News January 11, 2025

மாநிலக் கட்சியாக மலர்ந்த நாம் தமிழர்!

image

நாம் தமிழர் கட்சியினரை உற்சாகத்தில் ஆழ்த்தும் வகையிலான செய்தியை தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நாதகவை மாநிலக் கட்சியாக தேர்தல் ஆணையம் அங்கீகரித்து கடிதம் அனுப்பியுள்ளது. இதனை அக்கட்சியினர் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து நின்று 8.22% வாக்குகளை பெற்றதால் அதற்கு மாநிலக் கட்சி அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

Similar News

News November 11, 2025

BREAKING: பாலிவுட் நடிகர் தர்மேந்திரா காலமானார்

image

பாலிவுட் நடிகர் தர்மேந்திரா (89) காலமானார். உடல்நலக்குறைவால் மும்பையின் பிரீச் கேண்டி ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், அவரது உயிர் பிரிந்ததாக India Today செய்தி வெளியிட்டுள்ளது. 1960-ல் வெளியான ‘Dil Bhi Tera Hum Bhi Tere’ படத்தில் அறிமுகமான அவர், 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

News November 11, 2025

விஜய் கட்சியில் இருந்து விலகினார்

image

தவெகவின் ராணிப்பேட்டை மாவட்ட வழக்கறிஞர் அணியின் இணை ஒருங்கிணைப்பாளர் அஜய், சீமான் முன்னிலையில் நாதகவில் இணைந்தார். மேலும், அவரது ஆதரவாளர்கள் 100-க்கும் மேற்பட்டோரும் நாதகவில் இணைந்துள்ளனர். மேலும், தவெகவில் உழைக்கும் நிர்வாகிகளுக்கு மதிப்பில்லை, ஒருங்கிணைப்பு இல்லை எனவும் அஜய் குற்றம்சாட்டியுள்ளார். <<18239770>>பல மாவட்டங்களில்<<>> பொறுப்புக்கு பணம் வாங்கப்படுவதாக தவெக மீது ஏற்கெனவே குற்றச்சாட்டு உள்ளது.

News November 11, 2025

அவரை கேட்டுதான் படங்களுக்கு OK சொல்கிறாரா துருவ்?

image

‘பைசன்’ வெற்றிக்குப் பிறகு துருவ் விக்ரம் புதிய படங்கள் எதிலும் ஒப்பந்தமாகவில்லை. தனது அடுத்த படக்கதையையும், இயக்குநரையும் மாரி செல்வராஜே முடிவு செய்யட்டும் என்று தனக்கு வரும் கதைகள் அனைத்தையும் அவருக்கே ரீடைரக்ட் செய்கிறாராம். இதை சில இயக்குநர்கள் விரும்பவில்லையாம். இன்னொரு பக்கம், கதை சொல்ல வருபவர்களிடம் தனது சம்பளத்தையும் உயர்த்தி கேட்பதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.

error: Content is protected !!