News January 10, 2025

கொண்டாடப்பட வேண்டிய நடிகர் இவர்: ஷங்கர்

image

எத்தனை திரைப்படங்களில் நடித்திருந்தாலும் தினேஷுக்கு மாஸ் ஹிட்டாக அமைந்த படம் ‘லப்பர் பந்து’ தான். அதில் கெத்தாக வந்து மனதை கொத்தாக அள்ளி சென்றிருப்பார். இந்நிலையில், தமிழ் சினிமாவில் தூக்கி கொண்டாடப்பட வேண்டிய நடிகர் தினேஷ் என்று இயக்குநர் ஷங்கர் புகழாரம் சூட்டியுள்ளார். மேலும், ‘லப்பர் பந்து’ படத்தில் தினேஷின் பெர்ஃபார்மன்ஸை பார்த்து, அவருடன் படம் பண்ணும் எண்ணம் வந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

Similar News

News November 16, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: சுற்றந்தழால் ▶குறள் எண்: 521 ▶குறள்: பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்
சுற்றத்தார் கண்ணே உள. ▶பொருள்: ஒருவருக்கு வறுமை வந்த நேரத்திலும் அவரிடம் பழைய உறவைப் பாராட்டும் பண்பு உடையவர்களே சுற்றத்தார் ஆவார்கள்.

News November 16, 2025

2026 IPL ஏலம் அறிவிப்பை வெளியிட்ட BCCI

image

IPL அணிகள் தக்க வைக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட்ட நிலையில், மினி ஏலம் குறித்த அறிவிப்பை BCCI வெளியிட்டுள்ளது. அதன்படி, வரும் டிசம்பர் 16-ம் தேதி அபுதாபியில் மினி ஏலம் நடைபெற உள்ளது. 173 வீரர்களை IPL அணிகள் தக்க வைத்த நிலையில், மீதமுள்ள 77 வீரர்களுக்கான ஏலம் நடைபெற உள்ளது. மொத்த அணிகளிடமும் சேர்த்து ₹237.55 கோடி தொகை உள்ளது. ஒரு அணி அதிகபட்சமாக 25 வீரர்களை கொண்டிருக்கலாம்.

News November 16, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶நவம்பர் 16, ஐப்பசி 30 ▶கிழமை: ஞாயிறு ▶நல்ல நேரம்: 7:31 AM – 9:00 AM ▶ராகு காலம்: 4:30 PM – 6:00 PM ▶எமகண்டம்: 12:00 PM – 1:30 PM ▶குளிகை: 3:00 PM – 4:30 PM ▶திதி: துவாதசி ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶சந்திராஷ்டமம்: சதயம் ▶சிறப்பு: முகூர்த்த நாள். விஷ்ணுபதி புண்ணிய காலம், ஞாயிறு வழிபாட்டு நாள். ▶வழிபாடு: ஆதித்ய ஹிருதயம் சொல்லி சூரியனை வழிபடுதல்.

error: Content is protected !!