாகவும், அதை கடவுள் தனக்கு கொடுத்த லஞ்சமாக பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.