News April 3, 2025
சார்லி சாப்ளின் பொன்மொழிகள்

*இந்தப் பொல்லாத உலகில் உங்கள் பிரச்சனைகள் கூட நிரந்தரம் இல்லை. *கண்ணாடியே என் சிறந்த நண்பன், ஏனெனில் நான் அழும்போது அது சிரிப்பதில்லை. *இது ஒரு இரக்கமற்ற உலகம், அதை சமாளிப்பதற்கு ஒருவர் இரக்கமற்றவராக இருக்க வேண்டும். *போலிக்கு தான் பரிசும் பாராட்டும். உண்மைக்கு ஆறுதல் பரிசு மட்டுமே. *பணம் நமக்கு எல்லாவற்றையும் கொடுக்கலாம். ஆனால், வறுமை நம்மிடம் இருந்து பறித்த சிலவற்றை திருப்பித் தர முடியாது.
Similar News
News April 14, 2026
தவெக தொண்டர்களால் வாகன ஓட்டிகள் அவதி

திருப்பூர் பிரசாரத்திற்காக கோவையில் இருந்து NH வழியாக விஜய் பயணித்து கொண்டிருந்தார். அப்போது ரோட்டின் இடதுபுறம் தவெக தொண்டர்கள் கூட்டம் கூட்டமாக வண்டிகளில் விஜய்யின் பிரசார வாகனத்தை பின்தொடர்ந்து சென்றனர். இதனால் கார், பஸ், லாரி உள்ளிட்ட வாகன ஓட்டுநர்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். தவெகவினரின் விதிமீறலால் விபத்து ஏற்படும் சூழலும் உருவானது.
News April 14, 2026
ட்ரோன்களை வேட்டையாடும் அர்ஜூன் PHOTOS

இந்திய ராணுவம் சுவாரஸ்யமான மற்றும் புதுமையான ட்ரோன் எதிர்ப்பு உத்தியை அறிமுகம் செய்துள்ளது. ரேடார் இல்லாத மற்றும் உயரமான மலைப்பகுதிகளில் ட்ரோன்களை அழிக்க அர்ஜூன் என்ற கழுகை பயிற்சியளித்து தயார்படுத்தியுள்ளது. அதேநேரம் கண்காணிப்புக்கு உதவும் வகையில் இதன் தலையில் சிறிய கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கழுகு, ‘Spy Bird’ அல்லது ‘Anti-Drone Eagle’ என்று அழைக்கப்படுகிறது.
News April 14, 2026
IPL: சென்னை பேட்டிங்

CSK-வுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற KKR பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. DC-க்கு எதிராக 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற CSK, இப்போட்டியிலும் ஆதிக்கத்தை தொடரும் முனைப்பில் உள்ளது. மறுபுறம், ஒரு வெற்றியை கூட பெறமுடியாமல் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் KKR உள்ளது. காயத்தில் இருந்து மீண்ட வருண் சக்கரவர்த்தி அணிக்கு திரும்பியுள்ளார். CSK பிளேயிங் 11-ல் மாற்றமில்லை.


