news

News January 10, 2025

ஓய்வுபெற்ற கோயில் பணியாளர்களுக்கு ₹1000

image

இந்து சமய அறநிலையத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு பொங்கல் கருணைத் தொகையாக ₹1000 வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அளிக்கப்படும் நிலையில் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு அது கிடைக்கப் பெறுவதில்லை. ஆகையால், ஓய்வு பெற்று துறைநிலை ஓய்வூதியம் பெறும் கோயில் பணியாளர்களுக்கு ₹1000 வழங்கப்படுகிறது.

News January 10, 2025

வெற்றினா இதுதான் சார் வெற்றி ❤️❤️

image

சிவகார்த்திகேயன் பற்றி SV சேகர் கூறிய ஃப்ளாஷ்பேக் புல்லரிக்க வைத்துள்ளது. 2007-இல் தனது மகன் நடித்த படத்திற்காக ஆங்கரிங் செய்ய சிவகார்த்திகேயனை அணுகிய போது, கமலோடு ஒரு செல்ஃபி எடுக்க உதவ முடியுமா என தன்னிடம் அவர் கேட்டதாக SV சேகர் தெரிவித்தார். மேலும், அன்றைக்கு அப்படி கேட்ட சிவகார்த்திகேயனை வைத்து, இன்றைக்கு கமலே படம் தயாரித்திருக்கிறார் என்றால் இதுதான் உண்மையான வெற்றி எனவும் அவர் கூறினார்.

News January 10, 2025

பொள்ளாச்சி விவகாரம்: CM சவாலை ஏற்ற EPS

image

இன்றைய சட்டப்பேரவையில், பொள்ளாச்சி விவகாரத்தில் 24 மணி நேரத்தில் 3 பேரை ADMK அரசு கைது செய்ததாக இபிஎஸ் கூறினார். ஆனால், அவர் தனது வாதத்தை நிரூபிக்க தவறிவிட்டால் தான் சொல்லும் தண்டனையை ஏற்க தயாரா? என CM ஸ்டாலின் சவால் விடுத்தார். இதை இபிஎஸ் ஏற்ற நிலையில், 12 நாள்கள் கழித்தே FIR பதிவு செய்யப்பட்டதாக CM கூறினார். ஆனால், உண்மைக்கு புறம்பான தகவலைக் கூறுவதாக இபிஎஸ் அதனை ஏற்க மறுத்தார்.

News January 10, 2025

சீமான் மீது நடவடிக்கை எடுக்க HC உத்தரவு

image

NTK ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறிய கருத்துகள் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் இருப்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு HC மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. பெரியார் பற்றி அவர் பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் மாநிலம் முழுவதும் திமுகவினர் அவர் மீது புகார் அளித்தனர். இந்நிலையில் நீதிமன்றம் இப்படி ஒரு தீர்ப்பை அளித்துள்ளது. இதனால், சீமான் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது.

News January 10, 2025

மனைவியை பிரிகிறாரா மனிஷ் பாண்டே?

image

சஹால்- தனஸ்ரீ விவாகரத்து செய்யப் போவதாக வெளியான சர்ச்சை ஓய்வதற்குள், இன்னொரு கிரிக்கெட் பிரபலமும் மனைவியை பிரிவதாக தகவல் பரவி வருகிறது. மனிஷ் பாண்டேவும், அஷ்ரிதா ஷெட்டியும், இன்ஸ்டாகிராமில் ஒருவருக்கொருவர் follow செய்வதை நிறுத்தி விட்டனராம். ஒன்றாக எடுத்த photos-ஐ இருவரும் டெலிட் செய்ததே, டைவர்ஸ் குறித்த தகவல் பரவ காரணமாக அமைந்துள்ளது. இருவருக்கும் கடந்த 2019ல் திருமணம் நடந்தது.

News January 10, 2025

திருப்பதியில் சாதாரண மக்களையும் கவனியுங்கள்

image

திருப்பதியில் கூட்டநெரிசலில் சிக்கி 6 பக்தர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஆந்திரா DY CM பவன் கல்யாண் கருத்து தெரிவித்துள்ளார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விஐபிக்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதும், சாதாரண பக்தர்களை புறக்கணிப்பதும் தொடர்கதையாகி வருவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், சாமானிய பக்தர்கள் மீது அதிக கவனம் செலுத்துமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

News January 10, 2025

அயர்லாந்தை துவம்சம் செய்த இந்தியா

image

அயர்லாந்து மகளிர் அணிக்கு எதிரான முதல் ODI போட்டியில், 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அசத்தல் வெற்றியை பெற்றுள்ளது. 239 ரன்கள் என்ற இலக்கை 34.3 ஓவர்களிலேயே கடந்து அயர்லாந்துக்கு தோல்வியை பரிசளித்துள்ளது. அதிகபட்சமாக பிரதிகா ரவால் 89 ரன்களையும், தேஜல் 53 ரன்களையும் அடித்து வெற்றிக்கு வித்திட்டனர். 3 போட்டிகளை கொண்ட இத்தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.

News January 10, 2025

‘டைவர்ஸ்’ கேட்டாலே கதை முடிஞ்சுது..!

image

சினிமா பார்க்கவும், சிரிக்கவும் கூட வடகொரியாவில் தடை இருப்பதை அறிவோம். இந்நிலையில், தற்போது அங்கு விவகாரத்து கோருவதை தடுக்கும் வகையிலும், அதிபர் கிம் ஜாங் உன் புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, விவாகரத்து கோரும் தம்பதிகளை 6 மாதங்கள் வரை சிறைக்கு அனுப்பவும், அங்கு கடுமையான வேலைகளை வழங்கியும், உணவு வழங்காமலும் சித்ரவதை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

News January 10, 2025

ECக்கு தடை.. புகழேந்தி புதிய வழக்கு

image

அதிமுக உள்கட்சி விவகாரம் குறித்து தேர்தல் ஆணையம் விசாரிக்க தடை விதித்த உத்தரவை எதிர்த்து ஐகோர்ட்டில் புகழேந்தி மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், அதிமுக பொதுச்செயலாளர், பொதுக்குழு உள்ளிட்ட கட்சி விவகாரங்களில் உண்மைக்கு மாறான தகவல்களை அளித்து தடை உத்தரவு பெற்றுள்ளதாக புகழேந்தி குறிப்பிட்டுள்ளார். முன்னதாக சூர்யமூர்த்தி என்பவர் தொடர்ந்த வழக்கில் இபிஎஸ் உள்ளிட்டோருக்கு EC நோட்டீஸ் அனுப்பியது.

News January 10, 2025

மயில் முட்டைகளை உடைக்க EX அமைச்சர் யோசனை!

image

தேசியப் பறவையாக இருக்கும் மயில்தான், விவசாயிகளுக்கு பிரதான எதிரியாகவும் உள்ளது. விவசாய நிலங்களை சேதப்படுத்துவதில் மயில்களின் பங்கு அதிகம். ஆனால், மயில்களை கொல்ல சட்டம் அனுமதிப்பதில்லை. இந்நிலையில், மயில்களின் உற்பத்தியை குறைக்க மயில் முட்டைகளை உடைக்க வேண்டும் என சட்டமன்றத்தில் Ex அமைச்சர் செங்கோட்டையன் யோசனை தெரிவித்தார். மயில் முட்டைகளை அழிப்பதும் சட்டப்படி குற்றம் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!