news

News April 3, 2025

கோவா அணிக்கு மாறியது ஏன்? ஜெய்ஸ்வால் விளக்கம்

image

தன்னை தேடி வந்த கேப்டன் பதவியை எடுத்துக் கொண்டதாக, ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். ஆனால், இந்த முடிவை எடுப்பது சவாலாக இருந்ததாகவும், தன்னுடைய இன்றைய நிலைக்கு மும்பை அணி தான் காரணம் எனவும், அதற்காக வாழ்நாள் முழுவதும் அந்த அணிக்கு கடைமைபட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். உள்ளூர் போட்டிகளில் மும்பை அணிக்காக விளையாடி வந்த ஜெய்ஸ்வால், தற்போது கோவா அணிக்கு மாறியுள்ளார்.

News April 3, 2025

சாவை தானே தேடிச் சென்றவர் கைது

image

அந்தமான் நிகோபார் தீவுகளில் வசிக்கும் சென்டினல் பழங்குடிகளைச் சந்திக்க சென்ற USA-வின் மைகாலியோவை போலீசார் கைது செய்துள்ளனர். தடை செய்யப்பட்ட வடக்கு சென்டினல் தீவுக்குச் சென்று, பழங்குடிகளை பார்க்க அவர் முற்பட்டிருக்கிறார். இருப்பினும், பழங்குடிகள் அவரை பார்க்காததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியிருக்கிறார். வெளியாட்கள் வருவதை பார்த்தவுடன் கொல்வதுதான் அப்பழங்குடிகளின் வழக்கம்.

News April 3, 2025

இன்றே கடைசி: CISFஇல் 1,161 காலியிடங்கள்

image

மத்திய தொழில் பாதுகாப்புப் படையில் (CISF) உள்ள 1,161 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும். கான்ஸ்டபிள் நிலையிலான இந்த பணியிடங்களுக்கு கல்வித் தகுதியாக 10ஆம் வகுப்பு தேர்ச்சி, வயது வரம்பாக 18-23 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. OBC, EWS பிரிவினர் விண்ணப்பக்கட்டணமாக ₹100 செலுத்த வேண்டும். பெண்கள், SC/ST பிரிவினருக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. <>இங்கே<<>> க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.

News April 3, 2025

அடுத்த படத்தை லாக் செய்த ஹிப் ஹாப் ஆதி

image

ஹிப் ஹாப் தமிழா ஆதி அடுத்ததாக ‘ஜோ’ பட இயக்குநர் ஹரிஹரன் ராம் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை ப்ரமோத் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. வரும் ஜூனில் படப்பிடிப்பு தொடங்க உள்ள நிலையில், தற்போது முதற்கட்ட பணிகள் சூடுபிடித்துள்ளன. ஆதிக்கு ஜோடியாக நடிக்க முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஆதி தற்போது ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்திற்கான இசைப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

News April 3, 2025

ஆல்டைம் ரெக்கார்டை சமன் செய்த Bhuvi

image

RCB பவுலர் புவனேஷ்வர் குமார், ஐபிஎல்லின் ஆல்டைம் ரெக்கார்டை சமன் செய்துள்ளார். ஐபிஎல்லில் அதிக விக்கெட்களை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். மொத்தம் 183 விக்கெட்களை வீழ்த்தி, பிராவோவின் சாதனையை அவர் சமன் செய்துள்ளார். அதேபோல், பவர்பிளேயில் அதிக விக்கெட்களை வீழ்த்திய வீரராகவும் அவர் உருவெடுத்துள்ளார். பவர்பிளேயில் மட்டும் அவர் 73 விக்கெட்களை எடுத்துள்ளார்.

News April 3, 2025

ஆளை விடுங்கடா சாமி: சாம் கதறல்

image

ChatGPT-யின் Ghibli ஸ்டைல் போட்டோக்கள் தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளது. கோடிக்கணக்கானோர் தங்களது அனிமேட்டட் வெர்ஷன் போட்டோக்களை ChatGPT-யில் உருவாக்கி வெளியிட்டு வருகின்றனர். இப்படி பல கோடி பேர் ஒரே நேரத்தில் உருவாக்குவதால் தனது டீமின் தூக்கம் போச்சு என ChatGPT-யின் ஓனர் சாம் ஆல்ட்மேன் கதறியுள்ளார். கொஞ்ச நேரம் சும்மா இருங்களேன் ப்ளீஸ் எனவும் அவர் தனது X பக்கத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News April 3, 2025

சார்லி சாப்ளின் பொன்மொழிகள்

image

*இந்தப் பொல்லாத உலகில் உங்கள் பிரச்சனைகள் கூட நிரந்தரம் இல்லை. *கண்ணாடியே என் சிறந்த நண்பன், ஏனெனில் நான் அழும்போது அது சிரிப்பதில்லை. *இது ஒரு இரக்கமற்ற உலகம், அதை சமாளிப்பதற்கு ஒருவர் இரக்கமற்றவராக இருக்க வேண்டும். *போலிக்கு தான் பரிசும் பாராட்டும். உண்மைக்கு ஆறுதல் பரிசு மட்டுமே. *பணம் நமக்கு எல்லாவற்றையும் கொடுக்கலாம். ஆனால், வறுமை நம்மிடம் இருந்து பறித்த சிலவற்றை திருப்பித் தர முடியாது.

News April 3, 2025

முஸ்லிம்களுக்கு எதிரான ஆயுதம்: ராகுல்

image

வக்ஃப் திருத்த மசோதா என்பது, முஸ்லிம்களை ஓரங்கட்டுவதையும், அவர்களது தனிப்பட்ட சட்டங்களையும், சொத்துரிமைகளை அபகரிப்பதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு ஆயுதம் என ராகுல் காந்தி விமர்சித்துள்ளது. தற்போது முஸ்லிம்களை குறிவைத்துள்ள RSS, பாஜக அடுத்து மற்ற சமூகங்களை குறிவைக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், மதசுதந்திரத்தை கேள்விக்குறியாக்கும் இந்த மசோதாவை காங். கடுமையாக எதிர்ப்பதாகவும் கூறியுள்ளார்.

News April 3, 2025

BREAKING: வக்ஃபு திருத்த மசோதா நிறைவேறியது

image

12 மணி நேரம் காரசார விவாதத்திற்கு பிறகு, மக்களவையில் வக்ஃபு திருத்த மசோதா நள்ளிரவில் நிறைவேறியது. மசோதாவிற்கு ஆதரவாக 288 எம்பிக்களும், எதிராக 232 எம்பிக்களும் வாக்களித்துள்ளனர். இதையடுத்து மாநிலங்களவையில் மசோதா விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்படும். அங்கு நிறைவேறும் பட்சத்தில் குடியரசுத்தலைவருக்கு அனுப்பப்பட்டு, அவர் கையெழுத்திட்டால், சட்டம் நடைமுறைக்கு வரும்.

News April 3, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: இல்லறவியல் ▶அதிகாரம்: ஈகை ▶குறள் எண்: 225 ▶குறள்: ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின். ▶பொருள்: பசியைப் பொறுத்துக் கொள்ளும் நோன்பைக் கடைப்பிடிப்பதைவிடப் பசித்திருக்கும் ஒருவருக்கு உணவு அளிப்பதே சிறந்ததாகும்.

error: Content is protected !!