news

News January 10, 2025

அதிபராகும் முன், ரிலாக்ஸ் ஆன டிரம்ப்! காரணம் இதுதான்

image

PORN நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸுக்கு பணம் அளித்த வழக்கில், டொனால்ட் டிரம்பை நிபந்தனையின்றி அமெரிக்க நீதிமன்றம் விடுவித்துள்ளது. வரும் 20ஆம் தேதி அமெரிக்க அதிபராக அவர் பதவியேற்க உள்ள நிலையில், கோர்ட் இத்தகைய தீர்ப்பை வழங்கி உள்ளது. குற்றச்சாட்டு உறுதியான போதும், டிரம்பை விடுவித்து வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. நடிகையுடனான தொடர்பை வெளியில் கூறாமல் இருக்க பணம் கொடுத்ததாக வழக்கு தொடரப்பட்டது.

News January 10, 2025

IJKவில் இணைந்தார் பவர் ஸ்டார்

image

நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் இன்று பாரிவேந்தரின் IJK கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். சிறுநீரக கோளாறு காரணமாக கடந்த சில வாரங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று திடீரென இந்திய ஜனநாயக கட்சியில் இணைந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். இவர் ஏற்கெனவே தமாக, பாஜக, குடியரசுக் கட்சி ஆகியவற்றில் இருந்துள்ளார். 2019ஆம் ஆண்டு தேர்தலிலும் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

News January 10, 2025

பல் வலிக்கு நிரந்தர தீர்வு!

image

25 மிளகு (நன்றாக இடித்து), சிறிது பட்டையை அரை லிட்டர் தண்ணீரில் போட்டு கொதிக்க விடவும்.
1 டம்ளர் அளவுக்கு நீர் சுண்டியதும் 1 ஸ்பூன் மஞ்சள் தூள் கலந்து, மேலும் 1 நிமிடம் கொதிக்க விட்டு அடுப்பிலிருந்து இறக்கவும்.
அந்த சுடுநீரில் நறுக்கி வைத்த இஞ்சி துண்டுகளை (சிறிதளவு) சேர்த்து 20 நிமிடங்கள் கழித்து குடிக்கவும்.
தொடர்ந்து 3 நாட்கள் இந்த கசாயத்தை குடித்துவர பல் வலிக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.

News January 10, 2025

இளம் பெண்ணை காதலிக்கும் 51 வயது நடிகர்

image

இன்று தனது 51ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் ஹ்ரித்திக் ரோஷனுக்கு அவருடைய காதலி செல்ஃபியுடன் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். காதலி சபா ஆசாத்தின் வயது என்ன தெரியுமா? வெறும் 39. ஹ்ரித்திக் ஏற்கெனவே நடிகை சுசானா கானை திருமணம் செய்து விவாகரத்து செய்துவிட்டார். அவருக்கு இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில் தற்போது சபா ஆசாத்தை டேட் செய்து வருகிறார்.

News January 10, 2025

அமெரிக்கா, சிங்கப்பூருக்கா போக முடியும்? திருமா.

image

டங்ஸ்டன் திட்டத்தால் நாடு வல்லரசு ஆகும் என்றால் எங்களுக்கு அது தேவையில்லை என திருமாவளவன் தெரிவித்துள்ளார். மேலூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், டங்ஸ்டன் திட்டத்திற்காக நிலங்களை கொடுத்துவிட்டு அனைவரும், அமெரிக்கா, சிங்கப்பூருக்கா செல்ல முடியும் என கேள்வி எழுப்பினார். மேலும், சுற்றுச்சூழலை காக்க போராட வேண்டிய நிர்பந்தம் உள்ளதால் இந்த திட்டத்தை நாங்கள் எதிர்க்கிறோம் என்றார்.

