News April 2, 2025

எந்த நேரம், எதற்கு நல்லது?

image

உள்ளுறுப்புகளின் டீடாக்ஸ் கால அட்டவணை: 11pm-1am: பித்தப்பை நச்சுகளை நீக்கும் *1am-3am: இந்நேரம் உறக்கத்தில் இருந்தால், கல்லீரல் உடலின் அனைத்து நச்சுகளையும் நீக்கும் *3am-5am: நுரையீரல் தனது நச்சுகளை நீக்கும் நேரம். *5am-7am:பெருங்குடல் நச்சுநீக்கும் நேரம் *7am-9am: சிறுகுடல் சத்துகளை உறிஞ்சும் நேரம். காலை உணவுக்கு ஏற்றது *9 pm-11pm: நோயெதிர்ப்பு மண்டலம் செயல்படும் நேரம். ரிலாக்ஸாக இருங்கள்.

Similar News

News July 11, 2025

மத்திய அரசுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்

image

கீழடி அகழாய்வில் குறிப்பிடத்தக்க வகையில் எதுவும் கிடைக்கவில்லை என கூறிய PS ஸ்ரீராமனின் கருத்துகள் கண்டனத்திற்கு உள்ளானது. இதனிடையே, இவரிடம் 3-ம் கட்ட அகழாய்வு குறித்து அறிக்கை அளிக்க மத்திய அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், இதன் மூலம் மத்திய அரசின் உள்நோக்கம் வெட்ட வெளிச்சமாகியுள்ளதாக தங்கம் தென்னரசு விமர்சித்துள்ளார். எனவே தனது நிலைப்பாட்டை மத்திய அரசு மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

News July 11, 2025

7.2 லட்சம் பேர்களுக்கு வீடு தேடி ரேசன் பொருள்கள் விநியோகம்

image

மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளின் வீடு தேடி சென்று ரேசன் பொருள்கள் வழங்கும் திட்டம் புதிதாக அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஜூலையில் மட்டும் இதுவரை 7.2 லட்சம் பேரின் வீடுகளுக்கு வாகனங்களில் நேரில் சென்று ரேசன் பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. வாகனங்களில் ஊழியர்கள் நேரில் சென்றபோது, 2.25 லட்சம் ரேசன் அட்டைதாரர்களின் வீடுகள் பூட்டப்பட்டு இருந்தன. இதனால் அவர்களுக்கு மட்டும் வழங்கப்படவில்லை.

News July 11, 2025

பேரிடர் நிவாரணமாக ₹1,066.80 கோடி வழங்க ஒப்புதல்

image

வெள்ளம் & நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட 6 மாநிலங்களுக்கு பேரிடர் நிதியின் கீழ் ₹1,066.80 கோடி வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, அசாம் – ₹375.60 கோடி, மணிப்​பூர் – ₹29.20 கோடி, மேகால​யா​ – ₹30.40 கோடி, மிசோர​ம் – ₹22.80 கோடி, கேரளா​ – ₹153.20 கோடி & உத்​த​ராகண்​ட் – ₹455.60 கோடி மத்​திய அரசின் பங்​காக வழங்​கப்பட இருப்பதாக மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!