news

News April 2, 2025

ஏப்ரல் 8இல் விலை உயர்வு.. தேதி குறித்த மாருதி சுசூகி

image

கார்களின் விலையை வரும் 8ஆம் தேதி உயர்த்த இருப்பதாக மாருதி சுசூகி அறிவித்துள்ளது. உற்பத்தி செலவு அதிகரித்திருப்பதை சுட்டிக்காட்டி பிப்ரவரியில் விலையை மாருதி சுசூகி உயர்த்தியது. இதே காரணத்திற்காக பிராங்ஸ் மாடல் கார் விலை ரூ.2,500, டிசைர் எஸ் விலை ரூ.3,000, XL6, எர்டிகா விலை ரூ. 12,500, வேகன் ஆர் விலை ரூ.14,000, இகோ விலை ரூ.22,500, கிரான்ட் விடாரா விலை ரூ.62,000 என உயர்த்த இருப்பதாக கூறியுள்ளது.

News April 2, 2025

அதிமுக – பாஜக மீண்டும் மீண்டும் சந்திப்பு

image

பாஜக – அதிமுக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், இரு கட்சியின் தலைவர்களும் அவ்வப்போது சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இன்று காலை டெல்லியில் அமித் ஷாவை முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் நேரில் சந்தித்தார். அதேபோல, நிர்மலா சீதாராமனை தம்பிதுரை சந்தித்து பேசினார். கடந்த வாரம் EPS அமித் ஷாவை நேரில் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

News April 2, 2025

எந்த நேரம், எதற்கு நல்லது?

image

உள்ளுறுப்புகளின் டீடாக்ஸ் கால அட்டவணை: 11pm-1am: பித்தப்பை நச்சுகளை நீக்கும் *1am-3am: இந்நேரம் உறக்கத்தில் இருந்தால், கல்லீரல் உடலின் அனைத்து நச்சுகளையும் நீக்கும் *3am-5am: நுரையீரல் தனது நச்சுகளை நீக்கும் நேரம். *5am-7am:பெருங்குடல் நச்சுநீக்கும் நேரம் *7am-9am: சிறுகுடல் சத்துகளை உறிஞ்சும் நேரம். காலை உணவுக்கு ஏற்றது *9 pm-11pm: நோயெதிர்ப்பு மண்டலம் செயல்படும் நேரம். ரிலாக்ஸாக இருங்கள்.

News April 2, 2025

ராமரை பாடிக் கொண்டே உயிரை விட்ட பிரபலம்

image

தமிழில் கம்பராமாயணம் போல், ஹிந்தியில் ராமரின் வரலாற்றை சொல்வது துளிசிதாசரின் ராம சரித மானஸ். இதுபற்றி சொற்பொழிவு ஆற்றுவதில் பிரபலமானவர் ஒடிசாவை சேர்ந்த பேரா.கோபால் பிரசாத் பேஜ். சப்ரங் என்ற இடத்தில் கோயில் திருவிழாவில் 3 நாள் சொற்பொழிவு நிகழ்த்த சென்ற கோபால் பிரசாத், 2-ம் நாளில் மேடையில் ராமரின் புகழைப் பேசிக் கொண்டிருந்தபோதே, சுருண்டு விழுந்து இறந்தது பக்தர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

News April 2, 2025

கச்சத்தீவு விவகாரம்: ஸ்டாலினுக்கு பாஜக கேள்வி

image

கச்சத்தீவை இலங்கையிடம் ஒப்படைத்தது யார் என நாட்டு மக்களிடம் ஸ்டாலின் எடுத்துரைக்க வேண்டுமென பாஜக வலியுறுத்தியுள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய பாஜக செய்தி தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனாவாலா, கச்சத்தீவு ஒப்படைக்கப்பட்டபோது மத்தியிலும், தமிழகத்திலும் எந்த கட்சி ஆட்சியில் இருந்தது என ஸ்டாலின் எடுத்துரைக்க வேண்டும் என்றார். கச்சத்தீவை ஒப்படைத்த காங்கிரஸூடன் திமுக ஏன் கூட்டணியில் உள்ளது எனவும் வினவினார்.

