India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

விஜய் தேவரகொண்டாவின் Ex.காதலி யார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. இவரது முதல் படத்தில் (பெல்லி சூப்புலு) ஜூனியர் ஆர்டிஸ்ட்டாக வந்த பெல்ஜியமை சேர்ந்த வர்ஜீனியா என்ற பெண்ணோடு தான் விஜய் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாக கூறப்படுகிறது. சில ஆண்டுகள் கழித்து இருவருக்குள் இடைவெளி அதிகரித்ததால் அது பிரேக் அப்பில் முடிந்ததாகவும் சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. ஆனால் விஜய் தேவரகொண்டா தரப்பு இதனை மறுத்துள்ளது.

தமிழ்நாட்டின் முன்னணி சுகாதார உணவு தயாரிப்பாளரான Southern Health Foods-ஐ ரிலையன்ஸ் கையகப்படுத்தியுள்ளது. இதன்மூலம் இந்நிறுவனத்தின் புகழ்பெற்ற பிராண்டான Manna ரிலையன்ஸ் வசமாகிறது. Southern Health Foods, 2 தசாப்தங்களுக்கு மேலாக ஆரோக்கியமான உணவுகளின் முன்னணி உற்பத்தியாளராக உள்ளது. ரிலையன்ஸ் இதற்குமுன், தமிழ்நாட்டின் மிகவும் பிரபலமான உதயம் நிறுவனத்தை வாங்கியது குறிப்பிடத்தக்கது.

முட்டையின் மஞ்சள் கருவில் கொழுப்பு அதிகமாக இருப்பதாக நம்பி பலரும் வெள்ளைக்கருவை மட்டுமே சாப்பிடுகின்றனர். ஆனால், மஞ்சள் கருவில் வைட்டமின் ஏ, ஈ மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்கள் இருப்பதாகவும், இதனால் முழு முட்டையையும் சாப்பிட வேண்டும் எனவும் டாக்டர்கள் கூறுகின்றனர். மேலும், மஞ்சள் கரு இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

உத்தரபிரதேசத்தில் இளம்பெண் ஒருவர் திடீரென காணாமல் போன நிலையில், அவர் நாகினியாக மாறிவிட்டதாக பெற்றோர் கூறியதால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கு அந்த பெண்ணின் படுக்கையில் கிடந்த 5 அடி நீள பாம்புத் தோலே காரணம் என தெரியவந்தது. ஊரே பீதியில் உறைந்த நிலையில், தனது காதலனுடன் தப்பியோடுவதை திசைதிருப்பும் முயற்சியாக அந்தப் பெண் வேண்டுமென்றே பாம்புத் தோலை விட்டுச்சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் முடிகளை அகற்றுவதில் சர்க்கரை + தேன் முக்கிய பங்கு வகிக்கிறது. ➤இதற்கு 1 ஸ்பூன் தேன், 2 ஸ்பூன் சர்க்கரையை எடுத்துகொள்ளுங்கள் ➤அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைக்கவும் ➤பிறகு சர்க்கரை கரையும் வரை கொதிக்க வைத்து ஆறியவுடன், முடிகள் உள்ள இடத்தில் தடவுங்கள் ➤வாரத்திற்கு ஒரு முறை இதனை செய்துவந்தால் முகத்தில் உள்ள முடி முற்றிலுமாக உதிர்ந்துவிடும். SHARE.

தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குழு அமைப்பது தொடர்பாக நாளை ஸ்டாலினை சந்திக்க உள்ளதாக செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். டெல்லியில் ராகுல் உடனான சந்திப்புக்கு பின் பேசிய அவர், திமுக உடனே பேச்சுவார்த்தை குழு அமைக்க வேண்டும் என்றார். தொகுதி பங்கீட்டை தாமதப்படுத்தினால், அது மகாராஷ்டிரா, பிஹார் போல இங்கும் தேர்தல் முடிவை பாதிக்கலாம் என எச்சரிக்கும் தொனியில் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர்கள் பேட்களில் ரப்பர் பயன்படுத்துவதால்தான் ஜெயிக்கிறார்கள் என இலங்கை கிரிக்கெட் வீரர் பனுகா ராஜபக்ச குற்றஞ்சாட்டியுள்ளார். இது எப்படி சாத்தியம் என நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை எனவும் ரப்பர் லேயர் இருக்கும் பேட்களை மற்றவர்களால் வாங்கமுடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த விஷயம் அனைத்து வீரர்களுக்கும் தெரியும் எனவும் பனுகா ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

2021 தேர்தலில் திமுக அளித்த வாக்குறுதிப்படி, கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை பெறப்பட்ட நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதன்மூலம், 11.7 லட்சம் பேர் பயனடைந்ததாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த தேர்தலிலும் நகைக் கடன் தள்ளுபடி அறிவிப்பு வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில், நகைக் கடன் உள்ளிட்ட தள்ளுபடி வாக்குறுதிகளை வெளியிட அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் இந்தியாவுக்கு விரிக்கப்பட்ட வலை என்று கார்கே விமர்சித்துள்ளார். ரஷ்ய எண்ணெயை நிறுத்த ஒப்புக்கொண்டதும், மரபணு மாற்றப்பட்ட தீவனங்கள் & பருப்பு வகைகளை இறக்குமதி செய்ய இசைவு தெரிவித்ததும் இந்திய விவசாயிகளுக்கு இழைக்கப்பட்ட அநீதி என்று குற்றம்சாட்டியுள்ளார். மேலும், ஒப்பந்தப்படி ஆடை ஏற்றுமதியில் இந்தியாவை விட வங்கதேசத்திற்கே அதிக ஆதாயம் என்றும் கார்கே தெரிவித்தார்.

EPS ஒரு தீயசக்தி என்று சொல்லி கட்சி ஆரம்பித்த TTV தற்போது அதிமுகவுடன் கைகோர்த்ததை அமமுக தொண்டர்கள் ஏற்கமாட்டர்கள் என மனிதநேய மக்கள் கட்சி தெரிவித்துள்ளது. முக்குலத்தோர் சமூகத்துக்கு EPS எதிரானவர் என TTV கட்டமைத்த பிம்பத்தால் ராமநாதபுரம், தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் அதிமுக சரிவை சந்தித்தது. இன்று அவர் சேர்ந்துவிட்டார் என்பதற்காக தொண்டர்களும் உடனே மனம் மாறிவிடுவார்களா என கேள்வியெழுப்பியுள்ளது.
Sorry, no posts matched your criteria.