India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சுவாமி விவேகானந்தரின் பங்களிப்பை போற்றும் வகையில், அவரது பிறந்தநாளான இன்று தேசிய இளைஞர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் ஆன்மிக மதிப்பீடுகளை உலகம் முழுவதும் கொண்டு சென்றவர். இளைஞர்களே ஒரு நாட்டின் அடித்தளம் என எப்போதும் கூறுபவர். 1893ஆம் ஆண்டில் அமெரிக்காவில் அவர் ஆற்றிய உரை, உலகச் சிறப்பு வாய்ந்ததாக அமைந்தது. நமது நாட்டின் கலாசாரப் பெருமையை உலகுக்குப் பரப்புவதற்குத் தொடர்ந்து பாடுபட்டார்.
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, வரலாற்றில் இல்லாத அளவிற்கு ₹86.4 ஆக குறைந்ததற்கு, பிரதமர் மக்களிடம் பதில் சொல்ல வேண்டும் என பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார். மன்மோகன் சிங் ஆட்சியில் ₹58-59 ஆக இருந்தபோது, இதை அரசின் கவுரவத்தோடு மோடி இணைத்து பேசியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், தனக்கு எல்லாம் தெரியும் என்ற வகையில் அவர் நடந்து கொண்டதாகவும் விமர்சித்துள்ளார்.
முதல் முறையாக ஒரு ஆண் இயக்குநரிடம் தனது பீரியட்ஸ் பற்றி கூறியதை நித்யா மேனன் நினைவுகூர்ந்துள்ளார். ‘சைக்கோ’ ஷூட்டிங்கின் முதல் நாள் மிஷ்கினிடம் இதை கூறியதாகவும், உடனே எதுவும் செய்ய வேண்டாம், ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள் என அவர் தெரிவித்தாகவும் நித்யா ஆச்சரியத்துடன் பகிர்ந்துள்ளார். அந்த ஒரு தருணத்தில், மிஷ்கினின் இரக்க குணத்தை தான் உணர்ந்து கொண்டதாகவும் கூறியுள்ளார்.
குடியரசு தின விழாவில் வெளிநாட்டு தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்பது வழக்கம். அந்த வகையில், 26ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள இந்தியாவின் 76ஆவது குடியரசு தின விழாவில், இந்தோனேசிய அதிபர் பிரபொவொ கபியண்டோ பங்கேற்க உள்ளதாக அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய அரசு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசியல்வாதியாக இருப்பது, அரசியலில் வெற்றி பெறுவது இரண்டும் வெவ்வேறானவை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அர்ப்பணிப்பு, கடின உழைப்பு, வெற்றியை கொடுக்கலாம், ஆனால், அது வெற்றிகரமான அரசியல்வாதியாக உங்களை உருவாக்கும் என சொல்ல முடியாது எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், அரசியலுக்கு வர நினைப்பவர்கள் திட்டத்தோடு வரவேண்டும் எனவும், அது லட்சியத்தை விட மேலானது எனவும் தெரிவித்துள்ளார்.
*எல்லா உயிரினங்கள் மீதும் அன்பு செலுத்துவதே மனிதனின் மிக உயர்ந்த பண்பு. *ஒரு மணிநேரத்தை வீணடிக்கத் துணிந்த ஒரு மனிதன் வாழ்க்கையின் மதிப்பை அறியாதவன். *ஒரு மொழி என்பது ஒரு உயிரினத்தைப் போன்றது, அழிந்துபோனால் ஒருபோதும் மீண்டும் தோன்றாது. *ஒரு பிழையை அழிப்பது ஒரு புதிய உண்மையை நிறுவுவதைப் போல சிறந்த சேவையாகும், சில சமயங்களில் அதைவிடவும் சிறந்தது.
பிரதமர் மோடியையும், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியையும் இணைத்து சோஷியல் மீடியாக்களில் பல்வேறு மீம்ஸ்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இதை எப்படி பார்க்கிறீர்கள் என தனியார் நிகழ்ச்சியில் பிரதமர் மோடியிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், இது எப்போதும் நடந்து கொண்டிருக்கும் விஷயம் எனவும், பொதுவாக மீம்ஸ் அல்லது ஆன்லைன் விவாதங்களில் தான் கவனம் செலுத்துவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
ஆப்பிள் நிறுவனத்தின் நஷ்டத்தை, APP தயாரிப்பாளர்களான தங்கள் மீது வரி என்ற பெயரில் சுமத்துவதாக பேஸ்புக் CEO மார்க் ஜுக்கர்பெர்க் குற்றஞ்சாட்டியுள்ளார். ஐபோன்களின் விற்பனை கடுமையாக சரிந்துள்ளதாகவும், எந்த ஒரு புதிய ஐடியாக்களையும் கொண்டு வராமல், ஸ்டீவ் ஜாப்ஸ் உருவாக்கிய வெற்றியின் மீது 20 ஆண்டுகளாக அந்நிறுவனம் உட்கார்ந்து இருப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
சினிமா துறை மனிதாபிமானம் அற்றதாக உள்ளதாக நித்யா மேனன் கோபத்துடன் தெரிவித்துள்ளார். ஒருவர் எவ்வளவு நோய்வாய் பட்டாலும், கடுமையாக உடல்நலம் குன்றி இருந்தாலும் கண்டிப்பாக ஷூட்டிங்கில் கலந்து கொள்ள வேண்டும் என எதிர்பார்ப்பதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், எவ்வளவு வலியை அனுபவித்தாலும், உடலுக்கு என்ன ஆனாலும் அதை செய்தே ஆக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: இல்லறவியல் ▶அதிகாரம்: பிறனில் விழையாமை ▶குறள் எண்: 146 ▶குறள்: பகைபாவம் அச்சம் பழியென நான்கும் இகவாவாம் இல்லிறப்பான் கண். ▶பொருள்: பிறன் மனைவியிடம் முறைகேடாக நடக்க நினைப்பவனிடமிருந்து பகை, தீமை, அச்சம், பழி ஆகிய நான்கும் நீங்குவதில்லை.
Sorry, no posts matched your criteria.