news

News January 11, 2025

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

image

இன்று (ஜன. 11) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.

News January 11, 2025

மாநிலக் கட்சியாக மலர்ந்த நாம் தமிழர்!

image

நாம் தமிழர் கட்சியினரை உற்சாகத்தில் ஆழ்த்தும் வகையிலான செய்தியை தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நாதகவை மாநிலக் கட்சியாக தேர்தல் ஆணையம் அங்கீகரித்து கடிதம் அனுப்பியுள்ளது. இதனை அக்கட்சியினர் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து நின்று 8.22% வாக்குகளை பெற்றதால் அதற்கு மாநிலக் கட்சி அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

News January 11, 2025

‘வீர தீர சூரன்’ முதல் பாடல் நாளை ரிலீஸ்

image

அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ‘வீர தீர சூரன்’ படத்தின் முதல் பாடல் ‘கள்ளூறும்’ நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. பொங்கலுக்கு படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வரும் 31ஆம் தேதி ரிலீசாகும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

News January 11, 2025

ராசி பலன்கள் (11-01-2025)

image

➤மேஷம் – பொறுமை ➤ ரிஷபம் – வெற்றி ➤மிதுனம் – பகை ➤கடகம் – பாராட்டு ➤சிம்மம் – அச்சம் ➤கன்னி – செலவு ➤துலாம் – ஊக்கம் ➤விருச்சிகம் – அன்பு ➤தனுசு – ஆதாயம் ➤மகரம் – நன்மை ➤கும்பம் – புகழ் ➤மீனம் – அமைதி.

News January 11, 2025

கொஞ்சம் பார்த்து வரி போடுங்க: வடிவேலு

image

ஏழைகளுக்கு கொஞ்சம் பார்த்து வரி போடுங்கள் என IT அதிகாரிகளிடம் நடிகர் வடிவேலு கோரிக்கை வைத்துள்ளார். மதுரையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் பொங்கல் விழா நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசிய அவர், இருப்பவர்களிடம் வரியை வாங்கிக் கொள்ளுங்கள் என அதிகாரிகளிடம் நகைச்சுவையாக கோரிக்கை விடுத்தார். மேலும், இப்போதெல்லாம் தேர்வு செய்து மட்டுமே படங்களில் நடித்து வருவதாகவும் தெரிவித்தார்.

News January 11, 2025

நாளை வரலாறு படைக்குமா இந்தியா?

image

விண்வெளியில் 2 செயற்கை கோள்களை இணைக்கும் ‘ஸ்பேஸ் டாக்கிங்’ திட்டத்தை இஸ்ரோ நாளை செயல்படுத்த உள்ளது. அதற்காக ஸ்பேடெக்ஸ் ஏ- ஸ்பேடெக்ஸ் பி செயற்கை கோள்கள் 1.5 கி.மீ இடைவெளியில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. ஏற்கனவே 2 முறை தள்ளிவைக்கப்பட்ட இந்த செயல்பாடு நாளை வெற்றிகரமாக செயல்படுத்தபடுமா என நாடே எதிர்பார்த்து வருகிறது. இதில் வெற்றி பெற்றால் அமெரிக்கா, சீனா, ரஷ்யா நடுகளின் பட்டியலில் நாமும் இணைவோம்.

News January 11, 2025

ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக போட்டி

image

EVKS இளங்கோவன் மறைவை அடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்.5இல் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. ஏற்கனவே, இத்தொகுதியில் இரண்டு முறையும் காங்., வெற்றி பெற்றதால், இந்த முறையும் தங்களுக்கே அங்கு வாய்ப்பளிக்க வேண்டும் என அக்கட்சி கோரி வந்தது. அதே சமயத்தில், திமுகவும் அத்தொகுதியை விடாப்பிடியாக கேட்டு வந்தது. இந்நிலையில், தற்போது ஈரோடு கிழக்கில் திமுகவே போட்டியிடும் என தமிழக காங்கிரஸ் அறிவித்துள்ளது.

News January 10, 2025

புதுச்சேரியில் சரக்கு விலை உயர்கிறது

image

தமிழ்நாட்டில் உள்ளவர்கள் மலிவு விலையில் மதுபானம் வாங்கப் போகும் இடம் புதுச்சேரி தான். அந்த நிலையை மாற்றும் வகையில், அம்மாநில அரசு புதிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது. அங்கு செயல்படும் மதுபான விற்பனை நிலையங்களுக்கான கலால் வரி மற்றும் உரிம கட்டணத்தை உயர்த்த அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இதனால், புதுச்சேரியில் மது விலை அதிகரிக்கவுள்ளது.

News January 10, 2025

தவெகவில் 4 ஆண்டுகள் மட்டுமே பதவி

image

தமிழக வெற்றிக் கழகத்தில் பதவிகளை தேர்தல் மூலம் நிரப்பும் விண்ணப்பப் படிவங்களை கட்சி வழங்கி வருகிறது. அதில், கட்சிப் பதவியின் காலம் 4 ஆண்டுகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. செயலாளர், பொருளாளர், செயற்குழு உறுப்பினர்கள் ஆகிய பதவிகளை தேர்தல் மூலம் நிரப்ப கட்சித் தலைமை முடிவு செய்துள்ளது. விஜய் வகிக்கும் தலைவர் பதவிக்கும் தேர்தல் நடக்குமா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

News January 10, 2025

நாம் தமிழருக்கு ‘புலி’ சின்னம் கொடுக்க முடியாது

image

சீமானின் நாதகவுக்கு மாநில கட்சி அந்தஸ்தை தலைமை தேர்தல் ஆணையம் இன்று வழங்கியது. இதையடுத்து, தங்களுக்கு உழவு செய்யும் விவசாயி சின்னம் அல்லது புலி சின்னத்தை வழங்குமாறு நாதக சார்பில் கோரப்பட்டது. ஆனால், விலங்கு என்பதால் புலி சின்னத்தையும், நாதகவின் பழைய சின்னத்தை ஒத்திருப்பதால் உழவு செய்யும் விவசாயி சின்னத்தையும் தர முடியாது என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.

error: Content is protected !!