News January 10, 2025
அயர்லாந்தை துவம்சம் செய்த இந்தியா

அயர்லாந்து மகளிர் அணிக்கு எதிரான முதல் ODI போட்டியில், 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அசத்தல் வெற்றியை பெற்றுள்ளது. 239 ரன்கள் என்ற இலக்கை 34.3 ஓவர்களிலேயே கடந்து அயர்லாந்துக்கு தோல்வியை பரிசளித்துள்ளது. அதிகபட்சமாக பிரதிகா ரவால் 89 ரன்களையும், தேஜல் 53 ரன்களையும் அடித்து வெற்றிக்கு வித்திட்டனர். 3 போட்டிகளை கொண்ட இத்தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.
Similar News
News November 18, 2025
இபிஎஸ் குற்றச்சாட்டுக்கு திமுக மறுப்பு

SIR கணக்கீட்டு படிவங்களை பூர்த்தி செய்வதில் குழப்பம் உள்ளதால், இதுதொடர்பாக ECI விளக்கமளிக்க வேண்டும் என்று திமுக சட்ட செயலாளர் என்.ஆர்.இளங்கோ வலியுறுத்தியுள்ளார். SIR கணக்கீட்டு படிவங்களை பூர்த்தி செய்யவில்லை என்றால் வாக்குரிமை பறிபோகும் நிலை உள்ளதாக குற்றஞ்சாட்டிய அவர், திமுக பூத் லெவல் ஏஜெண்ட்டுகளுக்கு மட்டும் கணக்கீட்டு படிவம் வழங்கப்படுவதாக EPS சொல்வது தவறான தகவல் என்றும் மறுத்துள்ளார்.

PAK-ன் 255 ட்ரோன்களை வீழ்த்திய இந்தியா

பாகிஸ்தானில் இருந்து ட்ரோன்கள் மூலம் போதைப்பொருள்கள், ஆயுதங்களை கடத்தி வருவது வாடிக்கையாகி வருகிறது. சமீபத்தில் கூட, இப்படியொரு குற்றச்சாட்டில் விஷால் பச்சார் என்பவரை <<18300589>>NIA <<>>கைது செய்தது. இந்நிலையில், நடப்பு ஆண்டில் மட்டும், பாகிஸ்தானின் 255 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக BSF தெரிவித்துள்ளது. மேலும், தற்போது மூடுபனி காலம் என்பதால், எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.