news

News April 3, 2025

இன்று SRH vs KKR: வெற்றி யாருக்கு?

image

ஐபிஎல்லின் 15ஆவது லீக் போட்டியில் இன்று SRH vs KKR மோதுகின்றன. கொல்கத்தாவில் மாலை 7.30 மணிக்கு போட்டி தொடங்க உள்ளது. தொடர்ந்து 2 தோல்விகளை சந்தித்துள்ள ஹைதராபாத் ஆரஞ்சு படை, இன்றைய போட்டியில் வெல்ல போராடும். அதேபோல் புள்ளிப்பட்டியலில் கடைசியில் உள்ள கொல்கத்தா அணி, இந்த போட்டியில் வென்று, தன் மீதான களங்கத்தைத் துடைக்க முற்படும் என்பதால் போட்டியில் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமிருக்காது.

News April 3, 2025

‘குட் பேட் அக்லி’ புக்கிங் ஓபனிங் எப்போது?

image

‘குட் பேட் அக்லி’ வரும் 10ஆம் தேதி ரிலீசாக உள்ள நிலையில், நாளை இரவு 8.02 மணிக்கு டிக்கெட் புக்கிங் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ‘விடாமுயற்சி’ பெரிதாக ரசிகர்களைக் கவராத நிலையில், GBU-க்காக அஜித் ரசிகர்கள் மரண வெயிட்டிங்கில் உள்ளனர். அதற்கேற்றார் போல் டீசரும் கொல மாஸாக இருந்தது. 3 கெட்டப்பில் அஜித் நடிப்பதால், இப்படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

News April 3, 2025

மாடர்ன் சினிமாவில் மாற்றம் ஏற்படுத்திய படங்கள்

image

ஹீரோ நல்லவன் என்ற நிலையை மாற்றி, தற்போதை எதார்த்த வாழ்வை பிரதிபலிக்கிறது ‘சூது கவ்வும்’. புனித காதலுக்கு மாற்றாக, காதல் தோல்விக்கு பிறகு போண்டா சாப்பிடும் ‘அட்டக்கத்தி’, இளைஞர்களின் வாழ்வியலை எதார்த்தமாக சித்தரித்துள்ளது. பேய் என்றால் சாமி, மந்திரம் என்பதை மாற்றி, பேய் பயத்தைக் காட்டி காசு பார்த்த ‘பீட்சா’ மற்றும் ‘பண்ணையாரும் பத்மினியும்’ நவீன சினிமாவில் மாற்றம் ஏற்படுத்திய படங்களாகும்.

News April 3, 2025

இன்று தாய்லாந்து செல்லும் பிரதமர்

image

பிம்ஸ்டெக் கூட்டமைப்பின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள, பிரதமர் மோடி இன்று தாய்லாந்து பயணம் செய்ய உள்ளார். நாளை நடைபெறும் உச்சி மாநாட்டில் நேபாள பிரதமர் சர்மா ஒலி, வங்கதேச இடைக்கால அரசு தலைவர் முகமது யூனுஸ் ஆகியோரும் பங்கேற்கின்றனர். கடல்சார் ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை பிரதமர் மோடி மேற்பார்வையிடுகிறார். பின், அங்குள்ள வாட்போ கோவிலுக்கு அந்நாட்டு பிரதமருடன் இணைந்து செல்கிறார்.

News April 3, 2025

மகளுடன் ரெடின் கிங்ஸ்லி

image

ரெடின் கிங்ஸ்லி- சங்கீதா தம்பதிக்கு நேற்று பெண் குழந்தை பிறந்தது. மகளுடன் இருக்கும் புகைப்படத்தை கிங்ஸ்லி தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தாயும் சேயும் நலமாக உள்ள நிலையில், பல பிரபலங்களும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு கடந்த 2023 டிசம்பரில் திருமணம் நடந்துள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு இவர்களின் வளைகாப்பு நிகழ்ச்சியும் பிரமாண்டமாக நடைபெற்றது.

