news

News April 2, 2025

பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியல்: இந்தியா 3ம் இடம்

image

பெரும் கோடீஸ்வரர்கள் அதிகம் வாழும் நாடுகள் பட்டியலில் இந்தியா 3ஆவது இடத்தில் உள்ளது. போர்ப்ஸின் பட்டியலில் 902 பெரும் கோடீஸ்வரர்களுடன் USA முதலிடத்தில் உள்ளது. 902 பேரின் மொத்த சொத்து மதிப்பு ரூ.581 லட்சம் கோடி. இதையடுத்து, சீனா 450 பேருடன் 2ஆவது இடத்திலும், இந்தியா 205 பேருடன் 3ஆவது இடத்திலும் உள்ளன. 205 இந்திய பெரும் கோடீஸ்வரர்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ.80.41 லட்சம் கோடி ஆகும்.

News April 2, 2025

லாலு ஹாஸ்பிடலில் அனுமதி

image

பிஹார் முன்னாள் CM லாலு பிரசாத் (76) ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டெல்லி செல்வதற்காக பாட்னா விமான நிலையத்திற்கு அவர் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது உடல்நிலை பாதிக்கப்படவே, அவர் உடனடியாக தனியார் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது. விரைவில் டெல்லி எய்ம்ஸ் ஹாஸ்பிடலுக்கு அழைத்து செல்லப்படவுள்ளார்.

News April 2, 2025

இலங்கை வசம் கச்சத்தீவு சென்றது எப்படி? (1/2)

image

ராமேஸ்வரத்தில் இருந்து 25 கி.மீ தொலைவில் உள்ள கச்சத்தீவின் மொத்த பரப்பளவு 285 ஏக்கர். 1974 ஜூன் 21-ல் கச்சத்தீவை அப்போதைய PM இந்திரா காந்தி, தமிழ்நாட்டின் கருத்தைக் கேட்காமல் இலங்கைக்கு ஒப்பந்தம் செய்து கொடுத்தார். சீனா, பாகிஸ்தான் அச்சுறுத்தல் இருந்ததால், இலங்கையுடன் நட்பு பாராட்ட அவர் இந்த நடவடிக்கையை எடுத்ததாக சொல்லப்படுகிறது. இதனால், நீண்ட காலம் இந்தியாவுடன் இருந்த கச்சத்தீவு இலங்கை வசமானது.

News April 2, 2025

இலங்கை வசம் கச்சத்தீவு சென்றது எப்படி? (2/2)

image

கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்ததை திரும்பப் பெற வலியுறுத்தி அப்போதைய தமிழ்நாடு முதல்வர் கருணாநிதி, இந்திரா காந்திக்கு கடிதம் எழுதியதாகவும், திமுக சார்பில் கண்டன கூட்டங்கள் நடைபெற்றதாகவும் வரலாற்றில் குறிப்பிடப்படுகிறது. ஆனால், கச்சத்தீவு ஒப்பந்தம் தொடர்பாக கருணாநிதியிடம் முன்கூட்டியே ஆலோசனை நடத்தியதாகவும், அவர் மறைமுக ஆதரவு அளித்ததாகவும் மத்திய அரசு அண்மையில் கூறியது. எது உண்மையோ?

News April 2, 2025

பாஜகவுடன் கூட்டணி வேண்டும்: சைதை துரைசாமி

image

அதிமுக – பாஜக கூட்டணியமைத்து திமுகவை வீழ்த்த வேண்டும் என்று சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும், பல தோழமைக் கட்சிகளை இணைத்துக் கொண்டு வலுவான கூட்டணியை கட்டமைக்க வேண்டும் என்றும் அதிமுக ஒன்றுபட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த அவர், திடீரென அறிக்கை வெளியிட்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

News April 2, 2025

BSNL நிறுவனத்திற்கு ரூ.1,757 கோடி இழப்பு

image

ஜியோவிடம் இருந்து 10 ஆண்டுகளாக உட்கட்டமைப்பு பகிர்வுக்கான தொகையை BSNL நிறுவனம் வசூலிக்காததால் மத்திய அரசுக்கு ரூ.1,757 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. ஜியோ உடனான மாஸ்டர் சர்வீஸ் ஒப்பந்தத்தை BSNL செயல்படுத்தவில்லை என சிஏஜி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. BSNL-ன் உட்கட்டமைப்பில் பயன்படுத்தப்படும் கூடுதல் தொழில்நுட்பத்திற்கு மே 2014 – மார்ச் 2024 வரை கட்டணம் விதிக்கவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

News April 2, 2025

’வால் கில்மர்’ மரணத்திற்கு காரணம் இதுதான்

image

<<15965771>>’டாப் கன்’ திரைப்பட நடிகர் ‘வால் கில்மர்’ (65) இன்று காலை உயிரிழந்தார்<<>>. அவர், 2014ஆம் ஆண்டு முதல் தொண்டை புற்றுநோயால் அவதியுற்று வந்ததாக அவரது மகள் மெர்சைடிஸ் கில்மர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், சமீபத்தில் திடீரென நிமோனியாவால் மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும் இதற்கு அளித்த சிகிச்சை பலனளிக்காததால், அவர் உயிரிழந்ததாகவும் மகள் கூறியுள்ளார்.

News April 2, 2025

Health Tips: விந்தணுவை அதிகரிக்க என்ன செய்யலாம்?

image

நவீன உலகில் ஆண்கள் சந்திக்கும் பிரச்னைகளில் விந்தணுக்கள் குறைபாடும் ஒன்று. அதனை தவிர்க்க, புகை, போதைப் பழக்கம், வெப்பச் சூழலில் வேலை பார்ப்பது உள்ளிட்டவற்றை தவிர்க்க வேண்டும். சிறுதானிய, புரத உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். விதைப்பை குளிர்ச்சியை உணரும் உறுப்பு என்பதால், இறுக்கமான உள்ளாடை, ஜீன்ஸ் உள்ளிட்ட ஆடைகள் அணியக் கூடாது. SHARE IT.

News April 2, 2025

அதிமுக கூட்டணி வேண்டாம் வேண்டாம்..

image

அதிமுக – பாஜக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், அதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கூட்டணி அமைய வேண்டுமானால், அண்ணாமலையை தலைவர் பதவியில் இருந்து மாற்ற வேண்டும் என்று அதிமுக நிபந்தனை விதிப்பதாகப் பேசப்படுகிறது. இதனையடுத்து, அண்ணாமலை ஆதரவாளர்கள், அதிமுக கூட்டணி வேண்டாம் என்று போஸ்டர் ஒட்டி வருகின்றனர்.

News April 2, 2025

இந்திய பங்குச்சந்தைகளில் இன்று ஏற்றம்

image

டிரம்பின் கூடுதல் வரி விதிப்பு எச்சரிக்கை எதிரொலியாக கடந்த 2 நாட்களாக இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் சரிவுடன் காணப்பட்டன. இந்நிலையில், இன்று வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 592 புள்ளிகள் உயர்வடைந்து 76,617ஆக வர்த்தகமானது. தேசிய பங்குச்சந்தையில் நிப்டி 166 புள்ளிகள் அதிகரித்து 23,332ஆக நிறைவடைந்தது. 2,755 பங்குகள் உயர்வுடனும், 1,048 பங்குகள் சரிவுடனும் காணப்பட்டன.

error: Content is protected !!