News January 11, 2025
இன்றுடன் அயோத்தி ராமர் கோயிலின் 1ம் ஆண்டு

கடந்த ஆண்டு ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தையும் தனது பக்கம் திருப்பியது அயோத்தி ராமர் கோயில் பிரதிஷ்டையின் முதலாம் ஆண்டு இன்று கொண்டாடப்படுகிறது. சர்ச்சைக்குரிய இடத்தில் 2019ல் நீதிமன்ற உத்தரவை அடுத்து, 2020ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். 1528ல் தொடங்கிய இந்த விவகாரம், 2024ல் ஜன.22ல் ராமர் பிரதிஷ்டையில் முடிந்தது. இன்று ஒரு வருட காலமும் கடந்து விட்டது.
Similar News
News November 12, 2025
தமிழ் நடிகர் மரணம்.. நடிகை கண்ணீருடன் இரங்கல்

மறைந்த நடிகர் அபிநய் குறித்து நடிகை விஜி உருக்கமான பதிவை வெளியிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார். ‘சென்னை 28’ படத்துக்கு பிறகு ஒரு பெரிய விளம்பரப் படத்தில் அபிநய் உடன் நடித்தேன். அப்போது ஒருநாள் அவரின் மனதில் இருந்த வலியை கொட்டித் தீர்த்தார். தற்போது அவர் காலமானார் என்ற செய்தியை கேட்டதும் அழுதேன். அவரின் போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டது. ஒருவழியாக அமைதியை அடைந்துவிட்டார் என்று பதிவிட்டுள்ளார்.
News November 12, 2025
Bussiness Roundup: ஆயுள் காப்பீடு பாலிசி மதிப்பு ₹34,007 கோடி

*பங்குச்சந்தை 2-அவது நாளாக உயர்ந்து வர்த்தகத்தை நிறைவு செய்தன. *GST 2.0 எதிரொலியாக ஆயுள் காப்பீடு பாலிசி மதிப்பு 12.1% அதிகரித்து ₹34,007 கோடியாக உயர்வு. *ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 14 காசுகள் உயர்ந்து ₹88.57 ஆனது. *வெளிநாடுகளில் ஏற்பட்டுள்ள தேவைகள் காரணமாக அரிசி ஏற்றுமதி உயரும் என எதிர்பார்ப்பு. *கடந்த 4 ஆண்டுகளில், இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் VIVO முதலிடம்.
News November 12, 2025
நடிகர் தர்மேந்திரா டிஸ்சார்ஜ் ஆனார்!

பிரபல பாலிவுட் நடிகர் தர்மேந்திரா டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார். மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி ஹாஸ்பிடலில் இருந்து தீவிர சிகிச்சை பிரிவில் அவர் வெண்டிலேட்டரில் வைக்கப்பட்டிருந்தார். நேற்றைய தினம், அவர் உயிரிழந்து விட்டதாக செய்திகள் வெளிவந்து, ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்த நிலையில், அவரது குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்ததோடு, கடும் கண்டனங்களையும் பதிவுசெய்தது குறிப்பிடத்தக்கது.


