News January 12, 2025
சினிமா மனிதாபிமானம் அற்றது: நித்யா

சினிமா துறை மனிதாபிமானம் அற்றதாக உள்ளதாக நித்யா மேனன் கோபத்துடன் தெரிவித்துள்ளார். ஒருவர் எவ்வளவு நோய்வாய் பட்டாலும், கடுமையாக உடல்நலம் குன்றி இருந்தாலும் கண்டிப்பாக ஷூட்டிங்கில் கலந்து கொள்ள வேண்டும் என எதிர்பார்ப்பதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், எவ்வளவு வலியை அனுபவித்தாலும், உடலுக்கு என்ன ஆனாலும் அதை செய்தே ஆக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 17, 2025
சவுதி அரேபியா பஸ் விபத்து.. விஜய் உருக்கமான இரங்கல்

<<18308684>>சவுதி அரேபியா பஸ் விபத்தில்<<>> 45 இந்தியர்கள் உயிரிழந்த துயரத்திற்கு விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். மதீனா அருகே நிகழ்ந்த விபத்தில் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் காலமான செய்தியறிந்து மன வேதனை அடைந்ததாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதாகவும், குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் விஜய் குறிப்பிட்டுள்ளார்.

பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய சிறுவன்

சில செய்திகளை பார்க்கும்போது பள்ளி மாணவர்கள் தவறான வழியில் செல்கிறார்களோ என்ற அச்சம் எழும். திருச்சி திருவெறும்பூரில், 10-ம் வகுப்பு மாணவியை 17 வயது சிறுவன் கர்ப்பமாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போக்சோ சட்டத்தின் கீழ் சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான். இம்மாதிரியான சூழலை தடுக்க பள்ளி மாணவர்களிடையே போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். உங்கள் கருத்து?