news

News January 10, 2025

இதுதான் ஜீனீ… The robot..!

image

அமெரிக்காவைச் சேர்ந்த TOMBAT என்ற நிறுவனம் ‘ஜீனீ’ என்ற ரோபோ நாய்க்குட்டியை உருவாக்கியுள்ளது. பார்ப்பதற்கு லாப்ரடார் வகை நாய் வகையைபோல காட்சியளிக்கும் இந்த ரோபோ, அல்சைமர் மற்றும் டிமென்ஷியா மறதி பாதிப்புள்ள வயதானவர்களுக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொடுதல் மற்றும் குரல் கட்டளைகளுக்கு பதிலளிக்கும் இந்த நாய் ரோபோ, AI மூலம் உருவாக்கப்பட்ட குரலில் குரைக்கும்.

News January 10, 2025

ஒரே நாளில் 3 படங்கள் ரிலீஸ்!

image

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று ஒரே நாளில் 3 திரைப்படங்கள் திரைக்கு வருகின்றன. ஷங்கர் இயக்கத்தில், ராம் சரண் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘கேம் சேஞ்சர்’, பாலா இயக்கத்தில், அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘வணங்கான்’, சோனு நிகம், கலையரசன் ஆகியோர் நடித்துள்ள ‘மெட்ராஸ்காரன்’ ஆகிய படங்கள் ரிலீஸாகின்றன. இதில் நீங்கள் பார்க்க விரும்பும் திரைப்படம் எது? கமெண்டில் சொல்லுங்க.

News January 10, 2025

மியான்மர் ராணுவ தாக்குதலில் 40 பேர் பலி

image

மியான்மர் ராணுவம் விமானப்படை மூலம் நடத்திய தாக்குதலில் 40 பேர் உயிரிழந்தனர். மியான்மரில் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு ராணுவத்திற்கும், ஆயுதம் ஏந்திய இன சிறுபான்மையினர், புரட்சி குழுக்கள் இடையே மோதல் நீடித்து வருகிறது. இதில் பல பகுதிகளை ஆயுதக் குழு தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. இந்நிலையில், ராம்லீ தீவில் மியான்மர் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.

News January 10, 2025

ஜனவரி 10: வரலாற்றில் இன்று

image

*1863 – உலகின் முதல் நிலத்தடி ரயில் சேவை லண்டனில் தொடக்கம் *1912 – பிரிட்டிஷ் மன்னர் 5ஆம் ஜார்ஜ், ராணி மேரி இந்தியாவை விட்டு வெளியேறினர் *1917 – பெண்களுக்கு வாக்குரிமை கேட்டு வெள்ளை மாளிகைக்கு எதிராக போராட்டம் தொடங்கியது *1962 – பெருவில் ஏற்பட்ட சூறாவளியில் 4,000 பேர் பலி *1974 – யாழ்ப்பாணத்தில் நடந்த 4வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி நாளில் இலங்கை காவல்துறை சுட்டதில் 11 பேர் பலி

News January 10, 2025

மாவீரன் நெப்போலியனின் பொன்மொழிகள்

image

*நீங்கள் ஒரு வேலையை நன்றாகச் செய்ய விரும்பினால், அதை நீங்களே செய்யுங்கள். *உங்கள் எதிரி ஒரு தவறு செய்யும்போது ஒருபோதும் குறுக்கிடாதீர்கள். *நீங்கள் உங்கள் சிறகுகளை விரிக்கும் வரை, உங்களால் எவ்வளவு தூரம் பறக்க முடியும் என்று உங்களுக்கே தெரியாது. *பெரும் விடாமுயற்சி கொண்டவருக்கே வெற்றி சொந்தமானது. *வரலாறு என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட பொய்களின் தொகுப்பு.

News January 10, 2025

பொங்கல் பரிசுத் தொகுப்பு வாங்கிவிட்டீர்களா?

image

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்காக ரேஷன் கடைகள் இன்று செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தைப் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் விதமாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது. அதன்படி, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு நீள கரும்பு ஆகியன வழங்கப்பட்டு வருகிறது. அனைத்து ரேஷன் அட்டைதாரர்களும் இதை விரைந்து பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

News January 10, 2025

குலை நடுங்க வைக்கும் கொடூரக் கொலை!

image

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மொஹீன், அவரது மனைவி அஸ்மா தாளில் சுற்றப்பட்ட நிலையிலும், அவர்களது மகள்கள் அப்சா(8), அஜேசா(4), அதிபா(1) ஆகியோர் படுக்கை பெட்டிகளில் சடலமாகவும் கண்டெடுக்கப்பட்டுள்ளனர். கொலைக்கான காரணம் குறித்து தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News January 10, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: இல்லறவியல் ▶அதிகாரம்: பிறனில் விழையாமை ▶குறள் எண்: 144 ▶குறள்: எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும் தேரான் பிறனில் புகல். ▶பொருள்: அடுத்தவன் மனைவியை விரும்பித் தன் பிழையைச் சிறிதும் எண்ணாமல் அவ்வீட்டில் நுழைபவன் எத்தனைப் பெருமை உடையவனாய் இருந்துதான் என்ன?

News January 10, 2025

கொண்டாடப்பட வேண்டிய நடிகர் இவர்: ஷங்கர்

image

எத்தனை திரைப்படங்களில் நடித்திருந்தாலும் தினேஷுக்கு மாஸ் ஹிட்டாக அமைந்த படம் ‘லப்பர் பந்து’ தான். அதில் கெத்தாக வந்து மனதை கொத்தாக அள்ளி சென்றிருப்பார். இந்நிலையில், தமிழ் சினிமாவில் தூக்கி கொண்டாடப்பட வேண்டிய நடிகர் தினேஷ் என்று இயக்குநர் ஷங்கர் புகழாரம் சூட்டியுள்ளார். மேலும், ‘லப்பர் பந்து’ படத்தில் தினேஷின் பெர்ஃபார்மன்ஸை பார்த்து, அவருடன் படம் பண்ணும் எண்ணம் வந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

News January 10, 2025

பைத்தியத்திற்கு வைத்தியம்தான் தேவை!

image

பெரியாருக்கு யாரும் சர்டிபிகேட் கொடுக்க வேண்டாமென கி.வீரமணி தெரிவித்துள்ளார். பெரியார் குறித்து சீமான் தெரிவித்த கருத்து சர்ச்சைக்குரியதாக மாறியுள்ளது. இந்நிலையில், சென்னை எழும்பூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய கி.வீரமணி, பைத்தியக்காரன் சர்டிபிகேட் கொடுத்தால் செல்லாது என கடுமையாக சாடினார். பைத்தியங்களுக்கு வைத்தியம்தான் தேவையே தவிர, பதில் தேவையில்லை என்றும் விமர்சித்தார்.

error: Content is protected !!