news

News February 11, 2026

தலையில் இருப்பது பேன் அல்ல எமன்… உஷார்!

image

பொதுவாக தலையில் பேன் இருப்பது யாருக்குமே பெரிய பாதிப்பாக கருதப்படுவதில்லை. ஆனால், நீண்ட நாள்களாக பேன் தலையில் இருந்தால் சில சமயங்களில் அது <<19101511>>உயிருக்கே ஆபத்தாக முடிந்துவிடும். <<>>தலையில் ஊறும் பேன்கள் நம் ரத்தத்தை உறிஞ்சுவதால், இரும்புச்சத்து குறைபாடு ஏற்பட்டு இரத்த சோகை உண்டாகும். 6 ஆண்டுகளுக்கு முன்பு ஜார்ஜியாவை சேர்ந்த இளம்பெண் மரணத்தை அடுத்து இதனை சர்வதேச உலகம் உறுதி செய்தது குறிப்பிடத்தக்கது.

News February 11, 2026

ராசி பலன்கள் (11.02.2026)

image

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.

News February 11, 2026

தங்கம் விலை ₹17,000 குறைவு.. இவ்வளவு மலிவா!

image

இந்தியாவை விட ஹாங்காங்கில் தங்கம் விலை குறைவு. சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் விதமாக அந்நாட்டு அரசு, தங்கத்திற்கு வரி விலக்கு அளித்துள்ளது. பொதுவாகவே அங்கு இறக்குமதி வரி குறைவு என்பதால் தங்கத்தின் விலை சற்று குறைவாகவே இருக்கிறது. இன்றைய நிலவரப்படி, இந்தியாவில் 10 கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை ₹1,45,800 என்றால், ஹாங்காங்கில் ₹1,28,886 மட்டுமே. SHARE IT.

News February 11, 2026

தூங்குனா மட்டும் போதும்.. அசத்தல் வேலைவாய்ப்பு

image

14 நாள்கள் லீவு கிடைக்குமா? ஆம் என்றால் இந்த வேலை உங்களுக்குத்தான். கரீபியன் கடற்பகுதியிலுள்ள கேமன் தீவில், ‘Chief Relaxation Officer’ என்ற பணி உள்ளது. இந்த வேலையில் ஒருநாளைக்கு 8 மணிநேரம் தூங்க வேண்டும், கடற்கரையில் நேரம் செலவிட வேண்டும், அரிய உயிரினங்களை எக்ஸ்ப்ளோர் செய்யலாம். விமான டிக்கெட், உணவு, போக்குவரத்து என 14 நாள்களுக்கு எல்லாமே Free. அப்ளை பண்ண <>Click here<<>>. SHARE.

News February 10, 2026

துப்பாக்கிச் சூட்டை அடுத்து ரன்வீருக்கு மிரட்டல்!

image

ரன்வீர் சிங்கிற்கு கோடிக்கணக்கில் பணம் கேட்டு வாட்ஸ் அப்பில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இயக்குநர் <<19017975>>ரோஹித் ஷெட்டியின்<<>> வீட்டில் குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டினை அடுத்து நடந்த சம்பவம் பாலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக ரன்வீர் சிங் அளித்த புகாரின் பேரில் ரன்வீர் – தீபிகா படுகோனே நட்சத்திர தம்பதியர் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

News February 10, 2026

அமைச்சர் துரைமுருகன் அப்போலோவில் அனுமதி

image

அமைச்சர் துரைமுருகன் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ ஹாஸ்பிடலில் சற்றுமுன் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று இரவு வீட்டில் தவறி கீழே விழுந்து காயமடைந்துள்ளார். உடனே உறவினர்கள் அவரை மீட்டு, சிகிச்சைக்காக ஹாஸ்பிடலில் அனுமதித்துள்ளனர். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருவதாக கூறப்படுகிறது.

News February 10, 2026

படுத்த உடனே தூங்கணுமா? இதை செய்யுங்க!

image

தூக்கமின்மை பலருக்கும் பெரும் பிரச்னையாக உள்ளது. உங்களுக்கும் இருக்கிறதா? இதோ இந்த 3 வழிமுறைகளை பின்பற்றி சீக்கிரம் தூங்கலாம். * படுக்கைக்கு முன் செல்போன், டிவி திரைகளை தவிர்ப்பது அவசியம். *புத்தகம் படித்தல், தியானம் மனதை அமைதிப்படுத்தி தூக்கத்தை எளிதாக்கும். *தினமும் ஒரே நேரத்தில் தூங்குதல். இந்த பழக்கங்களைப் பின்பற்றினால் ஆழ்ந்த, நிம்மதியான உறக்கம் கிடைக்கும்.

News February 10, 2026

மகன் திருமணம்.. மோடியை சந்தித்த சச்சின்

image

சச்சின் தனது மகனின் திருமணத்திற்கு PM மோடியை குடும்பத்தினருடன் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளார். அர்ஜுன் – சானியா திருமணம் மார்ச் 5-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக PM-ஐ அழைப்பதில் பெருமைப்படுகிறேன் என்று சந்திப்பு போட்டோக்களை X தளத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், திருமண ஜோடியை ஆசீர்வதித்து, மதிப்புமிக்க ஆலோசனைகளை வழங்கியதற்கு PM-க்கு நன்றி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

News February 10, 2026

நடிகை பத்மா காலமானார்.. உருக்கமான PHOTOS

image

சின்னத்திரை ரசிகர்களை தனது வில்லத்தனமான நடிப்பால் மிரட்டிய <<19060131>>நடிகை பத்மா(48)<<>>, இந்த பூவுலகில் இருந்து விடைபெற்றுவிட்டார். இறுதி காலத்தில் புற்றுநோய்க்கு எதிராக போராடிய அவர், சிகிச்சைக்கு பணமின்றி வறுமையில் வாடியது பெரும் சோகம். பத்மாவின் போட்டோக்களை சோஷியல் மீடியாவில் பதிவிட்டு, ரசிகர்கள் உருக்கமாக அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது போட்டோக்களை மேலே கொடுத்துள்ளோம். கடைசி போட்டோ உங்களை அழ வைக்கலாம்!

News February 10, 2026

கடும் வேதனையில் காங். தொண்டர்கள்: சோடங்கர்

image

CM ஸ்டாலினை சந்தித்து இன்றுடன் கிட்டத்தட்ட 70 நாள்கள் ஆகிவிட்டன. ஆனால் இன்னும் பேச்சுவார்த்தை தொடங்காததற்கு காரணம் என்னவென்று தெரியவில்லை என கிரிஷ் சோடங்கர் கூறியுள்ளார். காங்., எந்தெந்த இடங்களில் போட்டியிட விரும்புகிறது என்பதை தெளிவுபடுத்த தயாராக இருப்பதாகவும், துரதிர்ஷ்டவசமாக இன்னும் பேச்சுவார்த்தை தொடங்காததால் தொண்டர்களும், தலைவர்களும் கடும் வேதனையில் உள்ளதாகவும் கூறியுள்ளார்.

error: Content is protected !!