News April 3, 2025

எம்புரான் படத்தை தடை செய்ய வேண்டும்: வைகோ

image

முல்லைப் பெரியார் அணை குறித்து தவறான தகவல்களைப் பரப்பும் ‘எம்புரான்’ படத்தை தடை செய்ய வைகோ வலியுறுத்தியுள்ளார். அணை அருகில் வைக்கப்பட்டிருக்கும் வெடிகுண்டு எப்போது வேண்டுமானாலும் வெடித்து கேரளா நீரில் மூழ்கலாம் என கேரள மக்களிடையே பீதியை ஏற்படுத்தும் வகையில் வசனங்களை அமைத்துள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். முன்னதாக, தவாக தலைவர் வேல்முருகனும் இப்படத்தை தடை செய்ய கோரிக்கை விடுத்திருந்தார்.

News April 3, 2025

ALERT: பாதங்களில் இந்த அறிகுறிகள் தெரிகிறதா?

image

கால்களை இழுத்து (அ) அகலமான அடிகளை எடுத்து வைத்து நடந்தால், அது நரம்பு சேதத்தை குறிக்கும் என டாக்டர்கள் கூறுகின்றனர். மேலும், இது மூளை, முதுகுத் தண்டு, தசை பிரச்னைகளுடன் தொடர்பிருக்கலாம். தொடர்ந்து பாதங்கள் வீங்கினால் அது ரத்து ஓட்ட, இதய, சிறுநீரக பிரச்னைகளை குறிக்கும். பாதங்களில் எரியும் உணர்வு ஏற்பட்டால் அது நீரிழிவு நரம்பியல் நோயின் அறிகுறியாகும். ஆறாத புண்கள் நீரிழிவு நோயின் எச்சரிக்கையாகும்.

News April 3, 2025

மின் வாரியம் சார்பில் சிறப்பு முகாம்

image

தமிழகம் முழுவதும் வரும் 5ஆம் தேதி சிறப்பு முகாம் நடத்தப்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது. சனிக்கிழமையான அன்று, காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை செயற்பொறியாளர் அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறும். மின் கட்டணம், மின் மீட்டர்கள், குறைந்த மின்னழுத்தம், சேதமடைந்த மின் கம்பங்கள் குறித்து புகார் அளிக்கலாம், அல்லது சந்தேகங்களை கேட்டு தீர்த்துக் கொள்ளலாம்.

News April 3, 2025

மே மாதம் வரலாறு படைக்க போகும் இந்தியர்

image

இந்தியாவின் சுபன்ஷு சுக்லா, வரும் மே மாதம் நாசா உதவியின் மூலம் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு (ISS) பயணிக்க உள்ளார். தனியாரின் Axiom Mission 4 திட்டத்தின் ஒரு பகுதியாக, 4 வீரர்களுடன் அவர் பயணிக்க உள்ளார். இதன்மூலம், ISS செல்லும் முதல் இந்தியர் என்ற பெயரை அவர் பெற உள்ளார். அதேபோல், விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியாவின் கனவுத் திட்டமான ககன்யான் திட்டத்திலும் சுக்லா இடம்பெற்றுள்ளார்.

News April 3, 2025

கோவா அணிக்கு மாறியது ஏன்? ஜெய்ஸ்வால் விளக்கம்

image

தன்னை தேடி வந்த கேப்டன் பதவியை எடுத்துக் கொண்டதாக, ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். ஆனால், இந்த முடிவை எடுப்பது சவாலாக இருந்ததாகவும், தன்னுடைய இன்றைய நிலைக்கு மும்பை அணி தான் காரணம் எனவும், அதற்காக வாழ்நாள் முழுவதும் அந்த அணிக்கு கடைமைபட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். உள்ளூர் போட்டிகளில் மும்பை அணிக்காக விளையாடி வந்த ஜெய்ஸ்வால், தற்போது கோவா அணிக்கு மாறியுள்ளார்.

error: Content is protected !!