News April 2, 2025

என்னடா நடக்குது இங்க!

image

நடப்பு ஐபிஎல் தொடர் விசித்திரமாக நடைபெற்று வருகிறது. தற்போதைய புள்ளிப்பட்டியலின்படி, முதல் 4 இடங்களில் இருக்கும் அணிகள் மொத்தமாக ஒரே ஒரு IPL கோப்பையை (GT) மட்டுமே வென்றிருக்கிறது. ஆனால், கடைசி 6 இடங்களில் இருக்கும் அணிகள் மொத்தமாக 15 கோப்பைகளை வென்றிருக்கின்றன. அதாவது, சூப்பர்ஸ்டார் அணிகள் அனைத்தும் இந்தமுறை வீழ்ச்சியை கண்டுள்ளன.

News April 2, 2025

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

image

சற்றுமுன் ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் பதற்றம் நிலவுகிறது. க்யூஷு தீவில் 6.2 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட சேத விவரங்கள் ஏதும் வெளியாகவில்லை. நான்கு தினங்களுக்கு முன் மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 3000 பேர் உயிரிழந்தனர். அந்த சோகத்தில் இருந்து உலகம் இன்னும் மீள்வதற்கு முன் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

News April 2, 2025

BREAKING: குஜராத் அணிக்கு 170 ரன்கள் இலக்கு

image

ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு 170 ரன்களை வெற்றி இலக்காக ஆர்சிபி நிர்ணயித்துள்ளது. பெங்களூரில் நடக்கும் இப்போட்டியில் முதலில் ஆர்சிபி பேட்டிங் செய்தது. நட்சத்திர வீரர் கோலி 7 ரன்னில் ஆட்டமிழந்த போதிலும், மற்ற வீரர்கள் அதிரடி காட்டினர். இதனால் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு ஆர்சிபி அணி 169 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக லிவிங் ஸ்டோன் 40 பந்துகளில் 54 ரன்களை விளாசினார்.

News April 2, 2025

உடம்பு சொல்றத கேளுங்க…

image

தன்னைத் தானே பழுதுநீக்கி சரிசெய்து கொள்ளும் அற்புதத் திறன் கொண்டது நமது உடல். உள்ளுறுப்புகள் ஒவ்வொன்றும், <<15972009>>குறிப்பிட்ட நேரத்தில்<<>> தன்னை தானே சரிசெய்து கொள்கின்றன. அதை புரிந்து நடந்தால் ஆரோக்கியமாக வாழலாம். இந்த இயற்கை சுழற்சியில் உடலின் நச்சுகள் நீக்கப்படுகின்றன, ஜீரணம் மேம்படுகிறது, நோய் எதிர்ப்பு சக்தி வலிமை பெறுகிறது. ஆகவே உங்கள் தினசரி பழக்கங்களை இந்த நேரங்களுக்கு ஏற்ப அமைத்துக் கொள்ளுங்கள்.

News April 2, 2025

வெற்றி போவது யார்? ஆர்சிபியா, குஜராத்தா?

image

ஐபிஎல் போட்டியில் இதுவரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி), குஜராத் டைடன்ஸ் அணிகள் 5 முறை மோதியுள்ளன. இதில் ஆர்சிபி அதிக முறையாக 3 முறை வென்றுள்ளது. குஜராத் டைடன்ஸ் 2 முறை வெற்றி பெற்றுள்ளது. இன்றைய போட்டியில் குஜராத் வென்றால் 3-3 என சமன் பெறும். ஆர்சிபி வெற்றி பெற்றால் 4-2 என குஜராத் அணி மீது ஆதிக்கம் செலுத்தும். இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறும்? கீழே கமெண்ட் பண்ணுங்க.

error: Content is protected !!