India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அனைத்து தனிநபா் கடன் பிரிவுகளிலும் Fixed interest விகிதத்தில் வாடிக்கையாளருக்கு வங்கிகள் கடன் வழங்குவது கட்டாயம் என RBI அறிவித்துள்ளது. வட்டி விகிதத்தை மாற்றியமைக்கும் நேரத்தில், மாறக்கூடிய வட்டி விகித நடைமுறையிலிருந்து, மாற்றமில்லாத வட்டி விகித முறைக்குக் கடன் பெற்றவா் மாறிக்கொள்வதற்கான வாய்ப்பை வங்கிகள் வழங்க வேண்டும். இதனால் வட்டி விகிதம் உயர்வின்போது வாடிக்கையாளர்களுக்கு சுமை குறையும்.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற தவாக பாடுபடும் என்று அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் அறிவித்துள்ளார். திமுகவை தொடர்ச்சியாக அவர் விமர்சித்துவந்த நிலையில், கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக பேசப்பட்டது. இந்நிலையில் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்திருப்பதன் மூலம் கூட்டணியில் தொடர்வதை அவர் உறுதி செய்திருக்கிறார்.
*காலை உணவில் கவனம் வேண்டும். எடையை குறைக்க நினைத்து காலை உணவை தவிர்க்க வேண்டும். அது எதிர்மறையான விளைவுகளை கொடுக்கும் *உயர் ரத்த அழுத்தம், இதயம் சார்ந்த சுகாதார பிரச்னைகளை தவிர்க்க, உப்பின் அளவை குறையுங்கள் *சுகாதாரத்தை கடைப்பிடியுங்கள் *உடலுக்கு உழைப்பை தாருங்கள். நீண்ட கால ஆரோக்கியத்திற்கு, 30 நிமிடமாவது உடற்பயிற்சியும் செய்யுங்கள் *தினசரி 8 மணி நேரம் தூக்கத்தை உறுதி செய்து கொள்ளுங்கள்.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக முடிவு செய்ய இன்று அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை கூட்டியிருக்கிறார் EPS. இத்தேர்தலில் தொகுதியை காங்கிரஸ் விட்டுக் கொடுத்ததால், திமுக நேரடியாக களம் காண்கிறது. அதற்காக, விசி சந்திரகுமாரை வேட்பாளராகவும் அறிவித்துவிட்டது. இந்நிலையில், தங்களது கட்சியின் நிலைபாடு தொடர்பான முக்கிய முடிவை EPS இன்று அறிவிக்கவுள்ளார்.
‘அந்த வெளக்கமாத்தை எடு கோதாவரி’ டயலாக்கை யாரும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. விசுவின் ‘சம்சாரம் அது மின்சாரம்’படத்தில் ‘கோதாவரி’ கேரக்டரில் ரசிகர்களிடம் நீங்கா இடம் பிடித்தவர் <<15123583>>கமலா காமேஷ்<<>>. தமிழ், கன்னடா, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 480 திரைப்படங்களில் நடித்துள்ள இவர், 1980களில் ‘அம்மா’ கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் அன்பைப் பெற்றார். பிரபல வில்லன் நடிகர் ரியாஸ் கான் இவரது மருமகன் ஆவார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்லும் பொதுமக்களின் தேவை கருதி TN அரசு சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது. அந்தவகையில், வெள்ளிக்கிழமையான நேற்று ஒரே நாளில் மட்டும் அரசு சிறப்பு பேருந்தில் 1,87,33 பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர். இவை தவிர்த்து, ஆம்னி பேருந்து, கார், ரயில் போன்ற போக்குவரத்துகளில் மக்கள் அதிகளவில் படையெடுத்ததால், நேற்றைய தினம் சென்னை ஸ்தம்பித்தது.
பிரபல நடிகை கமலா காமேஷ் (72) உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார். சம்சாரம் அது மின்சாரம், கடலோரக் கவிதைகள், அலைகள் ஓய்வதில்லை ஆகிய படங்களின் மூலம் பிரபலம் ஆனவர் கமலா காமேஷ். சுமார் 500 படங்களில் நடித்திருக்கும் இவர், 1974ஆம் ஆண்டு இசையமைப்பாளர் காமேஷை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு உமா ரியாஸ் என்ற மகள் உண்டு. RJ பாலாஜியின் ‘வீட்ல விசேஷம்’தான் கமலா காமேஷின் கடைசி படம் ஆகும்.
கிளாமரை தவிர்த்து தனது நடிப்பாலேயே ரசிகர்களை ஈர்த்தவர். சின்னத்திரையில் மானாட மயிலாடலாமா என பேசி கொண்டிருந்தவர், தற்போது தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு சினிமாவிலும் மோஸ்ட் வண்டட் நடிகையாக இருக்கிறார். திரையில் பார்க்கும் போது, “அட இது நம்ப ஊரு பொண்ணுப்பா” என சட்டென சொல்ல வைத்தவர். தமிழ் பேச தெரியணும், நன்றாக நடிக்க தெரியணும் என இயக்குனர்கள் யோசித்தால் முதல் சாய்ஸ் இவரே. இன்னுமா தெரியல….
மதுரையில் இருந்து அருப்புக்கோட்டை வழியாக தூத்துக்குடிக்கு புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டம் கைவிடப் படுவதாக அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இத்திட்டம் வேண்டாம் என்று தமிழக அரசு கடிதம் கொடுத்ததாக அவர் கூறியுள்ளார். தற்போது வரை மதுரையில் இருந்து திருமங்கலம் கோவில்பட்டி வழியாகத்தான் ரயில்கள் தூத்துக்குடிக்கு செல்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தையும் தனது பக்கம் திருப்பியது அயோத்தி ராமர் கோயில் பிரதிஷ்டையின் முதலாம் ஆண்டு இன்று கொண்டாடப்படுகிறது. சர்ச்சைக்குரிய இடத்தில் 2019ல் நீதிமன்ற உத்தரவை அடுத்து, 2020ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். 1528ல் தொடங்கிய இந்த விவகாரம், 2024ல் ஜன.22ல் ராமர் பிரதிஷ்டையில் முடிந்தது. இன்று ஒரு வருட காலமும் கடந்து விட்டது.
Sorry, no posts matched your criteria.