News January 10, 2025

பெட் ரூமில் இதெல்லாம் வேண்டாமே!

image

தூங்கவும், ரிலாக்ஸ் ஆகவும் தான் பெட் ரூம் உள்ளது. ஆனால், பெரும்பாலான வீடுகளில் குழந்தைகள் விளையாடுவது, சாப்பிடுவது, பெரியவர்கள் வேலை செய்வது என, எல்லாமே பெட் ரூமில் தான் நடக்கிறது. இதை தவிர்த்தாலே, படுக்கையறை பரவசமூட்டும் இடமாகும். குழந்தைகளை பெட் ரூமுக்குள் ஓடி விளையாட அனுமதிக்காதீர்கள். தூசி, அழுக்கை தவிர்க்க நூல், ஃபர் பொம்மைகளை உள்ளே அனுமதிக்காதீர். Sleep Well! Good Night!

News January 10, 2025

1000 Job Application.. 50 Interview.. AIஇன் மாயாஜாலம்!

image

ஒரே இரவில் 1,000 வேலைக்கு விண்ணப்பித்து 50 வேலைக்கான Final Round வரை AI கொண்டு வந்துள்ளது. ஊழியர் உருவாக்கிய AI Bot, ஒவ்வொரு வேலைக்கும் ஏற்ப Resume உருவாக்கி விண்ணப்பித்துள்ளது. வேலைக்கு எடுக்கிற நிறுவனங்களும் AI பயன்படுத்துவதால் ப்ராசஸ் எளிதாக நடந்துள்ளது. அவர் தூங்கி எழுவதற்குள் 50 Interview-க்கான அழைப்பு வந்துள்ளதை பார்த்து ஆடிப் போய்விட்டார். வேலை கொடுத்தா யாருக்கு கொடுப்பாங்கன்னு தெரியல.

News January 10, 2025

IND vs ENG டிக்கெட் விற்பனை எப்போது?

image

இந்தியா இங்கிலாந்து இடையேயான டி20 போட்டி ஜனவரி 25ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான டிக்கெட் விற்பனை ஆன்லைனில் ஜனவரி 12ஆம் தேதி தொடங்கும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. காலை 11 மணி முதல் நடைபெறவிருக்கும் டிக்கெட் விற்பனையில் ₹1500 முதல் ₹15,000 வரை டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. போட்டியை பார்க்க நீங்க போறீங்களா?

News January 10, 2025

நான் கடவுள் அல்ல; மனிதன் தான்: PM மோடி

image

நிகில் காமத் என்பவர் நடத்தும் ‘PODCAST’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசினார். அப்போது, “நான் கடவுள் அல்ல; மனிதன்தான். நானும் சில தவறுகளை செய்வேன். ஆனால், அந்த தவறுகளை தீய எண்ணத்தில் செய்வதில்லை” என மோடி கூறினார். முன்னதாக, கடந்த ஆண்டு ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், தான் மனிதர்களை போல பிறக்கவில்லை; பரமாத்மாவால் அனுப்பப்பட்டவன் எனக் கருதுவதாக பேசியது குறிப்பிடத்தக்கது.

News January 10, 2025

ஒரே டிப்ரஷனா? கவலைப் படாதீங்க!

image

டிப்ரஷனை உடனே சரிசெய்ய முடியாது. ஆனால், இதையெல்லாம் follow செய்தால் உங்கள் மகிழ்ச்சியை மீட்கலாம்: *STRESS-ஐ குறையுங்கள் *தேவையான அளவு தூங்கவும் *சத்தான, உற்சாகமூட்டும் உணவுகள் சாப்பிடுங்கள் *நெகடிவ் எண்ணங்களை தவிருங்கள் *எதையும் தள்ளிப் போடாதீர் *தினசரி வீட்டு வேலைகளில் கவனம் செலுத்தவும் *உங்கள் உணர்வுகளை புரிந்து ஆதரவு காட்டுபவர்களுடன் தொடர்பில் இருங்கள் *மனநல கவுன்சலரிடம் ஆலோசனை பெறலாம்.

error: Content is protected !!